search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டப்பணிகள்"

    • மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
    • பல வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவில், நவ 9-

    தேசிய சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 9-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சட்ட தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது.

    இதனையொட்டி சட்டப் பணிகள் தொடங்கப்பட்ட ஆண்டு, அதன் சிறப்பம்சங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணை குழு தலைவருமான கார்த்திகேயன் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் தொடங்கி வைத்தார். பின்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய், குடும்ப நல நீதிபதி சுதாகர், முதன்மை குற்றவியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளருமான சாந்தினி, சார்பு நீதிபதிகள் அசன் முகமது, சிவசக்தி, சுந்தர கமலேஷ் மார்த்தாண்டம், தாயுமானவர், கீர்த்திகா, மணிமேகலை, நாகர்கோவில் வக்கீல் சங்கத் தலைவர் பால ஜனாதிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பிரச்சார வாகனம் குமரி மாவட்டத்தில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இந்தியா முழுவதும் வருடம் தோறும் 4 முறை மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் சமரசமாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு பல வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேம்பத்தூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதில் பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினார்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்பத்தூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த முகாமில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் (சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர்கள் காளைஈஸ்வரன், கிரன்காளை ஆகியோர் சொத்துஉரிமைச்சட்டம், அடிப்படை உரிமைகள் பற்றி எடுத்துரைத்தனர். வேம்பத்தூர் ஊராட்சி தலைவர் சமயமுத்து வரவேற்று பேசினார். இதில் பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினார்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தெருநாடகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிவகங்கை பஸ் நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தெருநாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா தொடங்கி வைத்தார். 

    நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பக்தவச்சலு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/ சார்புநீதிபதி பரமேஸ்வரி. நேரு இளைஞர்மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பிரவீன்குமார், வழக்கறிஞர் சங்கத்தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் நேரு இளைஞர் மையத்தின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

    மாவட்டகுழந்தை பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக அலுவலகம், சைல்டுலைன் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் சட்டம் பணி ஆணைக்குழு பணியாளர்கள் சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    ×