search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு சட்டப்பணிகள் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்
    X

    தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு சட்டப்பணிகள் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

    • மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
    • பல வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவில், நவ 9-

    தேசிய சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 9-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சட்ட தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது.

    இதனையொட்டி சட்டப் பணிகள் தொடங்கப்பட்ட ஆண்டு, அதன் சிறப்பம்சங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணை குழு தலைவருமான கார்த்திகேயன் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் தொடங்கி வைத்தார். பின்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய், குடும்ப நல நீதிபதி சுதாகர், முதன்மை குற்றவியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளருமான சாந்தினி, சார்பு நீதிபதிகள் அசன் முகமது, சிவசக்தி, சுந்தர கமலேஷ் மார்த்தாண்டம், தாயுமானவர், கீர்த்திகா, மணிமேகலை, நாகர்கோவில் வக்கீல் சங்கத் தலைவர் பால ஜனாதிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பிரச்சார வாகனம் குமரி மாவட்டத்தில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இந்தியா முழுவதும் வருடம் தோறும் 4 முறை மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் சமரசமாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு பல வழக்குகள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×