சிறுதானிய பயன்பாடு விழிப்புணர்வு முகாம்

மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் சிறுதானியத்தின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்.
விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்.
Published on

வள்ளியூர்:

வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனத் தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் கலந்து கொண்டு சிறுதானிய வகைகள் பற்றியும், அவற்றின் நன்மைகள் குறித்தும் மாணவிகளோடு பகிர்ந்தனர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் சிறுதானியத்தின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி மாணவிகள் சிறுதானியங்களில் பலவகையான உணவுகள் தயாரித்து அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கி கூறினர். மேலும், சிறுதானிய வகைகளைக் கொண்டு ரங்கோலி அமைத்தும் மகிழ்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com