என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
- காய்ச்சலுடன் வந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
முன்னாள் தலைவர் கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், சித்தா டாக்டர் ஹேமலதா, சுகாதார ஆய்வாளர் வேலாயுதம் உள்ளிட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் காய்ச்சல் வந்த நபர்கள் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் தெரிவித்து சிகிச்சை பெற ஆலோசனை வழங்கினர்.
மேலும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு காய்ச்சல், ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.






