என் மலர்
உள்ளூர் செய்திகள்

காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
- துண்டு பிரசுரங்கள் வினியோகம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தில் நேற்று தனியார் பள்ளியில் சுகாதார துறை சார்பில் திருத்தியமைக்கப்பட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் அசோக் ஆலோசனைப்படி, காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுது.
இந்த முகாமிற்கு கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நரேந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் வேலாயுதம், ராஜேஷ், உதவி தலைமையாசிரியர் ரவி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட காசநோய் நலக்கல்வியாளர் சேஷாத்திரி கலந்து கொண்டு பேசுகையில், "காசநோயின் அறிகுறிகள், அதற்கான பாதுகாப்பு, சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படுகிறது. மேலும் தமிழகம் காசநோய் இல்லாத மாநிலமாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும் மாணவிகளுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில் சிசிச்சை மேற்பார்வையாளர் தினேஷ், களப்பணியாளர் மோகன்பாபு, ஆசிரியர்கள் சிவகுமார், இந்துமதி, சரண்யா, அனுராதா, பொற்செல்வி மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.






