என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
    X

    ஏற்காடு மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு தொழுநோய் அறிகுறி உள்ளதா என சோதித்தபோது எடுத்த படம்.

    தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

    • தனியார் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதை எவ்வாறு தடுக்க முடியும் என்று விளக்கி கூறப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இந்த முகாமை ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமையில், ஏற்காடு வட்டார மருத்துவம்மல்லா மேற்பார்வையாளர் மாதேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் புருஷோத்தமன் ஆகியோர் நடத்தினர்.

    முகாமில் தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதை எவ்வாறு தடுக்க முடியும் என்று விளக்கி கூறப்பட்டது. மேலும் உடலில் ஏற்படும் நிறமாற்றம், சிவந்த வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், தோலில் எண்ணெய் பூசியது போன்ற மினுமினுப்பு, காது மடல்கள் தடித்திருந்தல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

    பின்னர் இது குறித்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மலை கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, நோய் அறிகுறிகள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.

    Next Story
    ×