search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attacking"

    செந்துறை அருகே ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ். மாத்தூர் 108 ஆம்புலன்ஸ்க்கு உஞ்சினி கிராமத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்சுடன் உஞ்சினிக்கு சென்றனர். அங்கே சென்ற ஊழியர்கள் அவசர அழைப்பு விடுத்தவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

    இதில் ஓட்டுநர் சரவணன் காயமடைந்தார். இது குறித்து சரவணன் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியது உஞ்சினி கிழக்கு தெருவை சேர்ந்த முத்து மகன் சுரேஷ் அண்ணாதுரை மகன்கள் விஜய் மற்றும் அருண் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சுரேஷ் மற்றும் விஜயை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

    தலைமறைவாக உள்ள அருணை இரும்புலிக்குறிச்சி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சங்கரன்கோவில் அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள வாடிக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து மனைவி பழனித்தாய் (வயது 40). காளிமுத்து கூலி வேலை செய்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (30). காளிமுத்துவும், கோட்டைச்சாமியும் சேர்ந்து அடிக்கடி குடிக்க சென்று வருவது வழக்கம். 

    இந்நிலையில் காளிமுத்து சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பழனித்தாய் சம்பவத்தன்று கோட்டைச்சாமியிடம் ஏன் இப்படி எனது கணவரை குடிக்க அழைத்து செல்கிறீர்கள்? என கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கோட்டைச்சாமி, பழனித்தாயை அவதூறாக பேசி கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டு சென்று விட்டாராம். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோட்டைச்சாமியை கைது செய்தனர்.
    அம்பை அருகே மாடு மேய்க்கும் தகராறில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    நெல்லை:

    அம்பை அருகே உள்ள வேலாயுதம் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்கரம்மாள் (வயது43). இவர் தினசரி வயல்காட்டிற்கு சென்று மாடுகளை மேய்த்து வந்தார். இவரது மாடுகளை அந்த பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (55) என்பவர் வளர்த்து வந்த மாடுகள் முட்டியது. 

    இதனால் சங்கரம்மாள் ராமலிங்கத்தை வேறு இடத்தில் மாடு மேய்க்கும்படி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ராமலிங்கம் உருட்டு கட்டையால் சரமாரி சங்கரம்மாளை அடித்து தாக்கினார். இதில் சங்கரம்மாள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து அம்பை போலீசார் பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.
    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கி சித்ரவதை செய்த தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே புவனேஸ்வரியின் நடத்தையில் வெங்கடேசன் சந்தேகம் அடைந்தார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு புவனேஸ்வரியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

    அதுபோல நேற்று மதியம் வெங்கடேசன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தேங்காய் திருவியால் மனைவியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

    வடமதுரையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே வேல்வார்கோட்டை புதுகளரம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வடமதுரை ரெயில் நிலைய சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இங்கு செங்குளத்துப் பட்டியை சேர்ந்த மகாலிங்கம், போஜனம்பட்டியை சேர்ந்த முருகபெருமாள் ஆகியோர் உணவு சாப்பிட வந்துள்ளனர். விரும்பிய பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

    பின்னர் சாப்பிட்டதற்கான பில் தொகையை செந்தில்குமார் அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் 2 பேரும் பணத்தை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் மற்றும் முருகபெருமாள் செந்தில்குமாரை கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த செந்தில்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வங்கியில் கடன் வாங்கிய தகராறில் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சுமதி. இவர் பாப்ஸ்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் தேவி. தேவிக்கும் லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (31) என்பவருக்கு திருமணம் நடந்தது.

    பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் கதவு செய்யும் கடை வைத்துள்ளார். கடைக்கு ஒருவங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இதற்கு அவரது மாமியார் சுமதி சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார். ஒரு சில மாதங்களில் கடையையும் மூடிவிட்டு, வாங்கிய கடனையும் கட்டாமல் பன்னீர் செல்வம் நிறுத்தி விட்டார்.

    மேலும் பணம் கட்டாததாலும், கடையை மூடிவிட்டதாலும் வங்கியில் இருந்து மாமியார் சுமதியிடம் சென்று பணம் கட்டுமாறு கூறினர். அதற்கு மாமியார், மருமகன் பன்னீர் செல்வத்தின் செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் மாமியார் சுமதி வேலைபார்க்கும் பாப்ஸ்கோ கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் பன்னீர் செல்வம் மாமியார் சுமதியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இதுகுறித்து சுமதி லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில்பட்டி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிங்காரவடிவேல் மனைவி பகவதி(வயது 46). இவரது வீட்டருகே குடியிருந்து வரும் கட்டிடத்தொழிலாளி கணேசன். இவரது மனைவி மாரிலட்சுமி. 

    இந்நிலையில், பகவதி தன்னை தவறான வழிக்கு அழைப்பதாக மாரிலட்சுமி அவரது கணவர் கணேசனிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 19-ந் தேதி பகவதி வீட்டிற்கு சென்ற கணேசன் தன் மனைவியை தவறான வழிக்கு அழைத்த பகவதியை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பகவதி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கட்டிடத் தொழிலாளி கணேசனை கைது செய்தனர்.
    புதுக்கோட்டை அருகே கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்றிரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அப்பகுதியை சேர்ந்த முத்து (வயது 35), ரமேஷ்(23), துரை (22), பழனி(23)ஆகியோர் குடிபோதையில் ஆடிப்பாடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெகதாப்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலையரசன் , அமைதியாக இருந்து நிகழ்ச்சியை பார்க்குமாறு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4பேரும், மலையரசனை தாக்கியதோடு, அங்கு நின்ற போலீஸ் வாகனத்தின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதுபற்றி மலையரசன் ஜெகதாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார். 
    ×