என் மலர்
நீங்கள் தேடியது "Attacking"
- புதுப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகு தமிழரசி. இவருக்கும் செல்வகுமார் என்பவருக்கும் கடந்த 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.
செல்வகுமாருக்கு ஏற்கனவே தேன்மொழி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் தேன்மொழி மற்றும் அவரது தந்தை சேகர், தாய் மல்லிகா உள்ளிட்ட 6 பேர் அழகு தமிழரசியுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது செல்வகுமாரும் அவர்களுக்கு ஆதரவாக பேசி தனது மனைவி அழகு தமிழரசியை அடித்து அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு மேலும் 10 பவுன் நகை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
நகை வாங்கி வராவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அழகு தமிழரசி அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதே பகுதியை சேர்ந்த சண்முக வேல் என்ற ரெங்கன் (27) என்பவர் முத்துராஜை வழி மறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
- இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல் முத்துராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளை யம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துராஜ்
( வயது20).
இவர் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சண்முக வேல் என்ற ரெங்கன் (27) என்பவர் முத்துராஜை வழி மறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு முத்துராஜ் மறுத்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்
டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல் முத்துராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் முத்துராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
- மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக அப்துல் சுகூர் ( வயது 54) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு வந்த சில நபர்கள் அவரிடம் சிகரெட் கேட்டனர்.
மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கும்பல் அப்துல் சுகூரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பிஸ்கட், பலகாரங்கள் வைத்திருந்த ஜாடிகளை அவர்கள் எடுத்து உடைத்து கடையை சூறையாடினர். இது குறித்து அப்துல் சுகூர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 22), சதீஷ்குமார் (21), ரஞ்சித் குமார் (25) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் ரஞ்சித் குமார் பிரபல ரவுடி ஆவார்.
இவர் கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக ஊர் பொதுமக்கள் இடம் கேட்டனர். அதற்கு பெருமாள் சம்மதம் தெரிவித்து 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார். கோவிலுக்கு மேலும் இடம் தேவை என்று ஊர்பொதுமக்கள் கேட்டதின் பேரில் மீண்டும் 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தானமாக கொடுத்த 4 சென்ட் இடத்தை விட கூடுதலாக இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெருமாள் தட்டி கேட்டார் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த சரவணன், பாலசுப் பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேர் பெருமாளை சரமாறியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து பெருமாளின் மகன் அண்ணாமலை அமெரிக்காவில் இருந்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சரவணன், பாலசுப்பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி புதுநகரை சேர்ந்தவர் மீனாட்சி. (வயது 50). இவருக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே மதனகோபாலபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராதாகிருஷ்ணனுக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். மீனாட்சி தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ராதாகிருஷ்ணன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண் மூலம் அருணகிரி என்ற மகன் உள்ளார்.
விவாகரத்து பெற்றாலும் ராதாகிருஷ்ணன் அடிக்கடி மீனாட்சியிடம் பணம் கேட்டு மிரட்டி வாங்கி செல்வார். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் லாரியை பழுது பார்ப்பதற்காக மீனாட்சியிடம் ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால், மீனாட்சி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் தனது 2-வது மனைவி மகன் அருணகிரியுடன் சேர்ந்து மீனாட்சியை தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த மீனாட்சி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து ராதாகிருஷ்ணன் மற்றும் அருணகிரி ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே புவனேஸ்வரியின் நடத்தையில் வெங்கடேசன் சந்தேகம் அடைந்தார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு புவனேஸ்வரியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.
அதுபோல நேற்று மதியம் வெங்கடேசன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தேங்காய் திருவியால் மனைவியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே வேல்வார்கோட்டை புதுகளரம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வடமதுரை ரெயில் நிலைய சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இங்கு செங்குளத்துப் பட்டியை சேர்ந்த மகாலிங்கம், போஜனம்பட்டியை சேர்ந்த முருகபெருமாள் ஆகியோர் உணவு சாப்பிட வந்துள்ளனர். விரும்பிய பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் சாப்பிட்டதற்கான பில் தொகையை செந்தில்குமார் அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் 2 பேரும் பணத்தை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் மற்றும் முருகபெருமாள் செந்தில்குமாரை கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த செந்தில்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






