என் மலர்
நீங்கள் தேடியது "road contractor"
லாலாப்பேட்டையில் பணம் கேட்டு மிரட்டி சாலை ஒப்பந்தகாரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
லாலாபேட்டை:
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அடுத்த பிள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). சாலை ஒப்பந்த பணி செய்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சிலம்பு செல்வன் (57).
இவர் கடந்த 23-ம் தேதி கொம்பாடிபட்டி சாலையில் பணி செய்து கொண்டு இருந்த செல்வராஜிடம் தனக்கும் கமிசன் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். அதற்குசெல்வராஜ் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பு செல்வன் செல்வராஜை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குபதிவு செய்து சிலம்பு செல்வனை கைது செய்தனர்.






