என் மலர்
நீங்கள் தேடியது "listening"
- சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
- சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை மற்றும் இருக்கூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான கல்குவாரி சுரங்கத்தின் அங்கீகாரம் காலவதியானதை தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலமாக ஒப்பந்தம் மேற்கொண்டு சுரங்கத்திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதன்படி, மாநில சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆணையத்தால் குறிப்பு விதிமுறை கடிதம் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மல்டிகலர் கிரானைட் குவாரி சுரங்கத்தின் பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பரமத்தியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கலையரசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சித்ரா, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்தனர். அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
- மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக அப்துல் சுகூர் ( வயது 54) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு வந்த சில நபர்கள் அவரிடம் சிகரெட் கேட்டனர்.
மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கும்பல் அப்துல் சுகூரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பிஸ்கட், பலகாரங்கள் வைத்திருந்த ஜாடிகளை அவர்கள் எடுத்து உடைத்து கடையை சூறையாடினர். இது குறித்து அப்துல் சுகூர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 22), சதீஷ்குமார் (21), ரஞ்சித் குமார் (25) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் ரஞ்சித் குமார் பிரபல ரவுடி ஆவார்.
இவர் கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது.
- ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது. இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேலம் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் கோபா லகிருஷ்ணன் மற்றும் சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பிரசாத், சங்ககிரி ஆர்டிஓ சௌமியா, தாசில்தார் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கருமாபுரத்தானூர் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் மற்றும் வீராச்சி பாளையம் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க திட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதில், ஆலையின் துணைத் தலைவர் (தயாரிப்பு) வீரபாகு, மூத்தபொதுமேலாளர் (சுரங்கம் மற்றும் சுற்றுச்சூ ழல்) பழனிகுமரேசன், ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகா வல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.