search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல் குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம்
    X

    பரமத்தியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கல் குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம்

    • சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
    • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை மற்றும் இருக்கூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான கல்குவாரி சுரங்கத்தின் அங்கீகாரம் காலவதியானதை தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலமாக ஒப்பந்தம் மேற்கொண்டு சுரங்கத்திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

    அதன்படி, மாநில சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆணையத்தால் குறிப்பு விதிமுறை கடிதம் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மல்டிகலர் கிரானைட் குவாரி சுரங்கத்தின் பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பரமத்தியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.

    இதில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கலையரசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சித்ரா, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்தனர். அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×