புதுப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

புதுப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகு தமிழரசி. இவருக்கும் செல்வகுமார் என்பவருக்கும் கடந்த 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.

செல்வகுமாருக்கு ஏற்கனவே தேன்மொழி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் தேன்மொழி மற்றும் அவரது தந்தை சேகர், தாய் மல்லிகா உள்ளிட்ட 6 பேர் அழகு தமிழரசியுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது செல்வகுமாரும் அவர்களுக்கு ஆதரவாக பேசி தனது மனைவி அழகு தமிழரசியை அடித்து அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு மேலும் 10 பவுன் நகை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

நகை வாங்கி வராவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அழகு தமிழரசி அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com