search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Addiction"

    • அதிராம்பட்டினம் ரெயில்வே கேட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாகனம் வருவதைக் கண்டுவாகன த்தை போலீசார்பின்தொடர்ந்து வந்தனர்.
    • போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்தனர்.

    மதுக்கூர்:

    சென்னையில் இருந்து கஞ்சா போன்றபோதைப் பொருள் திருத்துறைப்பூண்டிக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அதிராம்பட்டினம் நகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அதிராம்ப ட்டினம் ரெயில்வே கேட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாகனம் வருவதைக் கண்டுவாகன த்தை போலீசார்பின் தொடர்ந்து வந்தனர் அப்போது திடீரென போலீசார்வாக னத்தை மடக்கி சோதனை யிட்டனர்.

    இதில் அதிராம்ப ட்டினம் மேலத் தெரு தமிழ்அன்சாரி (35), கடற்கரை தெரு இன்செத்துல்லா (30), திருத்துறைப்பூண்டி முகமது தாவித் (27) ஆகியோர் கஞ்சா போன்ற போதை பொருட்கள் 3 கிலோ கடத்தி வந்தது தெரிய வந்தது.

    ‌ ‌இதனையடுத்து போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும் பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்றைய காலகட்டத்தில் பள்ளி குழந்தைகள் போதை பழக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
    • போதை பொருட்களை சுத்தமாக ஒழிக்கவும், மாணவர்கள் செல்போன்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் அவல நிலைமைகளையும் எடுத்துக்கூறி விவரித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளக்குடி லயன்ஸ் சங்கமும், நம்பிக்கை தொண்டு நிறுவனமும் இணைந்து பள்ளி குழந்தைகளுக்கான போதை பொருள் விழிப்புணர்வு தடுப்பு நிகழ்ச்சியை நடத்தியது. தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

    லயன்ஸ் சங்க தலைவர் செல்வகுமார் மற்றும் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் கழனியப்பன் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் பள்ளி குழந்தைகள் போதை பழக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்.

    வழக்கறிஞர் அரசுதாயுமாணவன் பேசுகையில் போதை பொருட்களை சுத்தமாக ஒழிக்கவும், மாணவர்கள் மொபைல் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் அவல நிலைமைகளையும், அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் பிறகு அவர்கள் பெற்றோருடன் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் தொடர்ந்து அலையும் நிலைமையும், சட்டத்தில் மாட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பதையும் எடுத்துக் கூறி விவரித்தார்.

    சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சுமிதா பேசுகையில் மாணவர்களுக்கான ஹெல்ப் லைன் நம்பர் 1098 மற்றும் 181 மற்றும் 1447 உதவும் விதம் ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரி பேசுகையில் போதை பழக்கத்தினால் ஏற்படும் உடல்நல, மனநல குறைவு குடும்பத்தின் பாதிப்புகளை கூறினார்.

    நம்பிக்கை மனநல காப்பக திட்ட மேலாளர் விஜயா பேசுகையில் மாணவர்கள் பாதிக்கப்படுகையில் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சகோதர சகோதரிகளும் சேர்ந்து பாதிக்கப்படுகி்றார்கள்.

    இதற்கு ஒரே தீர்வு நமது குடும்பத்தில் போதைப் பொருளுக்கு யாருமே அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் என்றார்.

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க பொருளாளர் துரை, ஒருங்கிணைந்த சேவை மைய மூத்த ஆற்றுப்படுத்துனர் மெர்லின், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் கமலா, வழக்கறிஞர் இன்குலாப், ஆசிரிய ஆசிரியைகள், மனநல காப்பக பணியாளர்கள் சரவணன், சுபா, கௌசல்யா, ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி மாணவிகள் அனைவரும் நாங்கள் அனைவரும் இதனை கடைப்பிடிப்போம்.

    எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கண்டிப்பாக எடுத்துச் சொல்லுவோம் என்று கூறினர்.

    • போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    இன்ஸ்பெக்டர் சரவணன் உறுதி மொழியினை வாசிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் பேசுகையில், போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களது தகவல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
    • முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா, முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. போதைப்பொருள் என்பது வாழ்க்கையை சீரளிக்கும், உடலை அழிக்கக்கூடியது, எதிர்காலத்தை வீணடிக்கும், இந்த போதைப்பழக்கத்தில் உள்ளவர்களை நாம் அனைவரும் ஒன்றிைணந்து திருத்த வேண்டும். குறிப்பாக நீங்கள் முன்னோடியாக இருந்து போதைப் பழக்கத்தில் உள்ளவர்களை அதிலிருந்து விடுபட சொல்லித்தர வேண்டும்.

    அப்படி யாராவது இருந்தால் நல்வழியில் கொண்டு வர முன்வர வேண்டும். உங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக கொண்டுவர நீங்கள் பாடுபட வேண்டும். முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழியை ஒரு நாள், ஒரு வாரம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

    உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா, தலைமை ஆசிரியை லீமா ரோஸ் மற்றும் 1300-க்கும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைைமயில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
    • போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.

    திருவாரூர்:

    முதலமைச்சரால் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமானது காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைைமயில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்தாவது:-

    முதலமைச்சர் ஆணைக்–கிணங்க போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிெமாழியானது எடுத்துக்கொள்ளப்பட்டது.

    போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.

    குடும்பத்தினர், நண்ப ர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். அேதபோன்று, போதைப் பழக்கத்திற்கு பங்களிப்பும் மிக முக்கியமானது.

    போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவ ற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள ப்படும் என தெரிவித்தார்.

    இதில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மண்டல இணை இயக்குநர் (உயர் கல்வித்துறை) எழிலன், உதவி ஆணையர் (கலால்) அழகிரிசாமி,

    திரு.வி.க. அரசு கலை கல்லூரி முதல்வர் கீதா, ஆர்.டி.ஓ. சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகர்மன்ற குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளை போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றார்.
    • பேசும்போது, பான்மசாலா, கஞ்சா, புகையிலை பயன்பாட்டால் 28 வகையான ரசாயனங்கள் உடலில் சேர்வதால் கேன்சர் ஏற்படும், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசு போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமலிருக்க, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆலோசனையின் படி திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு பிரச்சார கருத்தரங்கம் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமையிலும், முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், முன்னிலையிலும் நடைப்பெற்றது.

    நிகழச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழா பேருரையாற்றினார். அப்போது குழந்தைகளை போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றினார்.

    உணவு பாதுகாப்பு அலுவலர் முதலியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி ஆகியோர் போதையின் தீமை குறித்து கருத்துரையாற்றினார்கள்.

    அவர்கள் பேசும்போது, பான்மசாலா, கஞ்சா, புகையிலை பயன்பாட்டால் 28 வகையான ரசாயனங்கள் உடலில் சேர்வதால் கேன்சர் ஏற்படும், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும். போதையினால் மனநல பாதிப்பு, பாலியல் சீண்டல்கள் சமூக சீர்கேடுகள் ஏற்படும். எனவே நாம் ஒன்றிணைந்து போதை யில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றனர்.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், , நகர்மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், போதை தடுப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    முன்னதாக நகராட்சி மேலாளர் சிற்றரசு வரவேற்றார், நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார், நிகழ்ச்சியில் அங்கன்வாடி, மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கலந்துக்கொண்டனர்.

    • ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
    • கல்லூரி தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமையில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் சுமார் 280 மாணவ -மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்லூரி தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமையில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் சுமார் 280 மாணவ -மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    போதைப் பழக்கத்தின் தீய விளைவுகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கணேஷ்குமார் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • தமிழ்நாட்டில்போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.
    • போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.அந்த வகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.

    மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பங்கேற்று உரையாற்றினார்.

    போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்ததோடு, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.இதல் நாகப்ப ட்டினம் நகர்மன்றதலைவர் இரா.மாரிமுத்துஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
    • கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கடலுார் மாவட்டத்தில் கஞ்சா , குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்கும் பொருட்டு உட்கோட்ட காவல் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுரையின்பேரில் கடலூர் மஞ்சக்குப்பம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி, சங்கொலிக்குப்பம் கிராமம் ,சான்றோர்பாளையம், ராசாபேட்டை சுனாமி நகர் , சிதம்பரம் பெரியகுப்பம் கிராமம், கிள்ளை மீனவர் காலனி, விருத்தாச்சலம் புதூர், நெய்வேலி சேப்ளா நத்தம் கிராமம், பண்ருட்டி புறங்கனி கிராமம் , காட்டுகூடலூர் , சேத்தியாதோப்பு செல்லிவிழி கிராமம் , இனமங்கலம் , காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் , திட்டக்குடி பேருந்து நிறுத்தம், நல்லூர் , சிறுபாக்கம் ஆண்டவர் கோவில் ஆகிய போலீஸ் நிலையத்தில் போலீசார்கள் போதை தடு ப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்கள்.கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு , பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் தடைப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
    • உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இதற்கிடையே கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர்தர ரக போதை பொருளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து போதை தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளாவை சேர்ந்த வாலிபர்களும் கல்லூரி மாணவர்களும் சீரகபாடியில் தங்கி இருந்து மொத்தம் பேட்டமையின் என்ற உயர்ரக போதை பொருளை விற்பனை செய்வது தெரிய வந்தது . நேற்று அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலன் கே பிலிப் (23), பி.இ. 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவர் மற்றும் பி.இ. இறுதி ஆண்டு படித்து வரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த சித்தாரப்பட்டியை சேர்ந்த மாணவர் உள்பட 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .

    அப்போது பெங்களூரில் இருந்து உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. கண்ணாடி இழை போன்ற ஒரு கிராம போதை பொருளை கசக்கி பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை போதை இருக்கும் என கூறப்படுகிறது .

    அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்பிலான போதை பொருள் ,நவீன எடை எந்திரம் மற்றும் போதைப்பொருள் டெஸ்டிங் மெஷின் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக இந்த மாணவர்கள் அங்கே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது . தொடர்ந்து 3 பேரிட்மௌம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 3 பேரின் பிண்ணணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? இவர்கள் சேலம் தவிர வேறு எங்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தன்னுடன் வேலை பார்க்கும் தனது உறவினரான சுரேஷ் என்பவரை அழைத்துக்கொண்டு கடந்த 25 -ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.
    • பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் மரக்கட்டையால் சுரேசை தாக்கினார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தாங்காடுவெட்டி க்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் மாணிக்கம். இவர் திருப்பூரி ல்பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தன்னுடன்வேலை பார்க்கும் தனது உறவினரான நாகையை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவரை அழைத்துக்கொண்டு கடந்த 25 -ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.

    இந்நிலையி இருவருக்கும் இடையே குடி போதையில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டது. இதில்மாணிக்கம் ஆத்திரம் அடைந்து மரக்க ட்டையால் சுரேசை தாக்கி னார். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதையடுத்து மாணிக்கம் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து பட்டுக்கோ ட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
    • துரும்பூர், பாதிரிமேடு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் சர்வசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

    அதுசமயம் முதல் நாள் காலையில் பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் செடில் திருவிழா நடைபெற்றது.

    இரண்டாவதுநாள் தேர்த்திருவிழா நடை பெற்றது.துரும்பூர், பாதிரிமேடு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    விழாவில் துரும்பூர், பாதிரமேடு கிராமவாசிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நாட்டாமைகள், கிராம வாசிகள் மற்றும்விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

    ×