search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "acceptance"

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
    • இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.

    இவர் இன்று காலை சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றியவர். தற்போது சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவருக்கு சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செல்வம், கண்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், சின்னசாமி, தனிப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டா டப்படும் என்று அறிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய, அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவ சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    இன்ஸ்பெக்டர் சரவணன் உறுதி மொழியினை வாசிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் பேசுகையில், போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களது தகவல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமை வகித்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குறித்தும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, துணைத்தலைவர் ராஜா,வேலூர் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சுந்தரம், கரூர் அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன், வேலூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், அரசு மகளிர் கல்வி நிறுவன மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×