search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Superintendent"

  • மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.
  • அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி பசும்பொன் வருகை தருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  இக்கூட்டத்தில் முதல் அமைச்சர் தனிப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகை யில்:-

  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்திற்கு வந்து செல்லும் வரை இருவழியி லும் பணி மேற்கொள்ளும் அலுவலர்கள் திட்டமிட்ட படி கவனமுடன் செயல்பட வேண்டும். மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் முன் கூட்டியே தலைமை அலு வலர்களுக்கு தகவல் தெரி வித்து, ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். முதல் அமைச்சர் நினைவிடத்திற்கு வருகை தந்து செல்லும் வரை திட்டமிட்டபடி பணி களை மேற்கொண்டு எந்த இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

  இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

  • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
  • இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.

  சேலம்:

  சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சிவகுமார் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய அருண் கபிலன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதல் செய்யப்பட்டார்.

  இவர் இன்று காலை சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

  2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றியவர். தற்போது சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

  இவருக்கு சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செல்வம், கண்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், சின்னசாமி, தனிப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

  • 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
  • சமூக விரோத செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கள்ளக்குறிச்சி:

  தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலை யத்தில் உள்ள பொது நாட்குறிப்புகள், பாரா மாற்றும் புத்தகம், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்கு களின் கோப்பு உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.

  தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை புலன் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். பிடி வாரணட் நிலுவையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பொது மக்கள் அளிக்கும் புகாருக்கு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலைய சரகத் திற்கு உட்பட்ட பகுதியில் மது, கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றி லும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திரு மணங்கள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  இதே போல் சாலை பாது காப்பு விதிமுறைகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட வற்றை மேற் கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவு றுத்தி னார். முன்ன தாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம், நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப் பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்வதற்காக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

  நெல்லை:

  தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவான போக்சோவில் பதிவாகும் வழக்குகளில் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

  புதிய நடைமுறை

  அதாவது அந்த வழக்கு குறித்த விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலருக்கு உடன் இருந்து உதவ குழந்தைகள் நலக் குழுமத்திடம் இருந்து ஒரு நபரை வேண்டி பெறுதல், அரசின் இடைக்கால நிவாரணம் பெறுதல், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

  அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்வதற்காக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

  அதன்படி, புகார்தாரர்களின் மொபைல் போனுக்கு வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி மூலம் விசாரணை விபரத்தை அனுப்பும் முறையை நாட்டில் முதல் முறையாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  நெல்லையில் 4 பேர் குழு

  இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறுகையில், தென்மண்டல ஐ.ஜி. உத்தரவினை நெல்லை மாவட்டத்திலும் நடைமுறைபடுத்தி உள்ளோம். இதற்காக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்டப்டு உள்ளது. இந்த குழுவில் 4 பேர் செயல்படுவார்கள்.

  அவர்கள் ஹலோ போலீஸ் வாட்ஸ் அப் எண் மூலமாக போக்சோ வழக்கின் விபரங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரிவிப்பார்கள். மேலும் அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்து உரிய விளக்கம் அளிப்பார்கள். இதன் மூலம் போக்சோ குற்றவாளிகளுக்கு சீக்கிரம் தண்டனை கிடைக்கும் என்றார்.

  • மாவட்டத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக அங்கு தனியாக ஆயுதப்படை மைதானம் அமைக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
  • குற்றாலம் போலீஸ் நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆயுதப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  தென்காசி:

  ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உதயமானது. இதனை தொடர்ந்து அங்கு கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து துறை அலுவலகங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

  ஆயுதப்படை

  இந்நிலையில் மாவட்டத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக அங்கு தனியாக ஆயுதப்படை மைதானம் அமைக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

  இந்நிலையில் குற்றாலம் போலீஸ் நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆயுதப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர் ஆயுதப்படை வளாகத்தை ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அப்போது பணியின் போது விழிப்புடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று ஆயுதப்படை போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி அவர்களின் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

  புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமையில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 தலைமை காவலர்கள், 2 முதல் நிலை காவலர்கள், 2-ம் நிலை ஆண் காவலர்கள் 150 பேர், 60 இரண்டாம் நிலை பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 222 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • குரூப்-4 தேர்வு அறையில் கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் வலியுறுத்துகிறார்.
  • விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான, முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெ ட்டி தலைமையில் நடந்தது.

  இதில் கலெக்டர் பேசியதாவது:-

  விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 24-ந் தேதி குரூப்-4 தேர்வு, அதாவது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

  விருதுநகர் மாவட்டத்தில் 237 தேர்வு மையங்களில் 81 ஆயிரத்து 44 விண்ணப்பதாரர்கள்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 309 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 52 மொபைல் பார்ட்டியும் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்களும், 237 தேர்வு மையங்களுக்கும் 317 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

  தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

  தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள் சேதமடைந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ மட்டுமே வேறு விடைத்தாள் கொடுக்கப்பட வேண்டும்.

  நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கப்பட கூடாது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது.

  தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  ×