search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    222 போலீசாருடன் தென்காசி மாவட்டத்திற்கு தனி ஆயுதப்படை-போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
    X

    ஆயுதப்படையை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


    222 போலீசாருடன் தென்காசி மாவட்டத்திற்கு தனி ஆயுதப்படை-போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்

    • மாவட்டத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக அங்கு தனியாக ஆயுதப்படை மைதானம் அமைக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
    • குற்றாலம் போலீஸ் நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆயுதப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உதயமானது. இதனை தொடர்ந்து அங்கு கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து துறை அலுவலகங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    ஆயுதப்படை

    இந்நிலையில் மாவட்டத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக அங்கு தனியாக ஆயுதப்படை மைதானம் அமைக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் குற்றாலம் போலீஸ் நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆயுதப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர் ஆயுதப்படை வளாகத்தை ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அப்போது பணியின் போது விழிப்புடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று ஆயுதப்படை போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி அவர்களின் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமையில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 தலைமை காவலர்கள், 2 முதல் நிலை காவலர்கள், 2-ம் நிலை ஆண் காவலர்கள் 150 பேர், 60 இரண்டாம் நிலை பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 222 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×