search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Ram Nath Kovind"

    டெல்லியில் இன்று சிஆர்பிஎப் வீரர்களின் 54வது வீரர் தினத்தையொட்டி, விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார். #RamNathKovind #CRPFValourDay
    புது டெல்லி:

    மத்திய காவல் ஆயுதப்படை மற்றும் துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படை மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) ஆகும். இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டம் ஒழுங்கை பாதுகாத்து பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துகிறது.

    சமீப காலங்களில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கும், பொதுத் தேர்தல் பணிக்கும் இப்படை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பிரச்சனைக்குரிய பகுதிகளான ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 9ம் தேதி சிஆர்பிஎப் வீரர் தினமாக கொண்டாடப்படுகிறது.



    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பணியில் இருந்த வீரர்கள் பலியாகினர். இதையடுத்து 54வது ஆண்டு சிஆர்பிஎப் வீரர் தினமான இன்று, நாட்டிற்காக உயிரிழந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் தேசிய காவல் நினைவகத்தில் விழா நடத்தப்பட்டது.

    இந்த விழாவில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.  #RamNathKovind #CRPFValourDay

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் கமல், பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். #PadmaAwards #BangaruAdigalar
    புதுடெல்லி:

    இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.  பத்ம விபூஷண் 4 பேருக்கும், பத்ம பூஷண் 14 பேருக்கும், பத்ம ஸ்ரீ 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் முதல்கட்டமாக இன்று 56 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.



    தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி,  டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பங்காரு அடிகளார், சரத் கமல், டிரம்ஸ் சிவமணி ஆகியோர் இன்று ஜனாதிபதியிடம் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.

    இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி பங்கேற்றனர். #PadmaAwards #BangaruAdigalar
    சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், ராகுல் காந்தி ஆகியோர் நாளை பங்கேற்பதாக தெரியவந்துள்ளது. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    பெங்களூரு:
       
    மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்மபூஷன்’ பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்பட்ட சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி வயோதிகம்சார்ந்த பிரச்சனைகளால் தனது 111-வது வயதில் இன்று காலமானார். 

    அவரது மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல் மந்திரிகள் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கர்நாடக மாநிலத்துக்கு வந்திருந்தபோது துமக்கூருக்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமியை சந்தித்தது நினைவிருக்கலாம்.

    நாளை மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அவரது மறைவுக்கு கர்நாடக மாநில அரசின் சார்பில் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என முதல் மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், நாளை மாலை நடைபெறும்  ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பதாக தெரியவந்துள்ளது.

    இதை தொடர்ந்து, தும்கூருக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். அப்பகுதியில் பத்துக்கும் அதிகமான தற்காலிக ஹெலிப்பேடுகள் அமைக்கப்படுகின்றன. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    அரசுமுறை பயணமாக வியட்நாம் நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பழங்காலத்தை சேர்ந்த இந்து கோவிலை இன்று பார்வையிட்டார். #RamNathKovind #Hindutemplecomplex #RamNathKovindinVietnam
    ஹனோய்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

    நேற்று பிற்பகல் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘மை சன்’ கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.

    இந்த இடம் ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் வரலாற்று சிறப்புக்குரிய இடங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,

    மேலும், அங்குள்ள 2 ஆயிரம் ஆண்டுகால பழைமை வாய்ந்த அருங்காட்சியகத்தையும் ஜனாதிபதி சுற்றிப் பார்த்தார்.இந்த அருங்காட்சியத்தில் இந்து-புத்த சமயங்களை சேர்ந்த சாம் நாகரிகம் காலத்து சிற்பங்களையும் அவர் கண்டு ரசித்தார்.

    21-ம் தேதிவரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #RamNathKovind  #Hindutemplecomplex #RamNathKovindinVietnam
    ஆஸ்திரேலியா, வியட்நாம் நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டா நாங் விமான நிலையத்தில் இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. #PresidentRamNathKovind #RamNathKovindinVietnam
    ஹனோய்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம்  மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

    இந்நிலையில், இன்று பிற்பகல் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    21-ம் தேதிவரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர், ஆஸ்திரேலியா செல்லும் அவர் அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துவதுடன் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  #PresidentRamNathKovind #RamNathKovindinVietnam
    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். #Modi #ModicallsonPresident #ModiDiwaligreetings
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சீனா-இந்தியா எல்லைக்கோட்டுப் பகுதியான ஹர்சில் என்ற இடத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்நாட்டை பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்து கூறி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

    பின்னர் கேதார்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த மோடி, அங்கிருந்து டெல்லி திரும்பினார்.

    இன்றிரவு ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மலர்செண்டு அளித்து தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

    நாட்டு நிலவரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்திய மோடி, சமீபத்தில் ஜப்பான் சென்றபோது அந்நாட்டு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பாகவும் அவரிடம் தெரிவித்தார். #Modi #ModicallsonPresident #ModiDiwaligreetings
    மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். #TripleTalaq #PresidentKovind
    புதுடெல்லி:

    மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. 

    ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

    கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

    ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

    டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 
    8 நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ் இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades
    நிகோசியா:

    குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின் முதல் நாடாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இருநாட்டு உறவுகள் குறித்தும், இதர பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு அதிபர்கள் முன்னிலையில், பண மோசடியை தடுப்பது உள்ளிட்ட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதையடுத்து, 4-ம் தேதி வரை சைப்ரஸ் நாட்டில் இருக்கும் ஜனாதிபதி, அதன் பிறகு பகேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொள்கிறார். #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades
    மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை பொறுப்பை வழங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #ArunJaitley
    புதுடெல்லி:

    உடல்நலம் சரியானதையடுத்து மீண்டும் மத்திய நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி.

    மத்திய நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக சில மாதங்கள் ஓய்வெடுத்தார். எனவே, அருண் ஜெட்லி வசம் இருந்த நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை கூடுதல் பொறுப்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி உடல்நலம் தேறியதை அடுத்து,  நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை மீண்டும் அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.



    2000-ல் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அருண் ஜெட்லி, இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை பா.ஜ.க. தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ArunJaitley
    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். #IndependenceDay #RamNathKovind
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நாளை 72-வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.



    அதில், “ சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றுகிறார். முதலில் இந்தியிலும், அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு இரவு 8 மணியளவில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndependenceDay #RamNathKovind
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததையடுத்து, கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். #JKGovernorRule #KashmirGovernorRule
    ஜம்மு:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது.

    காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்துவிட்டது.



    புதிய அரசு அமையும் சூழ்நிலை இல்லாததால்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. #JKGovernorRule #KashmirGovernorRule #BJPDumpsPDP

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார். RamNathKovind #prayatbrahmatemple
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் வந்தடைந்தார். இதையடுத்து, இன்று ஹெலிகாப்டர் மூலம், அஜ்மீர் நகரில் உள்ள புஷ்கர் பகுதிக்கு சென்ற குடியரசுத்தலைவர், அங்குள்ள பிரசித்திப் பெற்ற பிரம்மா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    அதைத்தொடர்ந்து, இன்று அஜ்மீர் நகரில் உள்ள தர்காவுக்கும் அவர் சென்று வழிபாடு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathKovind #prayatbrahmatemple
    ×