search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைப்ரஸ் ஜனாதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு - 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன
    X

    சைப்ரஸ் ஜனாதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு - 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

    8 நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ் இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades
    நிகோசியா:

    குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின் முதல் நாடாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, இன்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இருநாட்டு உறவுகள் குறித்தும், இதர பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு அதிபர்கள் முன்னிலையில், பண மோசடியை தடுப்பது உள்ளிட்ட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதையடுத்து, 4-ம் தேதி வரை சைப்ரஸ் நாட்டில் இருக்கும் ஜனாதிபதி, அதன் பிறகு பகேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொள்கிறார். #PresidentRamNathKovind #Cyprus #PresidentNicosAnastasiades
    Next Story
    ×