என் மலர்
நீங்கள் தேடியது "Police"
- ஆலங்குளம் பகுதிகளில் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
- டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்கைக் குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
வருகிற 13, 14 மற்றும் 15-ந்தேதி ஆகிய 3 தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வாகனங்களை பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் வளாகத்தில் வருகிற 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான 5 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம்.
மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.3000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத் தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடி யாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
இத்தகவலை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சாம்சன் தெரிவித் துள்ளார்.
- வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கை விடுத்தனர்.
- வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய போலீசார் ரோந்து பணியாற்றினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கையை அடுத்து வேதாரண்யம் ஆறுகாட்டு துறை,கோடியக்கரை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர் மத்திய மாநில அரசுஉளவுத்துறை சீனா நாட்டை சேர்ந்த நான்கு போர் தமிழ் இளைஞர் படகை ஒட்டி வர அதில் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள.
அதனை கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்திருந்தது.
இதையொட்டி வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியை வேதாரண்யம் போலிசார், கடலோர காவல் குழுமபோலீசார் சுங்கத்துறையினர் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் என்ன விடிய விடிய கடற்கரை பகுதிகளிலும், மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
இச்சோதனையால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது
- சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது.
- ஆத்திரம் அடைந்த கார்த்திக் போலீசாரை அவதூறாக பேசி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த வைரமுத்து என்பவரது மகன் கார்த்திக் (23) என்பவர் ஆடிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் போலீசாரை அவதூறாக பேசி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், தப்பி ஓடிய கார்த்திகை தேடி வருகின்றனர்.
- ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்–துக்குமான இழப்பு.
- பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 -ம் ஆண்டில் மட்டும் 2,217 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 537 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தும், 2,327 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்–துக்குமான இழப்பு, இந்த இழப்பினால் அந்த குடும்பத்தின் பாது–காப்புக்கு உத்தரவாதம் இல்லை.
பொருளாதார சிக்கலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த இழப்பை வாகனம் ஓட்டும் போது 'ஹெல்மெட்' அணிவதன் மூலம் தவிர்க்கலாம். உங்களது பாதுகாப்புக்–காகவும், உங்கள் குடும்பத்தின் பாது–காப்புக்காகவும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது 'ஹெல்மெட்' அணிய வேண்டியது அவசியம்.
வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லாது, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். நாளை (வியாழக்கிழமை) முதல் ஏற்கனவே அமலில் உள்ள மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் 'ஹெல்மெட்' அணி–யாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் 'ஹெல்மெட்' டினை பயன்படுத்தி தங்கள் உயிரையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த மாதம் 29-ந் தேதி ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் பாலகுமரேசனை தாக்கியது.
- ஆறுமுகநேரியில் மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிரபல தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் பாலகுமரேசன். இவர் தனது அறக்கட்டளை மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 29-ந் தேதி ஒரு கும்பலால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார்.
பின்னர் மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை பெற்று அவர் தற்போது வீடு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் பாலகுமரேசன் தனது அறக்கட்டளை பணி யாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களது தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளை தத்து எடுத்து ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி செலவை ஏற்று சமூக பணியாற்றி வருகிறோம். மேலும் பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறோம்.
ஆறுமுகநேரி பகுதியில் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்னை நேரில் வந்து மிரட்டி சென்றதுடன், எனது மாட்டு தொழுவத்தையும் தீ வைத்து எரித்து விட்டனர்.
இதுகுறித்து நான் கொடுத்த புகாரின் பெயரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வந்து எனது ஓட்டலுக்கே வந்து என்னை மிரட்டி சென்றார். நான் உடனடியாக ஆறுமுக நேரி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்து பாது காப்பு கேட்டேன். ஆனால் போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி ஒரு கும்பல் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பி உள்ளேன்.
தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதால் போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். துப்பாக்கி வைப்பதற்கு லைசன்ஸ் வழங்க வேண்டும். என் மீது திட்டமிட்டே கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- சம்பவத்தன்று சிவா மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 3 வட மாநில தொழிலாளர்கள் வேலை முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியே வந்தனர்.
- அவர்களிடமிருந்து ஆதார் கார்டு மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
பேட்டையை சேர்ந்தவர் சிவா. இவர் சத்யா நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
சம்பவத்தன்று சிவா மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 3 வட மாநில தொழிலாளர்கள் வேலை முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியே வந்தனர்.
அப்போது அவர்களை வழிமறித்து பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த நாகு என்ற நாகராஜ் (வயது 26), பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முத்து என்ற முத்தார் (22) மற்றும் சுடலை முத்து (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளை காட்டி மிரட்டி சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புடைய 4 செல்போன்கள் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பேட்டை இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் நாகராஜ் உட்பட 3 பேரையும் ஒருமணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஆதார் கார்டு மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
நெல்லை":
டவுன் ரதவீதிகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இதுதவிர மாநகர பகுதி முழுவதும் ஒலிப்பெருக்கிகள் கட்டப்பட்டு அதன்மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை வாசகங்கள் ஒலிக்கப்பட்டு கொண்டிருந்தன. மாநகரில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.
வண்ணார்பேட்டை, சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு, சமாதானபுரம், ஐகிரவுண்டு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்தபடி ஓட்டிய இளைஞர்களை பிடித்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
- 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நாகை மீனவர்களுக்கு தகவல் கிடைத்து.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட மீனவர்கள் மீன்வளத்தை பெரிதும் பாதிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நாகை துறைமுகத்தில் நடைபெற்ற 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் நடுக்கடலில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நாகை மீனவர்களுக்கு தகவல் கிடைத்து.
அதனை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் திரண்டு அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் நாகை முதல் கோடியக்கரை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி மாநில மீனவர்களை சிறைபிடிப்பதாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து நடுக்கடலுக்கு செல்ல தயாராக இருக்கவேண்டுமென துறைமுக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.
காரைக்கால் மீனவர்களின் விசைப்படகுகளை, நாகை மீனவர்கள் சிறைபிடிக்க தயாராகி வருவதால், அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நாகை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.
- மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வசதியாக திருப்பூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார்.காவலர்கள் பணியில் சிறந்து விளங்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், நாள் முழுவதும் சுறு, சுறுப்பாக இயங்கவும் தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
- முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
- ‘பைக்’ ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என துணை கமிஷனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அபராதம்
அவ்வழியாக வரும் வாகனங்களில் அரசு விதிமுறைகள்படி நம்பர் பிளேட்டுகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா?, அரசு விதிமுறைகள் படி வாகனங்கள் பயன்படுத்தப் படுகிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் நம்பரை எழுதாமல் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
இதேபோல் ஏர்- ஹாரன் உள்ளிட்டவைகள் பயன்படுத்திய வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களாக இதே போல் நடைபெற்று வரும் வாகன தணிக்கையில் நம்பர் பிளேட் முறையாக வைக்கப்படாத 250 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
துணை கமிஷனர் எச்சரிக்கை
இந்த நிலையில் புத்தாண்டு தொடர்பாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை மாநகர் பகுதிகளில் புத்தாண்டு தினத்தை ஒட்டி 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழா காலங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு அதி கரிக்கப்படும். புத்தாண்டு அன்று 'பைக்' ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அரசு பள்ளி ஆசிரியர் முருகையா உள்பட 7 பேரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
- ஒரே கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கிராமங்களில் நேற்று ஒரே நாளில் 7 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
ரூ.15 லட்சம் கொள்ளை
புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அந்தோணி (வயது 57), பொன்சிவ ராமச் சந்திரன்(40), ஆலங்குளம் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் முருகையா(49), அதே பகுதியில் வசிக்கும் லாசர்(39), வீரபுத்திரன்(40), காந்தி நகரில் உள்ள மனோஜ் பிரபாகரன், திருமணி ஆகியோரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
மொத்தம் 7 வீடுகளிலும் கொள்ளை யடிக்கப்பட்ட நகை, ரொக்கப்பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து வீட்டு கதவுகளும் ஒரே விதமாக உடைக்கப்பட்டிருந்ததால், ஒரே கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என போலீசார் கருதுகின்றனர்.
2 தனிப்படைகள் அமைப்பு
இதுதொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். இதே காம ராஜ் நகர் பகுதியில் கடந்த மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் வீட்டில் ஒரு கும்பல் ரூ. 20 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.
அதுகுறித்து இதுவரை துப்பு துலங்காத நிலையில் போலீசாரின் மெத்தன போக்கால் தற்போது 7 வீடு களில் திருட்டு நடந்துள்ள தாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.