search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neglect"

    • விருதுநகரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டது.
    • ஜனநாயக பிரதிநிதித்துவ கொள்கைகளுக்கு முரணானது என மக்களவை சபாநாயகருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகரில் நடைபெற்ற நிதியமைச்சர் பங்கேற்க உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு பொது விழாவின் போது அதிகாரப்பூர்வ வழி காட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தொடர்பான தீவிரமான கவலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எழுதுகிறேன்.

    விருதுநகரை பிரதிநிதித் துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், மேற்படி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் எனது பெயர் விடுபட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வது வருத்தமளிக்கிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள மேலும் இரண்டு எம்.பி.க்களின் (தனுஷ்குமார், நவாஸ்கனி) பெயர்களும் அழைப்பிதழில் இல்லை என்பது என் கவனத்துக்கு வந்தது.

    இப்படி மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் புறக்கணிப்பது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தின் கொள்கைகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடை யேயான உத்தியோக பூர்வ பரிவர்த்தனைகள் குறித்த ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.

    அரசாங்க அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அலுவலக குறிப்பாணையினை உங்களது கவனத்தை ஈர்க்கிறேன். அழைப்பிதழ் அட்டைகளில் எங்கள் பெயர்கள் விடுபட்டிருப்பது இந்த வழிகாட்டு தல்களுக்கு முரணானது.

    இந்த விஷயத்தைச் சீர் செய்வதில் உங்கள் அவசரத் தலையீடு தேவை என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன். வழிகாட்டுதல்களில்படி, அமைப்பாளர்கள் பரிந்து ரைக்கப்பட்ட நடைமுறை களை கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பி தழ்களை வழங்குவதையும் உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.இந்த விஷயத்தில் உங்கள் உடனடி கவனத்தை நான் பாராட்டுகிறேன். மற்றும் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதி நிதிகளின் கண்ணி யத்தை நிலை நிறுத்தவும், ஜனநாயகக் கொள்கைகளின் ஒரு மைப்பாட்டைப் பேணவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகி றேன். இந்த சிக்கலைத் தீர்ப்பதில் உங்கள் புரிதலுக்கும் விரைவான நடவ–டிக்க்கும் நன்றி.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    • வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கண்டனம்

    இதையொட்டி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், வக்கீல் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் மேலும் அந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதுபோல சம்பவங்கள் மேலும் நடக்காமல் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    • ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
    • சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் 500 -க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு பகுதியினர் ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்ற இந்த சுடுகாட்டுக்கு முறையான பாதை வசதி இல்லாத நிலையில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் வழியை பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் மேல் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகள் அமைத்தும் ,செல்லும் வழியில் பள்ளங்கள் தோண்டியும் நிலத்தின் உரிமையாளர் இடையூறு செய்து வருவதாக தெரிய வருகின்றது .

    இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த நிலையில் 3 முறை சமாதான கூட்டம் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றும் இதுவரையில் சுடுகாட்டுக்கு செல்லுகின்ற பாதையை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும்,ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் கருவம்பாக்கம் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன.
    • நாளையும் வக்கீல்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் பொதுச்செயலாளர் கதிர்வேல், இணை செயலாளர்கள் சம்பத், திருமலை, ராஜன், பொருளாளர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளில் ஈடுபடாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன. வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

    மத்திய அரசு புதிய சட்டங்களின் பெயர்களை அந்தந்த மாநில மொழியிலும், பொது மொழியான ஆங்கிலத்திலும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த கோர்ட்டு புறக்கணிப்பு நடந்தது.நாளையும் வக்கீல்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    • மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பு.
    • 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    கும்பகோணம்:

    மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நேற்று கும்பகோணம் ஒருங்கி ணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்களையும், பொது மக்களையும் பாதிக்கும் இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக 3 புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாளமாக வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.

    • போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்து புறக்கணிப்பு.
    • 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை யும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசு வதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்தனர்.
    • கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சண்முக பிரியா ராஜேஸ் தலைமை யில் நடந்தது. ஆணையாளர் ஜானகி முன்னிலை வகித் தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி கள்) தேவபிரியா வரவேற்றார். இதில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் சசிகலா (கருமல்),செல்வி (மேலகன்னிசேரி), கலைச் செல்வி (விளங்குளத்தூர்), முருகன் (செல்வநாயகபுரம்), அரிச்சுணன் (வளநாடு) ஆகியோர் கவுன்சில் நிதி அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும். சாலை யோரம் உள்ள முள்செடி களை வெட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். கருங்கால குறிச்சி கிராமத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும், வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் காலனி பகுதி, கீழ கன்னி சேரி பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    விளங்குளத்தூர் பகுதி யில் இருந்து பருக்கைக்குடி செல்லும் தார்ச்சாலை பழுத டைந்துள்ளதை மரா மத்து செய்ய வேண்டும். பருக்கைக்குடி கிராமத்தில் 2 படித்துறை கட்ட வேண் டும். வெண்ணீர் வாய்க்கால். கிராமத்தில் சுடுகாடு வரை சாலை அமைக்க வேண்டும்.கண்மாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது கவுன்சிலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    • வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி போலீசார் அத்துமீறி நுழைந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி, வக்கீல்களின் அலுவலகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர். இதனை கண்டித்து அந்த தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாள் என்பதால் நேற்றே வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னத்தில் உள்ள கோர்ட்டுகளில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.


    • கரூர் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்
    • வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது

    கரூர்:

    தர்மபுரியில் வக்கீல் சிவக்குமார் கொல்லப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுரையில் வக்கீல்கள் ராஜேஷ், ஸ்டாலின் ஆகியோர் கைது செய்ததை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் அசோசியேசன் வேண்டு கோளின்படி, கரூர் மாவட்டத்தில் கரூர் வக்கீல்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் வக்கீல்கள் நேற்று கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


    • நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
    • ரெயில்வேயை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர், நாகப்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் ரெயில்வே துறையை கண்டித்து போராட்டத்தை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    செல்வராஜ் எம்.பி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கு சரியான சாலை வசதி இல்லாததால் தரை வழிப் போக்குவரத்து சவாலாக உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகம் செயலிழந்துள்ளதால் நீர்வழிப் போக்குவரத்தும் இல்லை.

    இந்தப்பகுதியில் விமான நிலையம் இல்லாததால் வான்வழிப் போக்குவரத்தும் இல்லை. ரயில் பயணம் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.

    ஒன்றிய அரசு எதையும் கேட்டவுடன் தந்து விடாது. போராடித்தான் பெற வேண்டும். எனவே ரயில்வேயை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    அதற்கு முன்பு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அவர் மூலம் ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்

    கூட்டத்தில், எம்.எல்.ஏ, .க்கள் பூண்டி கே.கலைவாணன் நாகை மாலி, மாரிமுத்து, தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
    • மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அனிதா, ஊராட்சி செயலர் மூவேந்தன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலா மற்றும் அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் கிராமத்திற்குத் தேவையான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

    அப்போது கிராம பொதுமக்கள் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். கட்சி பிரமுகர் ஒருவரின் தூண்டுதல் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் அதிகாரியிடம் பேசியதால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்படாமல் உள்ளது எனக்கூறி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்தனர். திருவெண்ணைநல்லூர் போலீசார் சமாதானம் செய்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன், உதவி செயற்பொறியாளர் நித்யாமற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அதே இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். சுதந்திர தின விழா கிராமசபை கூட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் முதுகலை ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்த பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு எப்படி? அளிக்க வேண்டும் என்பது தொடர்பான பயிற்சி நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அரசு பள்ளி முதுகலை ஆசிரியை, ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி மையங்கள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 285 முதுகலை ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    இன்று காலை 10 மணிக்கு அவர்கள் திடீரென பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நின்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் திரண்டு சென்று முதன்மை கல்வி அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு கற்பித்தல், மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.

    மேலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி போன்ற கூடுதல் பணிச்சுமை ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதால் வாரத்தில் 7 நாள்கள் ஓய்வின்றி விடுமுறையின்றி பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் உடல் நலம் மற்றும் குடும்ப நலன் பாதிக்கும்.

    எனவே, ஆசியர்களுக்கு முழு பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீட் மற்றும் ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளுக்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும்.

    நீட், ஜே.இ.இ. பயிற்சிக்கு விரிவான கையேடுகள் வழங்க வேண்டும். ஜே.இ.இ. தேர்வுக்கு தமிழ்வழியில் வினாத்தாள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.
    ×