என் மலர்

  நீங்கள் தேடியது "Kamarajar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்நிகழ்விற்கு பரிசுத்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார்.
  • ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

  தஞ்சாவூர்:

  முன்னாள் முதல்அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை கீழவாசலில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

  இந்நிகழ்விற்கு பரிசு த்தம் கல்லூரி தாளாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். டாக்டர் ராதிகாமைக்கேல் சிறப்புரை யாற்றினார்.

  இந்த ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் ரத்ததானம் அளித்தனர்.

  இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி முன்னாள் மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் ஹேனாஜெர்லின், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் பாதுஷா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மன்ற கவுரவ தலைவர் பரந்தாமன், செயலாளர் சோலையப்பன், பொருளாளர் ரெங்கசாமி, ஆலோசகர்கள் பாண்டித்துரை, பழனிச்சாமி, துணை தலைவர் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் காமராஜர் சிலைக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

  விருதுநகர்

  பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது.

  விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.

  சிவகாசி, திருத்தங்கல், விருதுநகரில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிவகாசி சிவன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி னார்.

  இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ்.

  விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, விருதுநகர் நகர செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகர செயலாளர் அசன்பதுருதீன், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு.
  • அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

  அது காமராஜர் ஆட்சி காலம். அப்போதுதான் அந்த பிரச்சனை எழுந்தது. அதிகாரிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, அதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க காமராஜர் அனுமதி கொடுத்ததுதான்..!

  திண்டுக்கல்லை விட்டு வெகு தொலைவில், தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள் ஒரு நிர்வாகத்தினர்.

  ஒவ்வொரு ஊர்களிலும் இப்படி தொழிற்சாலைகளை தொடங்க, ஏராளம் பேர் அனுமதி கேட்டு வரிசையில் காத்திருந்தார்கள்.

  பத்தோடு பதினொன்றாக, அத்தோடு இதுவும் ஒன்றாக பரிசீலனையில் அதை வைத்திருந்தார்கள் அதிகாரிகள்.

  இந்த விஷயம் காமராஜரின் காதுகளுக்குப் போனது. அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார் காமராஜர்.

  'உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்' என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.

  காமராஜரின் இந்த உத்தரவை கேட்டவுடன் அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.

  'எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார் ? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ ?' அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. உடனடியாக அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்.

  "என்ன உங்கள் சந்தேகம் ? கேளுங்கள்!" என்றார்.

  அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

  "அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே... அது ஏன் ? இதுதானே உங்கள் சந்தேகம் ?" தொடர்ந்து கேட்டார் காமராஜர்.

  "திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த தொழிற்சாலைக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா?"

  அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காமராஜரே பதில் சொன்னார்:

  "அறுபது கிராமங்கள்.

  அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. காரணம் அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை.

  அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, அவர்களுக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை நான் போட்டு இருக்கிறேன். அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?"

  அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

  காமராஜர் போட்ட ஒரே ஒரு நிபந்தனை, புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சம்மதித்து விட்டார்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினர்.

  இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், "இப்ப சொல்லுங்க. திண்டுக்கல் நகரத்தில் இருந்து, அவர்களது தொழிற்சாலை வரை, அந்த தொழிற்சாலைக்காரர்கள், அவர்களது சொந்த செலவிலேயே மின் கம்பங்களை அமைத்து விடுவார்கள். அதற்குப் பின் நமது வேலை சுலபம்.

  மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த இடைப்பட்ட 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அமைக்கப்பட்ட அந்த மின்கம்பங்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக விநியோகம் செய்து விடலாம். இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும். அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன். புரியுதா ?"

  ஆச்சரியத்துடன் அசந்து போய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள்.

  எவ்வளவு ஒரு சமூக அக்கறை ?

  எப்பேர்பட்ட கூர்மையான சிந்தனை !

  அதற்கு முன்னும் சரி. அதற்குப் பின்னும் சரி.

  அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை.

  இப்படிப்பட்ட காமராஜரை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்..!

  அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

  என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

  பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் காமராஜர். வெகுநேர மௌனத்துக்குப் பிறகு காமராஜர் சொன்ன வார்த்தைகள்:-

  "ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். என்னை பாராட்டி எழுதாதீர்கள்."

  இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

  தொடர்ந்து காமராஜர் சொன்னார். "நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை.

  ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே..! அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்."

  காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

  அவர் இப்படி சொல்லிய பிறகு, ஏற்கனவே காமராஜரை பாராட்டி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், இன்னும் அதிகமாக அவரை பாராட்டி எழுத ஆரம்பித்தார்கள்.

  இன்றும் கூட பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

  ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு. அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

  காமராஜர்... ஒரு சரித்திரப் பொக்கிஷம் !

  - ஜான்துரை ஆசிர்செல்லையா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
  • அவரது சிலைக்கு கலெக்டர்மா, அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  விருதுநகர்

  தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், கல்வி கண் திறந்த கர்மவீரருமான பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த விருதுநகரில் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  விருதுநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற அவர் அங்குள்ள சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

  பிறந்தநாளையொட்டி நினைவு இல்லத்தில் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்புவேள்வி நடந்தது.

  விருதுநகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகிே்யார் கலந்து கொண்டனர்.

  இதேபோல் நினைவு இல்லத்தில் நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் காமராஜர் சிலை முன்பு நோட்டு, புத்தகங்கள் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

  அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

  விருதுநகரில் 4000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் காமராஜர் வேடமணிந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  விருதுநகர் நகராட்சியில் நகரசபை தலைவர் மாதவன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
  • சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.

  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.

  இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

  இந்திய சுதந்திர போராட்டத்தில் காமராஜரின் பங்களிப்பு மறக்க முடியாதது. அவர் கனிவும், அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். ஏழ்மையை ஒழிக்கவும், பொதுமக்களின் துயரை போக்கவும் அவர் கடினமாக உழைத்தார். சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.

  காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன் .

  இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெருந்தலைவர் காமராஜர் புகழ்பாடிட குடும்பமாக திரளுவோம் என்று சிலுவை கூறி உள்ளார்.
  • தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்த வேண்டும்.

  மதுரை

  தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் மற்றும் விருதுநகர், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ஐ. சிலுவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

  தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜ ரின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலர செய்ய அடித்தளமாகவும், காமராஜரின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு விளக்கிடவும் த.மா.கா. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மதுரை பழங்கா நத்தத்தில் நடைபெறுகிறது.

  இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

  விழாவில் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக பங்கேற்கிறார்கள்.

  தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் மதுரை மக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை புரிந்து பெருந்தலைவர் காமராஜர் புகழ் பாடிட ஒன்று சேர வேண்டும்.

  தமிழகத்தில் நல்ல மாற்றத்திற்கான அரசியலை விதைத்து வரும் மக்கள் தலைவர் ஜி.கே.வாசனின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் மதுரை பொதுக்கூட்டத்தை வெற்றி மாநாடாக நடத்தி காட்டுவோம், அனைவரும் வாருங்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  பெரம்பலூர்:

  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

  பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவினர் முறை சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் செயலாளர் தினகர், பொருளாளர் பால்ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  இதேபோல் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வக்கீலுமான தமிழ்ச்செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், தங்கவேல், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயலாளர் குணசேகரன் தலைமையில், அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த தினத்தை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தமிழக கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

  அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அப்போது பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் காமராஜர் பிறந்த நாளையொட்டி காமராஜர் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்டவைகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

  இதை போல் கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி பெரம்பலூர் தனியார் தொடக்கப்பள்ளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர். துறைமங்கலம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனியார் சிறப்பு பள்ளியிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவியும், இரு கரங்களையும் கூப்பியும் மரியாதை செலுத்தினர்.

  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்-அப் களில் நிறைய பேர் காமராஜர் படத்தினை பகிர்ந்தனர். நிறைய பேர் வாட்ஸ்-அப்களில் ஸ்டேட்டஸ்களில் காமராஜர் படங்களையும், அவரை பற்றின வீடியோ காட்சிகளையும் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூரில் உள்ள நிறைய தனியார் பள்ளிகளில் நேற்று முன்தினமே காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படாத பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனது 15 வயதில் தீரர் சத்திய மூர்த்தியை குருவாக ஏற்றுக்கொண்ட கர்மவீரர் காமராஜர் தனது வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் உண்மை அவருக்கு சிஷியனாக வாழ்ந்தே மறைந்தார். #HBDKamarajar

  மதுரையில் தீரர் சத்தியமூர்த்தி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் சத்தியமூர்த்தி அவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். அவனை மேடைக்கு அழைத்த அவர் உனது பெயர் என்ன என்று கேட்க, அச்சிறுவன் தனது பெயர் காமராஜர் என்று பணிவுடன் கூறினான். அதற்கு சத்தியமூர்த்தி அவர்கள் அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார் என்று கூறி விட்டு பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். 

  சில காலம் கழித்து சென்னை வந்த காமராஜரை தீரருக்கு மிகவும் பிடித்துவிட்டது. காமராஜரின் பணிவு சத்தியமூர்த்தியை வெகுவாக கவர்ந்தது. காமராஜர் அவரை குருநாதராகவும், தன்னை சீடராகவும் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் தீரருக்கு மிகவும் பிடித்ததால் அவரது நம்பிக்கைக்கு உரியவராக காமராஜர் தேர்வானார். 

  1940-ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். தீரர் தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார். 

  இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக தீரரிடம் கேட்டார். உடனே தீரர் அவரிடம், நாட்டின் நன்மையை கருதி நீங்கள் தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காமராஜரிடம் திட்டவட்டமாக கூறினார். 

  தீரர் கூறியதை தட்ட முடியாத காமராஜர் தேர்தலில் போட்டியிட்டார். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் தேர்தல் நடந்தது. இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் தீரர் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, "நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

  தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். தீரர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த தீரரின் தியாகத்தை அரசியல் வரலாற்றில் இது வரை யாரும் செய்ததில்லை. 

  காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தீரர் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55-வது வயதில் இறந்து விட்டார். தீரரின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார். 

  காமராஜர் தன்னைப் பற்றியோ, தனது வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக கூற முடியும். காமராஜர் முதல்-அமைச்சர் ஆன பிறகு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தீரரின் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டுக்கு அடிக்கடி வருவார். காமராஜர் அவர்களிடம் ‘என்னை பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்' என்று கூறுவார். 

  ஒரு நாள் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் தீரரின் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தார். அவர் தீரரின் மனைவி பாலசுந்தரத்திடம் விருதுநகரில் உள்ள வீட்டு சுற்று சுவர் இடிந்து உள்ளது. அதை தம்பி (காமராஜர்)யிடம் கட்டச் சொல்லுங்க என்று சிவகாமி அம்மையார் உருக்கமாக சொன்னார். தீரரின் மனைவி இவ்விஷயத்தை காமராஜர் வீட்டுக்கு வந்தபோது கூறினார்.   

  உடனே காமராஜர், முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த உடன் அவன் தன்னுடைய வீட்டு சுற்றுச் சுவரை கட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு கூறுவார்கள்' என்று தீரரின் மனைவியிடம் கூறினார். இதை கேட்ட அவர் மவுனம் ஆகிவிட்டார். 

  இன்னொரு நாள் சிவகாமி அம்மையார் தீரரின் மனைவியிடம் எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்' என்று கூறினார். 

  இம்முறையும் காமராஜர் தீரர் குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு வந்தபோது அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தீரரின் மனைவி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக சென்று விட்டார். 

  காமராஜரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். புவனேஸ்வரில் அவர் பதவி ஏற்பு விழா நடந்தது. தீரரின் குடும்பத்தை அவர் அந்த விழாவுக்கு அழைத்தார். அவர்கள் குடும்பத்துடன் ரெயிலில் சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர் பதவி ஏற்ற விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த விழாவை தீரரின் குடும்பத்தினர் காமராசரின் திருமண விழாவாக நினைத்துக்கொண்டனர். அந்த அளவுக்கு நன்றி விசுவாசத்துடன் காமராஜர் தீரர் குடும்பத்தாரின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார்.

  முதல்-அமைச்சராக இருந்தபோது காமராஜரும், தீரரின் குடும்பத்தாரும் திருப்பதி கோவிலுக்கு சென்றார்கள். ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலில் தீரரின் பேரன்களான கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோருக்கு மொட்டை போட செய்தார். 

  திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதை மணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்-அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது தீரரின் குடும்பத்தாருக்கு ஆச்சரியம் அளித்தது. 

  தீரர் மீது காமராஜர் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது கோட்டையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுப்பதற்காக அழைத்தது. அவர் பூண்டி நீர்தேக்கத்துக்கு தன்னுடைய குருநாதர் சத்தியமூர்த்தியின் பெயரை சூட்டினால் தான் வரவேற்பு பத்திரத்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டபடி சென்னை மாநகராட்சி பூண்டி நேர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை சூட்டியது.

  மாநகராட்சி வளாகத்தில் தீரரின் திரு உருவச் சிலையை பிரதமராக இருந்த நேருவை அழைத்து வந்து காமராஜர் திறக்க வைத்தார். பின்னர் இந்திராவை தீரரின் வீட்டுக்கு அழைத்து வந்து தீரரின் மனைவிக்கு அறிமுகப்படுத்தினார். தீரரை குருவாக மதித்து, அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர் என்று விருதுநகரில் கமல்ஹாசன் பேசினார்.
  விருதுநகர்:

  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார்.

  நேற்று விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் பொதுமக்களை சந்தித்தார்.

  சிவகாசியில் பஸ் நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும் போது, இப்போது இங்கு பெய்துள்ள மழையில் நீங்கள் நனைந்துள்ளீர்கள். நான் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன். இந்த அன்பை தரிசிக்கத்தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

  வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். நமது அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள விசில் செயலி அமைப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

  அதைத் தொடர்ந்து விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, நான் விருதுநகர் வரும் போது ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தியை கேட்டேன். இந்த மாவட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது தான் அந்த செய்தி. இதன்மூலம் காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் கண்ட கனவுகள் மீண்டும் பலிக்கும். அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர்.

  நான் தற்போது காமராஜர் வீட்டுக்கு சென்று வந்தேன். சிறிய தெருவில் அவரது வீடு உள்ளது. ஆனால் விசாலமான பாதையை அவர் மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கல்விக்கு காமராஜர் செய்த சேவை மகத்தானது. காமராஜர் நமக்கு காட்டிய பாதையை தற்போது செப்பனிட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. நானும், மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் அதனை செய்வோம்.

  இங்கு என்னைவிட மூத்தவர்கள் உள்ளனர். அவர்கள் காமராஜர் கண்ட கனவு பலிக்குமா? பலிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்த நிலை மாறி இன்று அவர்கள் முகத்தில் புன்னகை தெரிகிறது. கால சுழற்சியில் காமராஜர் கண்ட கனவு பலிக்கும் நிலை ஏற்படும்.

  நாம் மேற்கொள்ளும் பணியில் பல்வேறு இடையூறுகள் வரலாம். அதனை எதிர்கொண்டு நாம் வெற்றிபெற வேண்டும். இங்கு திரண்டுள்ள உங்களை பார்க்கும்போது எனக்குள் உத்வேகம் பிறக்கிறது. உங்களது ஆசியுடன் லட்சியங்களை நிறைவேற்றுவேன்.

  மேற்கண்டவாறு அவர் பேசினார்.


  ×