search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KGF"

    • 2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல்.
    • சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார்

    2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தை இயக்கினார்.

    இப்படத்தின் மூலம் உலகத்தையே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். கே.ஜி.எஃப் பாகம் 1 மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார்.

    கே.ஜி..எஃப் 2 ஒரு பான் இந்திய படமாக அமைந்தது. கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவின் அதீக வசூலித்த படங்கள் பட்டியலில் 4-ஆம் இடத்தை பெற்றுள்ளது. 1500 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில்  அறிமுகமாகினார். சலார் வெற்றியைத் தொடர்ந்து சலார் பாகம் இரண்டை நடிகர் பிரபாஸ் வைத்து இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    ஜூனியர் என்.டி.ஆரின் 31 படத்தை இயக்கவுள்ளார் அற்கடுத்து கே.ஜி.எஃப் இன் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.
    • யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு கே. ஜி. எஃப் சாப்டர் 1 படம் வெளியானது. பான் இந்தியன் படமாக இப்படம் அமைந்தது . கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இப்படம் நகர்த்தி சென்றது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது கே.ஜி.எஃப் திரைப்படம். கன்னடா திரைத்துறையில் அதிகம் வசூலித்த படம் இதுவே.

    யாஷ் இப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதற்கடுத்து கே ஜி எஃப் பகுதி 2 வெளியானது அப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். நிவின் பாலி நடித்து 2019 வெளியான 'மூத்தோன்' படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் நாரயணன் மற்றும் யாஷ் இணைந்து கே வி என் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் கீழ் தயாரிக்கவுள்ளனர்.

    யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் கரீனா கப்பூர் நேற்று நடந்த நேர்காணலில் அவர் ஒரு மிக பெரிய சவுத் இந்தியன் படத்தில் நடிக்கவுள்ளார் அப்படம் பான் இந்தியன் படமாக இருக்கப்போகிறது என கூறியுள்ளார்.  கரீனா கபூர்  டாக்சிக் படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு டாக்சிக் படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ்.
    • இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.


    இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடிகர் யஷ் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும், மனதில் இருந்தால் போதும். கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இது போன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரையும் கூறினார்.


    இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார். 

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப்.
    • இப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இதில் ராக்கி பாய் என்ற கதாப்பாத்திரத்தில் யஷ் நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. குறிப்பாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் சர்வதேச அளவில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.




    இந்நிலையில் இந்தியாவில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்ளும் ஜப்பானில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக நடிகர் யஷ் வீடியோ பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இதில் ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'சலார்' திரைப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு புதிய யூனிவர்ஸை உருவாக்குகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதாவது, கே.ஜி.எப். இரண்டாவது பாகத்தின் கிளைமேக்ஸில் யஷ் சென்ற கப்பல் மீது அதிகாலை 5 மணிக்கு தான் தாக்குதல் நடக்கும் என்று சுட்டிக்காட்டும் ரசிகர்கள் இதன் தொடர்ச்சியாக 'சலார்' இருக்குமோ என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    • இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'கே.ஜி.எப் -2'
    • இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான பணியில் இயக்குனர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது.


    கே.ஜி.எப்

    இந்நிலையில், 'கேஜிஎப்-2' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவுற்றுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. அந்த பதிவில், 'கேஜிஎப் 2 மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம்மை கலைத்துவமிக்க பயணத்தில் அழைத்து சென்றது. ரெக்கார்டுகளை தகர்த்தது. பார்வையாளர்களின் இதயங்களை வென்றது' என குறிப்பிட்டுள்ளது.


    கே.ஜி.எப்

    மேலும், இதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் 36-வது நொடியில் '1978-81 வரை ராக்கி எங்கே இருந்தார்?' என அடுத்த பாகத்திற்கு ஹிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    இயக்குனர் பிரசாந்த் நீல் 'கேஜிஎப் -3' திரைக்கதை பணியில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • கே.ஜி.எப் படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் யஷ்.
    • இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த் நீல் தீவிரமாக இருந்து வருகிறார். இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வதுபோல் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள். இதனால் 3-ம் பாகம் முழுவதும் கடலில்தான் கதை நடப்பதாக காட்டப்போகிறார் என்பதுபோல் சொல்லியிருப்பார். கடலில் நடக்கும் சாகச கதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.


    கே.ஜி.எப்

    இந்நிலையில், கே.ஜி.எப். 3-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 2025-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் 2026-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் ஐந்தாவது பாகம் முடிந்த பிறகு யஷ்ஷிற்கு பதில் வேறொரு ஹீரோவை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • ’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ்.
    • இந்நிறுவனம் திரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    'கே.ஜி.எஃப். 1', 'கே.ஜி.எஃப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். இந்நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, " எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    சினிமா, வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது. நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.


    ஹோம்பாலே பிலிம்ஸ் அறிக்கை

    பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

    ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'சலார்', 'ரகு தாத்தா', 'டைசன்', 'ரிச்சர்ட் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஃப் படத்தில் நடித்திருந்தவர் கிருஷ்ணா ஜி ராவ்.
    • கிருஷ்ணா ஜி ராவ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் கேஜிஃப். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் பார்வையற்ற வயதானவர் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கிருஷ்ணா ஜி ராவ். கன்னட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள அனைவராலும் அறியப்பட்டார்.

    நீண்ட வருடங்களாக திரைத்துறையில் துணை நடிகராக வலம் வரும் கிருஷ்ணா ஜி ராவ், சமீபத்தில் தெலுங்கில் கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளியான 'நானோ நாராயணப்பா' என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

     

    கிருஷ்ணா ஜி ராவ்

    கிருஷ்ணா ஜி ராவ்

    வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த கிருஷ்ணா ஜி ராவ், திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கிருஷ்ணா ஜி ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு கன்னட திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் வருத்தத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    • ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
    • தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.

    தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இதனிடையே ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்.டி மியூசிக் என்கிற தனியார் நிறுவனம் தான் இந்த புகாரை கொடுத்துள்ளது.

    ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.

    அது தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உள்பட மூவர் மீது இந்த காப்புரிமை மீறல் புகாரை கொடுத்துள்ளது.

    நிறைய தொகை கொடுத்து கே.ஜி.எப் 2 படத்தின் பாடல் உரிமையை தாங்கள் வாங்கி உள்ளதாகவும், அதனை தங்களது அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சியினர் தங்களது வீடியோவில் பயன்படுத்தி உள்ளதால் நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இயக்குனர் நீல் பிரசாத் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் கேஜிஎப்.
    • இந்த படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார்.

    இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து இரண்டு பாகங்களாக வெளியாகிய திரைப்படம் கேஜிஎப். பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய இந்தபடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இப்படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார். இவர் பெங்களூரில் தனது பென்ஸ் காரில் ஜிம்மிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.


    அவினாஷ் - யஷ்

    இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பித்துள்ள நடிகர் அவினாஷ் இது குறித்த பதிவு ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "நான் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ​​​​அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. ஆனால் காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது. அதன் தாக்கம் என் கார் பானட் கிழியும் அளவுக்கு இருந்தது. விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது" என பதிவிட்டுள்ளார்.

    யஷ் கதாநாயகனாக நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
    கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

    படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்.



    ரவீணா டாண்டன் தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×