கேஜிஃப் பிரபலம் மரணம்.. வருத்தத்தில் திரையுலகம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஃப் படத்தில் நடித்திருந்தவர் கிருஷ்ணா ஜி ராவ்.கிருஷ்ணா ஜி ராவ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணா ஜி ராவ்
கிருஷ்ணா ஜி ராவ்
Published on

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் கேஜிஃப். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் பார்வையற்ற வயதானவர் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கிருஷ்ணா ஜி ராவ். கன்னட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள அனைவராலும் அறியப்பட்டார்.

நீண்ட வருடங்களாக திரைத்துறையில் துணை நடிகராக வலம் வரும் கிருஷ்ணா ஜி ராவ், சமீபத்தில் தெலுங்கில் கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளியான 'நானோ நாராயணப்பா' என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

கிருஷ்ணா ஜி ராவ்
கிருஷ்ணா ஜி ராவ்

கிருஷ்ணா ஜி ராவ்

வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த கிருஷ்ணா ஜி ராவ், திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கிருஷ்ணா ஜி ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு கன்னட திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் வருத்தத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com