search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPL"

    இந்தியாவின் இடது கை வேகப்பந்து கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் கரீபியர் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
    பிசிசிஐ ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை நடத்துவது போல், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் 20 ஓவர் லீக் தொடரை நடத்தி வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரீபியன் பிரிமீயர் லீக் என்ற பெயரில் நடத்தி வருகிறது. பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வீரர்களை வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதிப்பதில்லை.

    இந்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், கரீபியன் பிரிமீயர் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஏதாவது ஒரு அணி இவரை ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.



    கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் 4-ந்தேதியில் இருந்து அக்டோபர் 12-ந்தேதி வரை நடக்கிறது.
    கயானாவில் நடைபெற்ற கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ஜமைக்காவை வெளியேற்றியது செயிண்ட் கிட்ஸ் அணி. #CPL2018
    மேற்கிந்திய தீவில் உள்ள கயானாவில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று நடைபெற்றது.
    இதில் கிறிஸ் கெயில் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் மற்றும் ஆண்ட்ரு ரசல் தலைமையிலான ஜமைக்கா தலைவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, ஜமைக்கா தலைவாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 63 பந்துகளில் 103 ரன்னில் அவுட்டானார். அவரை தவிர மற்ற யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜமைக்கா தலைவாஸ் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயிண்ட் கிட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆண்டன் டேவ்சிச் 23 பந்தில் 50 ரன்கள் அடித்து வெளியேறினார்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காவிட்டாலும் பவுண்டரிகள், சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியாக, செயிண்ட் கிட்ஸ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆண்டன் டேவ்சிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜமைக்கா அணி தொடரில் இருந்து வெளியேறியது. #CPL2018
    ஆப்கானிஸ்தானின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் கவுன்ட்டி கிரிக்கெட்டிற்காக கரிபியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகியுள்ளார். #RashidKhan #CPL
    ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். டி20 கிரிக்கெட்டின் நட்சத்திர பந்து வீச்சாளரான இவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த வருடம் இறுதியில் நடைபெறும் கரிபியன் பிரீமியர் லீக் தொடரிவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கரிபிரியன் பிரீமியர் லீக் தொடருக்கு சென்றால் சசக்ஸ் அணிக்காக அவர் விளையாட முடியாது.



    இந்நிலையில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகி, தொடர்ந்து சசக்ஸ் அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இன்னும் ஏழு போட்டிகள் உள்ளன. ரஷித் கான் தொடர்ந்து விளையாட இருப்பதால் இங்கிலிஷ் கவுன்ட்டி டி20 பிளாஸ்ட் தொடரில் சசக்ஸ் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    கேரளாவில் அனைவரையும் கவரும் அம்சங்களில் ஒன்றான நீள்படகு போட்டிகள், ஐபிஎல் பாணியில் 13 போட்டிகள் கொண்ட தொடராக அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. #Kerala #SnakeBoatRaces
    திருவனந்தபுரம்:

    சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற கேரளாவில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சங்களில் ஒன்று படகுப்போட்டி. நீள் வடிவ படகுகளை கொண்டு நடத்தப்படும் போட்டி அங்கு மிக பிரபலமானதாக உள்ளது. 100 முதல் 120 அடி நீளம் கொண்ட இந்த படகுகளில் சுமார் 100 பேர் வரை அமர்ந்து துடுப்பு போடுவார்கள்.

    இந்நிலையில், இந்த படகுப்போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் அதன் மூலம் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் ஈர்க்கவும் அம்மாநில அரசு புது ஐடியாவை செயல்படுத்தியுள்ளது.

    கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்த ஐபிஎல் பாணியில் சிபிஎல் (சாம்பியன் போட் லீக்) என்ற தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11-ம் தேதி ஆழப்புலாவில் உள்ள ஏரியில் தொடங்கும் இந்த தொடர் நவம்பர் முதல் தேதி வரை நடத்தப்படுகிறது.

    9 படகுகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 13 போட்டிகள் 13 இடங்களில் நடத்தப்பட உள்ளன. தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் படகு அணிக்கு ரூ.5 லட்சமும், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடிக்கும் படகு அணிகளுக்கு முறையே ரூ.3 லட்சம் மற்றும் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    சிபிஎல் தொடர் மூலம் கேரளாவின் சுற்றுலாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ள அம்மாநில சுற்றுலா துறை மந்திரி சுரேந்திரன், ‘இதன் மூலம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதன்முறையாக கரிபியன் பிரீமியர் லீக் தொடர் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். #CPL #Smith
    ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாகவும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித். இந்த வருடம் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது மார்ச் மாதம் கேப்படவுனில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்.

    இதுதொடர்பான விசாரணையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்து வருகிறார். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிக குறைவான லெவல் தொடர்களிலும், வெளிநாட்டு லீ்க் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.



    முதன்முதலாக கனடா குளோபல் டி20 லீக்கில் விளையாடினார். அதன் தற்போது கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    அந்த அணியில் இடம்பிடித்திருந்தது வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் விலகியதால் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 155 டி20 போட்டிகளில் விளையாடி 3124 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 30.03 ஆகும்.
    பாகிஸ்தான் வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக் தொடரில் விளையாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு எடுத்துள்ளது. #PAK #PCB
    டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டாக மாற்றமைடைந்து, தற்போது டி20 கிரிக்கெட்டாக விளையாடப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரை தொடங்கியது. இதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அத்துடன் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டது.

    இதனால் சர்வதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார். ஐபிஎல்-ஐ தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தின.

    ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் மற்ற தொடர்களில் பங்கேற்பதில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வீரர்கள் பல்வேறு டி20 லீக்கில் ஆடுகிறார்கள்.

    பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுகிறார்கள். மற்ற கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க வேண்டும். தற்போது தடையில்லா சான்றிதழ் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.



    புதிய மாற்றத்தின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக்கில்தான் விளையாட முடியும். அதற்கு மேல் விளையாட முடியாது.

    பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவார்கள். இதை தவிர்த்து மேலும் என்றில்தான விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் தொழில்முறையாக சம்பளம் குறைவு. இந்நிலையில் இந்த கட்டுப்பட்டால் மேலும் அவர்களது வருமானம் தடைபெற வாய்ப்புள்ளது.

    வேலைப்பளு அதிகம், காயம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    ×