search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருடத்திற்கு இரண்டு டி20 லீக்தான்- பாகிஸ்தான் வீரர்களுக்கு செக்
    X

    வருடத்திற்கு இரண்டு டி20 லீக்தான்- பாகிஸ்தான் வீரர்களுக்கு செக்

    பாகிஸ்தான் வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக் தொடரில் விளையாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு எடுத்துள்ளது. #PAK #PCB
    டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டாக மாற்றமைடைந்து, தற்போது டி20 கிரிக்கெட்டாக விளையாடப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரை தொடங்கியது. இதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அத்துடன் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டது.

    இதனால் சர்வதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார். ஐபிஎல்-ஐ தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தின.

    ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் மற்ற தொடர்களில் பங்கேற்பதில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வீரர்கள் பல்வேறு டி20 லீக்கில் ஆடுகிறார்கள்.

    பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுகிறார்கள். மற்ற கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க வேண்டும். தற்போது தடையில்லா சான்றிதழ் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.



    புதிய மாற்றத்தின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக்கில்தான் விளையாட முடியும். அதற்கு மேல் விளையாட முடியாது.

    பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவார்கள். இதை தவிர்த்து மேலும் என்றில்தான விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் தொழில்முறையாக சம்பளம் குறைவு. இந்நிலையில் இந்த கட்டுப்பட்டால் மேலும் அவர்களது வருமானம் தடைபெற வாய்ப்புள்ளது.

    வேலைப்பளு அதிகம், காயம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    Next Story
    ×