search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aircel Maxis Case"

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான இடைக்கால தடை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
     புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
      
    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 



    இருவரையும் கைது செய்வதற்கான தடை இன்றுடன் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார்.
    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 8-ந்தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார்

    அப்போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

    இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின் அனுமதியை பெறாமல் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்த அனுமதியை பெற ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.


    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரத்துக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் பலமுறை தடை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஓ.பி.சைனி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் மார்ச் 8-ந்தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    கார்த்தி சிதம்பரம் மார்ச் 5, 6, 7 மற்றும் 12-ந்தேதிகளில் விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. #PChidambaram  #AircelMaxisCase
    ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடைசியாக டிசம்பர் 18-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சிலரை வழக்கில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டியிருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 11ம்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.



    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். அதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சிலரை வழக்கில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டியிருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சிபிஐக்கு ஜனவரி 11ம்தேதி வரை கால அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, அதுவரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார். #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார். #aircelmaxiscase #PChidambaram
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    ரூ.600 கோடி வரை முதலீடு செய்ய மத்திய நிதி அமைச்சகத்தால் அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், விதிகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதில் அனுமதி பெற்று கொடுக்க கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறையும், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    அந்தக் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18-ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டுள்ளார். #aircelmaxiscase #PChidambaram
    ஏர் செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக தன் மீது சி.பி.ஐ. கூறுகிற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று டெல்லி கோர்ட்டில் ப. சிதம்பரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #aircelmaxiscase #pchidambaram
    புதுடெல்லி:

    மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

    அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.

    இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்து வருகிறது.

    சி.பி.ஐ. வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, ப. சிதம்பரம் கடந்த மே மாதம் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் நாளை (26-ந் தேதி) வரை கைது செய்யப்படாமல் இருக்க சி.பி.ஐ. கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.

    இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் மனுவின் மீது சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அவர் மீது சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, “ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. எனவே அவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்” என கூறி உள்ளது.

    அதுமட்டுமின்றி, “அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்து உள்ள கால வரையறைக்குள் விசாரித்து முடிப்பது மிகவும் சிரமம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ.யின் பதில் மனு மீது ப.சிதம்பரம் தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் பதில் மனுவை வக்கீல்கள் பி.கே. துபே, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

    அதில், “ சி.பி.ஐ. கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை. இந்த வழக்கில் என்னை காவலில் வைத்து விசாரிக்க தேவை இல்லை. எல்லாமே ஆவண ரீதியிலான ஆதாரங்கள்தான். அவை எல்லாமே சி.பி.ஐ. வசம்தான் உள்ளன. வழக்கின் ஆதாரங்களை, சாட்சியங்களை நான் கலைத்து விடுவேன் என்று கூறுவதற்கு சி.பி.ஐ. எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை” என கூறப்பட்டுள்ளது. #aircelmaxiscase #pchidambaram
    ஏர்செல்-மேக்சிஸ் பண மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு செய்துள்ளது. #AircelMaxisCase #Chidambaram #EnforcementDirectorate
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளன. கடந்த 25-ந் தேதி ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

    இந்த வழக்கில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் கோரியதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி முதல் பல்வேறு நேரங்களில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அவரை கைது செய்ய தடை விதித்தது. கடைசியாக நவம்பர் 1-ந் தேதி (அதாவது இன்று) வரை இத்தடையை நீட்டித்தது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ப.சிதம்பரம் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அவரை காவலில் எடுத்து விசாரிக்காத வரை இந்த வழக்கில் உண்மையை வெளியே கொண்டு வர இயலாது. மேலும் அவர் இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.  #AircelMaxisCase #Chidambaram #EnforcementDirectorate
    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேரின் மீது துணை குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது. #AircelMaxisCase #ED #PChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு உதவியதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மீதும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம் உட்பட 9 பேரின்மீது துணை குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகையில், குற்றம் செய்ததற்கு முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டு இருப்பதாகவும், அதனால், நவம்பர் 26-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.   #AircelMaxisCase #ED #PChidambaram
    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை நவம்பர் 1-ந்தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #kartichidambaram
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம்.

    2006-ம் ஆண்டு இவர் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை குழுவின் அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த முதலீடு விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் கடந்த ஜூலை 19-ந்தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

    இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். பலமுறை அவர்கள் இருவர் மீதான கைது தடையை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்றார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    அதை தொடர்ந்து நவம்பர் 1-ந்தேதி வரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார். #PChidambaram #kartichidambaram
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனுவை டெல்லி பாடியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    புதுடெல்லி:

    முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    இந்த தடையை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை டெல்லி பாடியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாதம் 8-ம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல தடை கோரிய அமலாக்கத்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து அவரை அமெரிக்கா செல்ல அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    புதுடெல்லி:

    முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் அமெரிக்க செல்ல அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வாதத்தை முன்வைத்த அமலாக்கத்துறை, வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தது.



    இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல இனிமேல் அனுமதிக்க கூடாது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடையையும் ரத்து செய்யவும் வேண்டியிருந்தது.

    இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்லவும் அனுமதி வழங்கி  உத்தரவிடப்பட்டுள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    ஏர்செல் மாக்சிஸ் விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காணப்படும் விவரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். #AircelMaxisCase #CBI #Chidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல் மாக்சிஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையின் சில விவரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளார்.

    அவரது மனுவில், சிபிஐ குற்றப்பத்திரிகையை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்புவதாகவும், நீதி விசாரணையை விடுத்து ஊடகங்கள் மூலம் வெற்றி பெற சிபிஐ நினைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, சிபிஐ குற்றப்பத்திரிகையை சம்பந்தபட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக, ஊடகங்களுக்கு வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார்.

    ப.சிதம்பரத்தின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, வழக்கு குறித்து அக்டோபர் 8-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AircelMaxisCase #CBI #Chidambaram
    ×