search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊடகம்"

    • 46 சதவீதம் பேர், குடும்பங்களின் நிதி நிலைமை மோசமடைந்ததாக தெரிவித்தனர்
    • அனைத்தும் நன்றாக உள்ளது என ஜோ பைடன் பதிலளித்தார்

    அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    அமெரிக்க பொருளாதாரத்தை தற்போதைய அதிபர் ஜோ பைடன் சரிவர கையாளாததால் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.

    இதன் காரணமாக கருத்து கணிப்புகளில் ஜோ பைடனுக்கு ஆதரவு குறைய தொடங்கியது. சுமார் 14 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஜோ பைடன் பொருளாதாரத்தை சரியாக கையாளுவதாக தெரிவித்தனர். மக்கள் தொகையில் சுமார் 46 சதவீத மக்கள் பைடனின் ஆட்சிமுறை அவர்கள் குடும்பங்களின் நிதி நிலைமையை மோசமடைய செய்ததாக தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் புறப்பட்ட போது அவரிடம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கேட்கப்பட்டது.

    "2024ல் நுழையவிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வாறு உள்ளது?" என பைடனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த பைடன், "அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் நன்றாக பாருங்கள். செய்திகளை சரியான முறையில் வெளியிட தொடங்குங்கள்" என தெரிவித்தார்.

    சில மாதங்களாகவே அதிபர் ஜோ பைடன் ஊடகங்கள் தனது நிர்வாகத்தில் உள்ள எதிர்மறை செய்திகளில் கவனம் செலுத்தி நேர்மறை செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
    • தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடக்கம்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை வீழ்த்த சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

    மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டப்பின் இந்த குழு கூடியது. அடுத்தப்படியாக தொகுதி பங்கீடுதான் முக்கிய இலக்கு என தெரிவித்து இருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதோடு இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வரும் 14 செய்தியாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்தியா கூட்டணியின் ஊடக பிரிவு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், அதிதி தியாகி, அமன் சோப்ரா, அமிஷ் தேவ்கன், ஆனந்த் நரசிம்மன், அர்ணாப் கோஸ்வாமி, சித்ரா திரிபாதி, கவுரவ் சவந்த், நவிகா குமார், பிராசி பரசஹர், ரூபிகா லியாகுவாட், ஷிவ் அரூர், சுதிர் சவுத்ரி மற்றும் சுஷாந்த் சின்ஹா என 14 செய்தி தொகுப்பாளர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்து இருக்கிறது. 

    • மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாட்டுதாவணியில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வ மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செய லாளர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ஊடகங்கள் வாயிலாக பா.ஜ.க. கட்சியின் செயல்பாடுகள், பிரதமர் மோடி தென் தமிழகத்திற்கு செய்த திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் யூடிப் மூலம் செய்திகள் கடை கோடி மக்களுக்கும் சென்றடைய பணி புரிய வேண்டும் என்றார்.

    இதில் தென் தமிழகம் வளர்ச்சி பெற மதுரை நத்தம் சாலையில் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும், மதுரை 9-வது வார்டு உத்தங்குடியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஊடகத்துறையில் மகளிர் பங்களிப்பு எனும் தலைப்பில் தனியார் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெறுகிறது.
    • ஊடகத்துறையில் மகளிர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள பிரபல மகளிர் தனியார் கல்லூரியில் ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு என்ற தலைப்பில் வரும் 3ஆம் தேதி முதல் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற இருக்கிறது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவி மகளிர் கல்லூரியில் ஊடகப்பிரிவு தொடர்பான பாடப்பிரிவில் பயின்ற மகளிர் ஊடகத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இந்த நிலையில் அந்த கல்லூரியில் ஊடகங்களில் மகளிரின் பங்களிப்பு என்ற தலைப்பை மையமாகக் கொண்டு சர்வதேச கருத்தரங்கம், நடைபெற உள்ளது.

    பிப்ரவரி 3 மற்றும் 4 தேதிகளில் நடக்கும் இந்த கருத்தரங்கில், அதே கல்லூரியில் பயின்று வெளி நாடுகளில் பணியாற்றுபவர்கள் பங்கேற்கிறார்கள். ஊடகத்துறையில் மகளிரின் பங்களிப்பு மாற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    ×