பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம்
Published on

மதுரை

மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாட்டுதாவணியில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வ மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செய லாளர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ஊடகங்கள் வாயிலாக பா.ஜ.க. கட்சியின் செயல்பாடுகள், பிரதமர் மோடி தென் தமிழகத்திற்கு செய்த திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் யூடிப் மூலம் செய்திகள் கடை கோடி மக்களுக்கும் சென்றடைய பணி புரிய வேண்டும் என்றார்.

இதில் தென் தமிழகம் வளர்ச்சி பெற மதுரை நத்தம் சாலையில் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும், மதுரை 9-வது வார்டு உத்தங்குடியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com