search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Action Test"

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • பொருட்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு மேற்கொண்டார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொரு ட்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை விவரம், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களின் எடை விவரம், விற்பனை முனையம் சாதனத்தில் ஏற்றப்பட்டுள்ள பொருட் களின் விவரம், தற்பொழுது வரை வழங்கப் பட்டுள்ள பொருட்களின் விவரம்.

    நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவை தரமாக உள்ளதா எனவும், சரியான எடை அளவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொரு ட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணி த்தார். ஆய்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சி யர் ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர்ஆதி சக்தி குமரி மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • போலீசார் ஒவ்வொரு கடையாகசென்று முறையான அனுமதி பெற்றுள்ளனரா என்று விசாரித்தனர்.

    கடலூர்: 

     கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 100-க்கும் மேற்பட்ட தீபாவளி பட்டாசு கடைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது சிவகாசி நேரடி விற்பனை என்ற போர்வையில் ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கடலூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர் நேற்று அதிரடி சோதனை நடத்திவிதிமுறைகள் மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,பயிற்சிசப்-.இன்ஸ்பெக்டர் விஜய்,தலைமைகாவலர்சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஒவ்வொரு கடையாகசென்று முறையான அனுமதி பெற்றுள்ளனரா?   என்றும் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் தரம்,தயாரிப்பு தேதி ஆகியவை ஆய்வு செய்தனர்.

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை
    • சோதனைகள் தீவிரபடுத்தப்ப்படும் என அதிகாரிகள் அறிவிப்பு

    வேலூர்:

    கர்நாடாகா, ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புல னாய்த்துறை டி.ஜி.பி ஆபாஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில், கண்காணிப்பாளர் கீதா மேற்பார்வையில் வேலூர் துனை கண்காணிப்பாளர் நந்தகுமார், ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீசார் வேலூரை சுற்றி உள்ள சோதனை சாவடிகளில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்,

    அதேபோல் நெல் அரவை ஆலைகளில் எதாவது கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இது போன்று சோதனைகள் தீவிரபடுத்தப்ப்படும் என்று தெரிவித்தனர்.

    • திண்டிவனம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூத்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூத்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனப்பகுதிகள் அதிகம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உடும்பு, ஆமை ஆகியவை இரவு நேரங்களில் உலா வருகிறது. இந்த ஆமை களை அந்த பகுதியில் உள்ள நரிக்குற வர்கள் வேட்டையாடி வருகின்றனர். நேற்று இரவு அந்த பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் நடமாட்டம் உள்ள தாக திண்டிவனம் வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் வனத்துறை–யினர் அங்கு விரைந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப் படும்படி திரிந்த–னர். உடனே வனத்துறை–யினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை போட்ட போது, அதில் 19 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை வனத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் வில்லியனூரை சேர்ந்த முத்து (வயது 21), புதுவை மாநிலம் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்க டேசன் (21) என்பது தெரிய வந்தது. உடனே 2 பேரும் ஆேராவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எதற்காக வெடி–குண்டுகள் கொண்டு வந்தனர். எங்கிருந்து வாங்கி வந்தனர். 2 பேரும் கூலி படையினரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கலை தடுக்க 98 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணித்து கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பாற்வையில் இன்ஸ்பெக்டர்கள், தலைமையில் 37 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் கஞ்சா சம்மந்தமான சோதனை நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. கடலூர் உட்கோட்ட காவல் அதிகாரிகள் திருப்பாதிரிபுலியூர் , குப்பங்குளம் , சாலக்கரை , தூக்கணாம்பாக்கம் , கடலூர் பெண்ணையாறு கரையோரம் , சுண்ணாம்புகார தெரு . புதுப்பாளையம் , ரயில் நிலையம் , தைக்கால் ஆகிய இடங்களில் சோதணை மேற்கொள்ளப்பட்டது . சிதம்பரம் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் , புதுச்சத்திரம் ரயில்வேகேட் , வில்லியனூர் பண்ருட்டி காடாம்புலியூர் , பெரியகாட்டுசாகை , மாளிகம்பட்டு . ஆண்டிக்குப்பம் , நெல்லிக்குப்பம் , பி.என். பாளையம் , நெல்லிகுப்பம் , மேல்பட்டாம்பாக்கம் . நடுவீரப்பட்டு பேருந்து நிலையம் , சி.என்.பாளையம் , பாலூர், விருத்தாச்சலம் பாலக்கரை , பெண்ணாடம் , ரயில்வே ஜங்ஷன் , பழையபட்டினம் கீரனூர் , சோழன் நகர், சேத்தியாத்தோப்பு கீழ்புளியங்குடி , சந்தைதோப்பு , லால்பேட்டை , கோட்டைமேடு , அய்யன்குடி , திட்டக்குடி பேருந்துநிலையம் , ஆவினங்குடி , சிறுமங்கலம் , ராமநத்தம், , நல்லூர் , சிறுபாக்கம் , மங்களுர் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் சோதனையின்போது கஞ்சா எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    ×