திண்டிவனம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர்கள்

திண்டிவனம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூத்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது.
 நாட்டு வெடிகுண்டுகளுடன் கைதான 2 பேரையும், அவர்களை மடக்கி பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
 நாட்டு வெடிகுண்டுகளுடன் கைதான 2 பேரையும், அவர்களை மடக்கி பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூத்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனப்பகுதிகள் அதிகம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உடும்பு, ஆமை ஆகியவை இரவு நேரங்களில் உலா வருகிறது. இந்த ஆமை களை அந்த பகுதியில் உள்ள நரிக்குற வர்கள் வேட்டையாடி வருகின்றனர். நேற்று இரவு அந்த பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் நடமாட்டம் உள்ள தாக திண்டிவனம் வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் வனத்துறை–யினர் அங்கு விரைந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப் படும்படி திரிந்த–னர். உடனே வனத்துறை–யினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை போட்ட போது, அதில் 19 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை வனத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் வில்லியனூரை சேர்ந்த முத்து (வயது 21), புதுவை மாநிலம் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்க டேசன் (21) என்பது தெரிய வந்தது. உடனே 2 பேரும் ஆேராவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எதற்காக வெடி–குண்டுகள் கொண்டு வந்தனர். எங்கிருந்து வாங்கி வந்தனர். 2 பேரும் கூலி படையினரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com