search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 state Assembly Election"

    5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து இன்று கருத்து தெரிவித்த மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, அரையிறுதியில் பா.ஜ.க. காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார். #Results2018 #Mamata #BJP
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது, சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சியை பறி கொடுக்கிறது. மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கான மக்களின் நற்சான்றிதழாக இந்த முடிவுகள் கருதப்படுகிறது. இந்நிலையில்,  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படும் இந்த தேர்தலில் பா.ஜ.க. காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.
     
    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களின் வெற்றியும்கூட.


    இது அநீதிக்கு எதிரான ஜனநாயகத்தின் வெற்றி. அட்டூழியங்கள், ஜனநாயக அமைப்புகளை சிதைக்கும் பேரழிவு, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான வெற்றி.

    விவசாயிகள், ஏழை மக்கள், இளைஞர்கள், தலித்துகள், சிறுபான்மையின மக்களுக்கான வெற்றியாக இதை பார்க்க வேண்டும். இந்த அரையிறுதி போட்டியில் எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. காணாமல் போய்விட்டது.

    இறுதிப்போட்டியான 2019-பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி அமையும்? என்பதற்கான உண்மையான ஜனநாயக குறியீடாக இந்த முடிவுகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ஜனநாயகத்தில் மக்கள்தான் எப்போதுமே ‘ஆட்ட நாயகர்கள்’. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்’ என மம்தா தெரிவித்துள்ளார். #Results2018 #Mamata #BJP
    காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் பதவியேற்ற நாளில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. #Congress #RahulGandhi #AssemblyElections2018
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி கடந்த ஆண்டு இதே நாளில் அதாவது 2017 டிசம்பர் 11-ந்தேதி பதவி ஏற்றிருந்தார். அவர் தலைவராக பதவியேற்ற அதே நாளில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.  மற்ற இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இந்த தேர்தல் முடிவுகள் ராகுலின் தலைவர் பதவிக்கு கிடைத்த அங்கீகார வெற்றி என காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


    5 மாநில தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி ராகுலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று சோனியா புகழாரம் சூட்டியுள்ளார். இந்த அபார வெற்றிக்காக ராகுல் கடுமையாக பாடுபட்டதாகவும் சோனியா பாராட்டு தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #AssemblyElections2018
    வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். #Results2018 #TamilisaiSoundararajan
    சென்னை:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன.

    இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:



    எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பாஜக துள்ளிக் குதிப்பதும் இல்லை தோல்வியால் துவள்வதும் இல்லை. மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை; மோடி அலையை ஓய வைக்கவும் முடியாது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என இயந்திரத்தனமாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா?

    இவ்வாறு அவர் கூறினார். #Results2018 #TamilisaiSoundararajan
    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. #AssemblyElections
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.

    முதலில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த மாதம் 12, 20-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சராசரியாக 74 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது. தெலுங்கானாவில் 73.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

    5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை சுமூகமாக நடத்துவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


    சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 மாவட்டங்களிலும் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 306 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தெலுங்கானாவில் 43 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மிசோரம் மாநிலத்தில் 13 மையங்களில் உருவாக்கப்பட்டுள்ள 40 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். 5 மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கையை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணியில் இருந்து மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 10 மணிக்கு ஓரளவு முன்னிலை நிலவரம் தெரிந்து விடும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையையும் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    11 மணி அளவில் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். 5 மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டி போல கருதப்படுவதால் தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    5 மாநில தேர்தலுக்கு முன்பும், ஓட்டுப்பதிவுக்கு பிறகும் பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து ஒரு மாதிரியாகவும் பிந்தைய கருத்து கணிப்பு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளன.

    என்றாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் ஒருமித்த குரலில் கூறி உள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கு இடையே கடும் இழுபறி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறி உள்ளன.

    மிசோரம் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது.

    5 மாநில தேர்தல் நடந்தாலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் 3 மாநில தேர்தல் முடிவுகள் தான் மிக ஆவலை ஏற்படுத்தி உள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் சுமார் 65 பாராளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. - காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். #AssemblyElections
    ×