search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 நாள் வேலை திட்டம்"

    • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகியவை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

    மதுரை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பொறுப்பாளராக இருக்கும் 2 பெண்கள், அவர்களது உறவினர் தோட்டத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்களை பராமரிப்பது போன்ற வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் ஆகியவை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறுகையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறையாக நடைபெறவில்லை. எனவே இந்த வழக்கில் அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலரை சேர்க்க உத்தரவிட்டும் இந்த திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.

    தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை எங்களுக்கு ஒரு நாள் கூட வேலை தரவில்லை. எங்களுக்கு வேலையில்லா படி வழங்கவும்,
    • அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மத்தன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    எங்கள் கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை எங்களுக்கு ஒரு நாள் கூட வேலை தரவில்லை.பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை.இந்த ஆண்டு முடிவதற்குள் 100 நாள் வேலை வழங்க முடியாது.எனவே எங்களுக்கு வேலையில்லா படி வழங்கவும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதேபோல பாலக்கோடு அருகேயுள்ள சங்கம்பட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், சேலம்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கம்பட்டி பகுதியில் சுரங்க பாதை மற்றும் பக்க சாலை அமைக்க வேண்டும்.

    இப்பகுதியில் வசிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் ரேஷன் கடை, சுடுகாடு, பள்ளிக்கு செல்ல என்று இந்த 6 வலி சாலையைத்தான் பயன்படுத்த வேண்டி யுள்ளது. இல்லையென்றால் புலிக்கரை அல்லது அல்லியூர் வழியாக 2 கிலோ மீட்டருக்கு சுற்றி செல்லவேண்டி உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.

    மேலூர்

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.

    இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
    • 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலூர்

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.

    இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3.06 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
    • மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் மற்றும் கூடுதல் கலெக்டருமான மதுபாலன் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3.06 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

    இதில் 1.69 லட்சம் பேர் இதுவரை பணிக்கு வருகை புரிகின்றனர். கடந்தாண்டு, 1.22 லட்சம் குடும்பத்தார் பணி பெற்று பயனடை ந்துள்ளனர். நடப்பாண்டில் கடந்த மாதம் 20-ந் தேதி வரை 99,955 குடும்பத்தார் பணி செய்துள்ளனர்.

    ஒரு குடும்பத்துக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் 4,826 குடும்பத்துக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு ள்ளது. 404 குடும்பத்தார் 100 நாளை விரைவில் முடிக்க உள்ளனர்.

    மனித வேலை நாட்களின் கணக்குப்படி, 108.4 சதவீத பணிகள் செய்யப்பட்டுள்ளது. இது மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

    அதேநேரம் இப்பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம், சராசரியாக 241 ரூபாயாகும். கடந்தாண்டு பணியின் அடிப்படையில் பயனா ளிக்கு குறைந்த பட்சம் 224 ரூபாயும், அதிகப்பட்சம் 255 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில், சில பயனாளிகளுக்கு அதிகப்ப ட்சமாக 261 ரூபாய் ஊதி யமாக வழங்கப்பட்டுள்ளது.உரிய காலத்தில் ஊதியம் வழங்குவதில் நமது மாவட்டம் 91.96 சதவீதமாக உள்ளது. ஆன்லைனில் மூலம் அந்தந்த பயனாளியின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதால் குறைபாடுகள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100 நாள் வேலை திட்ட புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு27(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு, இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, குறை தீர்ப்பு அதிகாரியாக பெரியசாமி என்பவர் கடந்த 25.8.2022 முதல் விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுப்பார். பிரச்சினைகள் நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்துவார்.

    பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் தங்களது புகார் மனுக்களை குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கும் மற்றும் ombudsperson.vin@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி பெற்ற பணியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தின் குறை தீர்ப்பு அதிகாரியான பெரியசாமி என்பவரை 9443177406 மற்றும் 6369876887 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 நாள் வேலை திட்டம் குறித்த புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அணுகலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் சார்ந்த பணிகள், சமுதாயம் சார்ந்த கட்டிடப் பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாட்களுக்கு பணி வழங்கப்பட்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் தொடர்பான குறைபாடுகள், பணித்தளங்களில் வேலை தொடர்பான புகார்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்களை பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் இலவச அழைப்பு எண்: 04562-252910 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • கலெக்டரிடம் ஒரு மனுவில் கொடுத்தனர்

    பெரம்பலூர்:

    ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனுவில் கொடுத்தனர். அதில், தங்கள் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான நூறு நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 12 நாட்கள் தான் ஊராட்சி நிர்வாகத்தால் வேலை தரப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு அந்த திட்டத்தில் உள்ள நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்"

    • தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான். .
    • மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆர்.நடராஜன் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீராணம்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை பாா்வையிட்டு,பெண் தொழிலாளா்களிடம் பணிகள், ஊதியம் மற்றும் அவா்களது குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

    அப்போது அவா் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறாா்கள் என்பதை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தொடக்கியுள்ளேன்.

    இடுவாய் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் மறுக்கப்படாமல் வழங்குவதுடன், நிா்ணயிக்கப்பட்ட ஊதியமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான்.

    அதே வேளையில் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அதேபோல மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.ஆகவே வரும் மக்களவை கூட்டத்தொடரில் 100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை, மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும் என்றாா்.  

    • தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை இல்லாத நிலையை உருவாக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • வேடசந்தூர் கலைஞர் நகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல் :

    தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை இல்லாத நிலையை உருவாக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.

    அதன் வரிசையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    வேடசந்தூர் கலைஞர் நகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் விசாரணையில் இதனை பதுக்கி வைத்திருந்தது நிஜாமுதீன், நசுருதீன் என தெரிய வந்தது. இவர்கள் எங்கிருந்து இதனை வாங்கி வந்தார்கள்? யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்ய வைத்திருந்தார்கள். இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ள ஊதியத்தை மத்திய அரசு வழங்குமாறு கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டு, 2006-ல் ஒருநாள் ஊதியம் ரூ. 65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து 2014-ல் ரூ.148 வழங்கப்பட்டது. இத்திட்டம் உள்ளிட்ட வறுமை ஒழிப்பு நடவடிக்கையினால் 10 ஆண்டுகளில் 14 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊதியம் நிர்ணயிப்பதற்கு அடிப்படையாக விலைவாசி குறியீட்டு எண் கணக்கில் கொள்ளப்பட்டது. விலைவாசி உயருகிறபோது நாள் ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    பா.ஜ.க. ஆட்சியின் தொழிலாளர் துறை அமைத்த வல்லுநர் குழு கடந்த ஆண்டு விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஒருநாள் ஊதியமாக ரூ.383 அளிக்க வேண்டுமென பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்துரையை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற தயாராக இல்லை. 

    100 நாள் வேலை திட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்துவதோடு, குறைந்தபட்சமாக வழங்க வேண்டிய ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் குறைவாகவே வழங்குகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அரியானா மாநிலத்தில் ரூ.315, கர்நாடகாவில் ரூ.289, கேரளா ரூ.291, தமிழ்நாடு ரூ.273 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வேறுபாட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதியம் எந்த அடிப்படையில், எத்தகைய அணுகுமுறை கையாளப்பட்டது என்கிற வெளிப்படைத்தன்மை இல்லை. இதில், விலைவாசி குறையீட்டு எண் அடிப்படையாக கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 30 சதவிகிதம் மோடி அரசு  குறைத்துள்ளது.  நிதியை அதிகரிக்காமல், இந்த திட்டத்தின் முக்கிய சாராம்சமான ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 நாட்கள் வேலை வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. 51 சதவிகித குடும்பத்தினர் இந்த ஆண்டு 30 நாட்களுக்கும் குறைவாகவும், 10 சதவிகித குடும்பத்தினர் 80 நாட்களுக்கும் அதிகமாக வேலை செய்திருக்கிறார்கள். 4.1 சதவிகித குடும்பத்தினர் மட்டுமே 2020-21 ஆம் ஆண்டில் 100 நாட்கள் வேலை செய்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிதியைக் குறைத்திருப்பது கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்குச் சமமாகும்.

    2020-21-ம் ஆண்டுக்கான இந்த திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.73 ஆயிரம் கோடியில், முந்தைய ஆண்டு நிலுவைத் தொகைக்கே ரூ.17 ஆயிரத்து 451 கோடி ரூபாய் சென்றுவிடும். அடுத்த நிதியாண்டுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில், பட்ஜெட் ஒதுக்கீட்டை விட மதிப்பீட்டுச் செலவினம் ஏற்கனவே அதிகரித்துவிட்டது. அரசுத் தரப்பு தரவுகளின்படி, வேலைவாய்ப்பு உத்தரவாத மக்கள் நடவடிக்கை திட்டத்தின் - 2021 நவம்பர் 15-ம் தேதி வரையிலான மதிப்பீட்டில் ரூ.10 ஆயிரம் கோடி வரை பற்றாக்குறை நிலவுகிறது.  இந்த திட்டத்துக்கு வழங்குவதற்காக 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் நிதியில்லை. மேலும், இந்த திட்டத்தை மத்திய அரசுதான் செயல்படுத்தவேண்டுமே தவிர, மாநில அரசுகள் அல்ல. 

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கேட்ட 13 சதவிகித குடும்பங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த நிதியாண்டின் முதல் அரை ஆண்டில் 10 மாநிலங்களில் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் 71 சதவீத ஊதியம் தாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம். இத்தகைய செயல்  உச்ச நீதிமன்ற  தீர்ப்புக்கு எதிரானதாகும்.

    கிராமப்புற இந்தியாவின் பாதுகாப்பு வலையாக 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கும் இந்த   திட்டம் உள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்குக் குறைவான நாட்களே வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்க மறுப்பதும், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்காததும் மோடி அரசின் தவறான கொள்கையால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவையே பிரதிபலிக்கிறது.

    கோப்புப்படம்

    சோனியா காந்தியின் எண்ணத்தில் உதித்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் கிராமப் பொருளாதாரம் உயர்ந்ததைக் கண்கூடாகப் பார்த்தோம். கிராமப்புற ஏழைகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி, வீழ்ந்து போன நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த திட்டத்தை வலுப்படுத்துவதோடு, அதனை விரிவுபடுத்தவும் வேண்டும். மேலும். இதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கி வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். 

    எனவே, மிகப்பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமான 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ள குறைந்தபட்சமாக விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒருநாள் ஊதியமான ரூ. 383 வழங்க மத்திய பா.ஜ.க. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாநிலங்களுக்கிடையே எவ்வித பாரபட்சமும் இல்லாமல் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தொடக்கத்தில் இருந்து இத்திட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த போக்கு தொடருமேயானால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
    கயத்தாறு பஜாரில் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த சாலைபுதூர் பகுதியில் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

    கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த லாரி, வேன், கார்களுக்கு இந்த சுங்கச்சாவடியில் அனுமதி கட்டணம் இல்லாமல் செல்வதற்கு டிரைவர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதுதொடர்பாக கடந்த வாரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இன்று (24-ந்தேதி) கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று டிரைவர்கள் அனைத்து வாகனங்களையும் கயத்தாறு பஜாரில் நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து கயத்தாறு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த டிரைவர்கள், பொதுமக்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட முயன்றனர்.

    அவர்களிடம் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையொட்டி அவர்கள் கயத்தாறு பஜாரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதனையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, டி.எஸ்.பி.க்கள் உதயசூரியன், பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சுங்கச்சாவடியில் உள்ள ஒவ்வொரு கவுண்டர்களுக்கும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

    ×