search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை திட்டத்தில்   இந்த ஆண்டில் ஒருநாள் கூட வேலை வழங்கவில்லை  -கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
    X

    வெள்ளாளப்பட்டி கிராமத்து மக்கள் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த காட்சி.

    100 நாள் வேலை திட்டத்தில் இந்த ஆண்டில் ஒருநாள் கூட வேலை வழங்கவில்லை -கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

    • 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை எங்களுக்கு ஒரு நாள் கூட வேலை தரவில்லை. எங்களுக்கு வேலையில்லா படி வழங்கவும்,
    • அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மத்தன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    எங்கள் கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை எங்களுக்கு ஒரு நாள் கூட வேலை தரவில்லை.பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை.இந்த ஆண்டு முடிவதற்குள் 100 நாள் வேலை வழங்க முடியாது.எனவே எங்களுக்கு வேலையில்லா படி வழங்கவும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதேபோல பாலக்கோடு அருகேயுள்ள சங்கம்பட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், சேலம்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கம்பட்டி பகுதியில் சுரங்க பாதை மற்றும் பக்க சாலை அமைக்க வேண்டும்.

    இப்பகுதியில் வசிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் ரேஷன் கடை, சுடுகாடு, பள்ளிக்கு செல்ல என்று இந்த 6 வலி சாலையைத்தான் பயன்படுத்த வேண்டி யுள்ளது. இல்லையென்றால் புலிக்கரை அல்லது அல்லியூர் வழியாக 2 கிலோ மீட்டருக்கு சுற்றி செல்லவேண்டி உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×