search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்
    X

    விவசாய சங்க மாநாட்டில் பங்கேற்றவர்கள். 

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
    • 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலூர்

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.

    இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.

    Next Story
    ×