search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை திட்ட புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம்
    X

    100 நாள் வேலை திட்ட புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

    • 100 நாள் வேலை திட்ட புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு27(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு, இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, குறை தீர்ப்பு அதிகாரியாக பெரியசாமி என்பவர் கடந்த 25.8.2022 முதல் விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுப்பார். பிரச்சினைகள் நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்துவார்.

    பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் தங்களது புகார் மனுக்களை குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கும் மற்றும் ombudsperson.vin@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி பெற்ற பணியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தின் குறை தீர்ப்பு அதிகாரியான பெரியசாமி என்பவரை 9443177406 மற்றும் 6369876887 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×