என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.
- அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வாகன பேரணி மேற்கொண்டு பின்னர் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்தபோது சொத்து மதிப்பு தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-
1. அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.
2. அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.
3. சொந்த வாகனம் கிடையாது.
4. அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.
5. கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.
6. வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
7. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.
8. 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.
9. 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.
10. 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.
11. 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.
12. தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை எதிர்த்து சிபிஐ தலைவர் ஆனி ராஜா களம் இறங்கியுள்ளார். பா.ஜனதா அம்மாநில தலைவர் கே, சுரேந்திரனை களம் இறக்கியுள்ளது. வயநாடு தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ந்தேி நடக்கிறது.
- தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது.
- அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாப்பூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது. அதனை தகர்த்து புதிய கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்று வரலாற்றை வாசித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
40 தொகுதியிலும் நாம் மட்டுமே போட்டியில் உள்ளோம். போட்டியிட ஆள் இருக்கிறதா? என்று கேட்டவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லை.
அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன். தம்பி அண்ணாமலையிடம் கூட நான் சொன்னேன். நீங்கள் எடுத்திருப்பது போலீஸ் பயிற்சி. நான் எடுத்திருப்பது போராளி பயிற்சி. இருவரும் மோதிப் பார்ப்போமா? என் முன்னாடி நீங்கள் ரொம்ப சாதாரணம். உங்களுக்கு பிரதமர் ஓட்டு கேட்டு வருவார். உள்துறை மந்திரி வருவார். எனக்கு எல்லாமே நான்தான். அப்ப நான்தானே கெத்து.
தமிழர்களுக்கு இந்த ஒரு நிலம்தான் உனக்கும் இருக்கு. அதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார்.
- காலை முதல் இரவு வரை சோதனை நடத்தப்பட்டதில் பணம் பறிமுதல்.
நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை திடீரென அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சோதனை முடிவில் 4.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் நாமக்கள் எஸ்பிஐ வங்கியில் ஒப்படைத்துள்ளனர்.
பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சந்திரசேகரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராயலசீமா அல்லது கொனசீமா இடங்களில் நாங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
- நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று கோத்தபெட்டா கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராயலசீமா அல்லது கொனசீமாவில் நாங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பசியுடன் உள்ள சிங்கம் வேட்டைக்கு காத்திருப்பது போல், இந்த தேர்தலில் அனைத்து துறையை சேர்ந்த மக்களும் இரண்டு பட்டன்களை அழுத்தி ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை தோற்கடிக்க மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொனசீமான என்பது அமைதியானது என்று அறியப்பட்டது. இதற்கு முன்னதாக இங்கு வன்முறை நிகழ்ந்தது கிடையாது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தாக்குதல், நில அபகரிப்பு, பொய் வழக்கு, அட்டூழியங்கள் கமிஷன், ஜாதி அரசியல், மாபியா ராஜ்ஜியங்கள், கஞ்சா, அனைத்து வகையான ஊழல்கள் ஆகியவை அதிகரித்துள்ளது.
ஜகன்மோகன் ரெட்டி அரசின் அட்டூழியங்களை நிறுத்துவதற்கு தெலுங்கு தேசம், ஜனசீனா மற்றும் பாரதிய ஜனதா இணைந்து மக்கள் முன் வந்துள்ளன.
மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். ஏமாற்றப்பட்ட மாநிலத்தை காப்பாற்றி சரியான பாதையில் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். அதே நோக்கத்தில் மூன்று அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
- தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான்.
- இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது; இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான்.
இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
ஜனநாயக போர்க்களத்தில் மனசாட்சியும் மக்களுமே என்றும் எஜமானர்கள். இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும். சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி.
அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும்போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.
இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்.
10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இதுமாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை பிரதமர் மோடி மந்திரியாக வைத்திருக்கிறார்.
சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார்.
மிக்ஜம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார்.
மக்களை தப்பு கணக்கு போடாதீர்கள்; நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்தார்.
- பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும்
- யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள்
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வேங்கடேசனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், "பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும். பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வழக்குகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு விட்டது.
நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டன. டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதெல்லாம் வென்று விடுவோம் என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்கிற செயலா இது? பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது.
பணம் மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள். பாஜக அரசு நம்முடைய வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
- தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்ல இருந்தார்..
தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.
இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்துள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- முசிறி துறையூர் சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்த ரவி பச்சமுத்து, அங்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
- அப்போது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பாரிவேந்தர் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக முசிறி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட டாக்டர் ரவி பச்சமுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் பெருமைமிக்க பிரதமராக வீற்றிருக்கும் மோடி மூன்றாவது முறையாகவும் தேர்தலில் வென்று சாதனை படைப்பார் என திரண்டிருந்த வாக்காளர்களிடையே நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாங்கரைப்பேட்டையில் குழுமியிருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பாரிவேந்தருக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்பின், திருச்சி மாவட்டம் முசிறியின் பல்வேறு இடங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரிவேந்தர் மீண்டும் எம்.பி.யானால் அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் பாதை, மகளிர் அரசு கல்லூரி, 1,500 குடும்பங்களுக்கு உயர்தர இலவச சிகிச்சை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்வார் என உறுதி அளித்தார்.
பாரிவேந்தர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் போட்டியிடுகிறார். டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எம்.பி.யாக வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, முசிறி துறையூர் சாலையில் உள்ள பேக்கரியில் தேநீர் அருந்திய ரவி பச்சமுத்து, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியபோது, முசிறியில் மகளிர் கலைக்கல்லூரி, காவிரி ஆற்றில் தடுப்பணை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தரவேண்டும் என மக்களும், விவசாயிகளும்கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், பாரிவேந்தர் 3 கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் உங்களுக்காக பணியாற்ற தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
- அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வட சென்னைக்கு கே,எஸ்,சீனிவாசன் நியமனம்.
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவது:-
பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பாராளுமன்றத் தொகுதிகளுக்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
அதன்படி, ராமநாதபுரம் தொகுதிக்கு மலேசியா.எஸ் பாண்டியன், எம்.எஸ். நிறைகுளத்தான், எஸ்.எம். சாமிநாதன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், சிதம்பரம் தொகுதிக்கு என்.சதன் பிரபாகர், கு. ராஜமாணிக்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வட சென்னைக்கு கே,எஸ்,சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார்
- வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும்
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஈரோடு தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈஸ்வரன் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கட்சியை பாஜக அழித்துவிடும். அதிமுக என்ற கட்சி இருக்காது.
எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார்.
- காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது அவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது
- நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள்
தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், "நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தால் நமக்கென்ன, இல்லை யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம். ஒட்டு போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இது போன்ற மனநிலையை தூக்கி ஓரமா வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லையென்றாலும் நமது குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நமது அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.
காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது. உங்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்களால் நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்கள். அதில் நம்முடைய சுயநலமும் இருக்கிறது. நாம் எல்லாரும் சேர்ந்தது தானே நாடு.
நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள். இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லை என்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டுப் போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்கள். தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்கள்" என்று பேசியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை.
- 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்
"திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் அவர் கேட்டிருந்தார்.
ஆனால் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. இதனையடுத்து அதிமுக - புரட்சி பாரதம் கூட்டணி முறியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்தனர். பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் தொடரலாம் என கூறியதால் அதில் தொடர முடிவு செய்யப்பட்டது என்றார்.
40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்.






