search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iswaran"

    • பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார்
    • வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும்

    அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஈரோடு தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈஸ்வரன் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கட்சியை பாஜக அழித்துவிடும். அதிமுக என்ற கட்சி இருக்காது.

    எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார்.

    • தமிழகம்-சிங்கப்பூர் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை.
    • ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தியதாக முதலமைச்சர் தகவல்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது முகாம் இல்லத்தில்,  சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்புத்துறை மந்திரி ஈஸ்வரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சிங்கப்பூர் நாட்டு துணை தூதர் எட்கர் பாங்க் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 


    பின்னர் இந்த சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு அமைச்சர் ஈஸ்வரன் அவர்களை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

    சிங்கப்பூரில் தமிழ் மொழி, அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி (பொறுப்பு) ஈஸ்வரன் கூறியுள்ளார். #Singapore #Tamil #OfficialLanguage
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

    தமிழ் மொழியின் இந்த அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி (பொறுப்பு) ஈஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்று அங்குள்ள தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது.

    அதில் மந்திரி கூறுகையில், ‘தமிழ் மொழி தொடர்பான அரசின் கொள்கை முடிவும், ஆதரவும் தெளிவாக உள்ளது. மற்றபடி ஒவ்வொரு நாளும் தமிழை பேசி அதை வாழும் மொழியாக மாற்றுவது அனைத்தும் அந்த சமூகம், குறிப்பாக இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது’ என்றார். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு, தமிழ் மொழி திருவிழா நடத்துவது சிறந்த வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   #Singapore #Tamil #OfficialLanguage 
    ×