search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KMDK"

    • பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார்
    • வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும்

    அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஈரோடு தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈஸ்வரன் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கட்சியை பாஜக அழித்துவிடும். அதிமுக என்ற கட்சி இருக்காது.

    எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது
    • திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.

    அதன்படி திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

    10 ஆண்டுகள் கொமதேக தலைமை நிலைய செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்தவர் சூரியமூர்த்தி. அவர் 2001 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியிலும், 2006-ல் வெள்ளக்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாமக்கல் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தான் திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஈஸ்வரன் "40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்" என தெரிவித்தார்

    சென்னை:

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு முடிவானது

    கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் நாமக்கல் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தான் திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. 

    வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    கோவை:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகரம் மேற்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை மேற்கு மாநகர தலைவர் சுபாஷ், மாநகர செயலாளர் சங்கனூர் பிரேம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவை மேற்கு மாநகர இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் கேபிள் சீனு, பகுதி செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் வேலு கவுண்டர், வர்த்தக அணி துணை செயலாளர் கோவிந்தராஜ், நல்லாம்பாளையம் மனோகர், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.
    ×