என் மலர்
நீங்கள் தேடியது "சு. வேங்கடேசன்"
- அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
- போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இரவோடு இரவாக காவல்துறை நடத்திய 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல்.
அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை.
அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும்
- யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள்
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வேங்கடேசனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், "பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும். பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வழக்குகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு விட்டது.
நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டன. டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதெல்லாம் வென்று விடுவோம் என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்கிற செயலா இது? பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது.
பணம் மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள். பாஜக அரசு நம்முடைய வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.






