என் மலர்tooltip icon

    உலகம்

    • ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதான பாவெல் துரோவ் தனது சகோதரர் நிகோலாய் உடன் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியை நிறுவினார்
    • தற்போது துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டெலிகிராம் செயல்பட்டு வருகிறது

    பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதான பாவெல் துரோவ் தனது சகோதரர் நிகோலாய் உடன் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியை நிறுவினார். தற்போது துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் பணியாற்றி வரும் பாவெல் துரோவ் துபாய் குடிமகனாக அங்கு  வசித்து வருகிறார்.

     

    இந்நிலையில் நேற்று இரவு தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து வாரண்ட்டோடு பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    தீவிரவாத இயக்கங்களுக்குத் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்பட்டு வருகிறதென்றும், அதை டெலிகிராம் நிறுவனம் எந்த தடையும் இன்றி அனுமதித்து, பயனர்களின் தகவல்களை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் நாட்டு போலீஸ் அவரை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

     

    • கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்
    • இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ஜெர்மனி நாட்டில் சொலிங்ஜென் நகரில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்து மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சொலிங்ஜென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சொலிங்ஜென் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றபோது இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் 2 ஆண்கள் [வயது 56, 67] மற்றும் ஒரு பெண்ணை[வயது 56] கொடூரமாக கொன்றுளளார். இந்த தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

     

    சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்நதனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து நடத்தி வரும் நிலையில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது நபரைக் கைது செய்துள்ளனர்.

     

    இதற்கிடையே இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்குப் பழிவாங்க இந்த தாக்குதலை நடந்தியகாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்ட 26 வயது நபருக்கும், ஐ.எஸ். அமைப்புக்கும் இருக்கும் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். 165,000 மக்கள் வாழும் சொலிங்ஜென் நகரம் அங்குள்ள மிகப்பெரிய கத்தி தயாரிப்பு தொழிற்சாலைக்கு பெயர் போனது குறிப்பிடத்தக்கது.

    • அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தொழில்நுட்ப கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

     


    இதன் காரணமாக கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி பூமிக்கு திரும்ப இருக்கிறது.

    சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் இருவரும் பூமிக்கு திரும்புவது பற்றி கேள்விக்குறி இருந்து வந்த நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

    வெறும் எட்டு நாட்கள் ஆய்வு பணிக்காக விண்வெளி மையத்திற்கு சென்ற இருவரும் தற்போது எட்டு மாதங்கள் வரை விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா, புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்கிறார்கள். 

    • மாணவர்கள் இந்தக் கடிதங்களை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
    • சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

    பீஜிங்:

    சீனாவின் பீஜிங் நகரில் பீஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு 0.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட மிக மெல்லிய கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்தக் கடிதங்களை நினைவுப் பொருளாக வைப்பதற்குப் பதில், அவற்றை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

    இதையடுத்து, மாணவர்கள் கடிதங்களைப் பரிசோதிப்பதை நிறுத்தும்படியும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன சாதனைகளை பிரதிபலிக்கும் தனித்துவமான கலைப்பொருளாக பாதுகாக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியது.

    தங்கள் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் பொருட்கள் எவ்வளவு நீடித்த மற்றும் நம்பகமானவை என்பதைக் காட்ட விரும்பவே இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் சென்ற பிரதமர் மோடியுடன் அதிபர் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
    • பிரதமர் மோடி-அதிபர் ஜெலன்ஸ்கியின் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது.

    கீவ்:

    பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக உக்ரைன் நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியுடன் அதிபர் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    அந்தப் புகைப்படத்தை அதிபர் ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், இந்தியா-உக்ரைன் இடையிலான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது' என குறிப்பிட்டிருந்தார்.

    அதிபர் ஜெலன்ஸ்கியின் இந்தப் பதிவு சில மணி நேரங்களில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட 'லைக்ஸ்'களைப் பெற்றது. இது அவரது சமூக வலைதள பதிவுகளில் சாதனையாக மாறியது.

    இதற்கு முன் 7.8 லட்சம் 'லைக்ஸ்'களை பெற்றதே அவரது அதிகபட்சமாக இருந்தது. தற்போது பிரதமர் மோடியுடனான புகைப்படம் அதை முறியடித்துள்ளது.

    சமூக வலைதளத்தில் அதிக பாலோயர்ஸ் கொண்ட உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

    • வெள்ளத்தில் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
    • சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு, வீடுகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டன

    பிஜீங்:

    வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.

    மேலும், கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த கனமழையால் ஹுலுடாவ் நகரத்திற்கு குறிப்பாக ஜியான்ஜாங் மற்றும் சுய்சோங் மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு, வீடுகள், பயிர்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன

    கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    • வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது
    • மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்க பரிந்துரைத்துள்ளார்

    ராயல் பேங் ஆப் கனடா 

    உலகம் முழுவதிலும் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய சர்வதேச வங்கியான ராயல் பேங் ஆப் கனடாவில் [Royal Bank of Canada] சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதாவது ராயல் பேங் ஆப் கனடா வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த நேடைன் அன் [Nadine Ahn] கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

     

    காதல் உறவு 

    வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் நேடைன் தொடர்பிலிருந்த மேசன் என்ற அந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

    வழக்கு 

    மேலும் இதுதொடர்பாக நேற்று [ஆகஸ்ட் 23] நீதிமாறத்திலும் ராயல் பேங் ஆப் கனடா வங்கி வழக்குத் தொடர்ந்துள்ளது. தனது அறிக்கையில் ராயல் பேங் ஆப் கனடா கூறியதாவது, வங்கியின் விதிகளை மீறி தலைமை நிதி அதிகாரியாக இருந்த நேடைன் ஆன் தனக்குக் கீழ் வேலை செய்துவந்த மேசனுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக உறவு வைத்துள்ளார். ப்ராஜெக்ட் கென் என்ற திட்டத்தில் நேடைன் ஆன் மேற்பார்வையில் பணியாற்றிவந்த மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உட்படச் சிறப்புச் சலுகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

     

    நஷ்டஈடு 

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள நேடைன் ஆன், தங்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதமான காதல் உறவும் இல்லை என்றும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வங்கி மக்கள் மத்தியில் தனது பெயருக்கு வெளிப்படையாகக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆன் மற்றும் மேசன் ஆகிய இருவரும் வங்கியிடம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

    • சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடலில் இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும்.
    • அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் இந்த விற்பனையை அங்கீகரித்துள்ளார்

    அமரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை 4 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் இந்த விற்பனையை அங்கீகரித்துள்ளார்

    இந்த ஒப்பந்தத்தில் AN/SSQ-53G, AN/SSQ-62F மற்றும் AN/SSQ-36 ஆகிய நீர்மூழ்கி எதிர்ப்பு சோனோபாய் கருவிகள் இந்தியாவுக்கு விற்கப்பட உள்ளது. இந்திய எல்லையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடற்பகுதியில்  இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    மேலும் ராஜ்நாத் சிங் இந்த பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார். பாலஸ்தீன போர், மேற்கு வங்காள விவகாரம் உள்ளிட்டவற்றைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடினர்
    • அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யான் கிர்பி கருத்து தெரிவித்துள்ளார்

    ரெயில் பயணம் 

    போலந்து நாட்டுக்கு 2 நாள் பயணமாகச் சென்ற மோடி அங்கிருந்து RAIL FORCE ONE என்ற சொகுசு ரெயில் மூலம் 7 மணிநேரம் பயணித்து நேற்றைய தினம் [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். தலைநகர் கீவ்-வில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் சுதந்திரம்  பெற்ற பின்னர் இந்திய பிரதமர் ஒருவர்  உக்ரைன் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

     

    ஆலோசனை...

    இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது, இந்தியா-உக்ரைன் இடையேயான வர்த்தகம், பொருளாதார பிரச்சனைகள், பாதுகாப்பு, மருந்துகள், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    ஒப்பந்தங்கள் 

    வேளாண்மை மற்றும் உணவுத்துறையில் ஒத்துழைப்பு, மருத்துவ உற்பத்தி பொருட்கள் ஒழுங்கமைப்பு துறையில் ஒத்துழைப்பு, உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மானிய உதவியை இந்தியா வழங்குதல் மற்றும் 2024-28 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதவிர்த்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று ஜெலின்ஸ்கிக்கு மோடி உறுதியளித்தார். மேலும் ஜெலின்ஸ்கியை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அமரிக்கா  சொல்வது என்ன?

    இந்நிலையில் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்காவும் தனது  கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யான் கிர்பி கூறியுள்ளதாவது, மோடியின் உக்ரைன் பயணத்தின் மூலம் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை உயர்த்துவதில் பரஸ்பர விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஷிய -உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தியா செயல்பட முடிந்தால் உதவியாக இருக்கும் என கருதுகிறோம் என்று தெரிவித்தார். 

    • வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
    • நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள்.

    ஏதன் ஈவென்ஸ் [Ethan Evans] தனது மண வாழ்வுக்கு வேலையிடத்தால் வந்த வினையை குறித்து மனம் திறந்துள்ளார். லிங்க்கிட்- இன் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் தொடக்கத்தில் வேலை செய்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ, வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

    எனது மனைவியும் நானும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது. நான் எனது வேலையையும் விட்டுவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். அந்த சிஇஓவின் செயல்கள் குறித்து நான் முன்னரே அறிந்திருந்தாலும் எனது பொருளாதார சூழல் காரணமாகவும், அவர் எப்படியும் அவரது முயற்சிகளில் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கையிலும், அங்கு தொடர்ந்து வேலை செய்து பெரிய தவறு செய்துவிட்டேன். அந்த தவறுக்கு நான் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

     

    நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள். இதுபோன்ற [ஸ்டார்ட் அப் சிஇஓ] பாம்புகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்றால் அவர்கள் பின்புலம் குறிக்கும், அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது குறித்து முன்னரே அறிந்துகொள்ளுங்கள் என்று கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து ஊழியர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். ஏதன் அமேசான் சிஇஓ ஜெப் பெசோசை பற்றி தான் கூறுகிறாரா என்று பலர் கேள்வியெழுப்பிய நிலையில் ஏதன் அமேசானில் பணிக்கு சேர்வதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம் குறித்து இங்கு கூறியுள்ளார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ள்ளது. 

     

     

    • இந்த போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்று மோடி தெரிவித்தார்
    • விரைவில் இந்தியா வந்து இந்திய மக்களிடம் அதற்கான ஆதரவைக் கோருவேன் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்

    பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக போலாந்து சென்று அங்கிருந்து 7 மணி நேரம் ரெயில் பயணமாக நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். அங்கு தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

    மோடி பேசுகையில், இந்த போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஒருபக்க சார்பாகவேதான் இருக்கிறோம். அது அமைதியின் பக்கமே ஆகும். நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்திருக்கிறோம். அங்கே போருக்கு இடமில்லை. மகாத்மா காந்தியின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறோம், அவர் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு அமைதியின் செய்தியை வழங்கியவர். எனவே இரு தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசி இந்த நெருக்கடிகளில் வெளிவருவதற்கான வழிகளை தேட வேண்டும். உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மோடி புதின் பக்கம் இருப்பதை விட அமைதியின் பக்கமே அதிகம் நிற்கிறார். நடுநிலைமையாக அன்றி இந்த போரில் இந்தியா எங்கள் பக்கம் நிற்க வேண்டும். இந்தியா உக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். விரைவில் இந்தியா வந்து இந்திய மக்களிடம் அதற்கான ஆதரவைக் கோருவேன். இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா பெரும்பங்காற்ற வேண்டும். இந்தியா உலகில் முக்கியமான நாடு. இந்தியாவால் நிச்சயம் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    • போா் குறித்து விவாதிப்பதற்காகக் கடந்த ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தின் முதல் உக்ரைன் அமைதி மாநாடு நடந்தது
    • கடந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியா அமைதித் தீர்மான கம்யூனில்[communique] சேராமல் தவிர்த்து விட்டது.

    பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக போலாந்து சென்று அங்கிருந்து 7 மணி நேரம் ரெயில் பயணமாக நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ் -இல் சந்தித்த மோடி, போர் நிறுத்தம், இருநாட்டு உறவுகள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி இரண்டாவது உக்ரைன் அமைதி மாநாட்டை ஏற்று நடந்த பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

     

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் போா் குறித்து விவாதிப்பதற்காகக் கடந்த ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தின் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் முதல் உக்ரைன் அமைதி மாநாடு நடந்தது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால் ரஷியா இதில் பங்கேற்காததால் மாநாடு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கிடையே விரைவில் 2 வது மாநாட்டை நடத்த உக்ரைன் திட்டமிட்டு வருகிறது.

    அந்த வகையில் தெற்கு நாடுகளில் ஒன்று இந்த 2 வது மாநாட்டை ஏற்று நடத்த வேண்டும் என்று விரும்புவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, கத்தார், துருக்கி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனும் மாநாட்டை நடத்துவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்த ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியிடமும் இதுகுறித்து பேசியதாகத் தெரிவித்தார். இந்தியா மிகப்பெரிய நாடு, மிகப்பெரிய ஜனநாயகமாக உள்ளது. இருந்தாலும்கடந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியா அமைதித் தீர்மான கம்யூனில்[communique] சேராமல் தவிர்த்து விட்டது. எனவே 2வது மாநாட்டை இந்தியா நடத்துவதில் சிக்கலும் இருக்கிறது என்று தெரிவித்தார். 

    ×