என் மலர்tooltip icon

    உலகம்

    • டெலிகிராம் நிறுவனம் கண்டன அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
    • கைது செய்யப்பட்ட பாவெல் துரோவை அடுத்த 96 மணி நேரத்துக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    துபாயை தலைமையிடமாக கொண்டு உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து டெலிகிராம் நிறுவனம் கண்டன அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், 'ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் வகுத்த விதிகளின்படியே டெலிகிராம் செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் சிஇஓ பாவெல் துரோவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அவர் அடிக்கடி ஐரோப்பா சென்று வருபவர், தளத்தைத் தனி நபர்கள் தவறாக பயனப்டுத்துவற்காக அந்த தளத்தையோ நிறுவனத்தின் தலைவரையோ குற்றம் கூறுவது என்பது அபத்தமானதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட பாவெல் துரோவை அடுத்த 96 மணி நேரத்துக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாவெல் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே பாவெல் துரோவின் கைதை கண்டித்து உலகம் முழுவதிலும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

     

    • அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது.
    • நிதி அளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு புதியவர்கள்

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.


    இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்காக கடந்த 1 மாதத்தில் மட்டும் ரூ.4,528 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.

    இதில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு தேர்தல் நிதி அளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு புதியவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் போட்டி போட்டு நிதி அளித்துள்ளனர்.

    இதன் மூலம் கமலாஹாரிஸ் தனது பிரசாரத்தின் மூலம் பெரிய மற்றும் சிறிய நன்கொடையாளர்களை கவர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

    • ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது
    • வானிலேயே தகர்க்கப்பட்ட டிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களின் மீது வவிழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது

    ரஷியா உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளும் மேலாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைன் படைகள் ரஷிய பகுதிகளுக்குள் நுழைந்தது தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் கூர்க்ஸ் உள்ளிட்ட பிராந்தியங்களை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதனால் ரஷிய ராணுவம் பெரிய அளவிலான தாக்குதலுடன் பதிலடி கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை, 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த சம்பத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனால் வானிலேயே தகர்க்கப்பட்டடிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள 38  மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையில் சராதோவ் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சராதோவ் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தடைபட்டுள்ளன.

    பயங்கரவாதிகள் 10 வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்துகளில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்திய பயங்கரவாதிகள் அவர்களை இறக்கிவிட்டு அவர்களின் அடையாளங்களைச் சரிபார்த்த நிலையில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பலுசிஸ்தானின் முசாகெல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. மேலும் பயங்கரவாதிகள் 10 வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

    இந்த கொடூர சம்பவத்துக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • காம்ரேட் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்'

    ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு மேற்குலகம் ஆதரவு அளித்து வருவதுபோல், பாலஸ்தீனத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளும், ரஷியாவுக்கு சீனா வட கொரியா ஆகியவை ஆதரவாக நிற்கின்றன.

    இந்நிலையில் இந்த போர்கள் மூன்றாம் போர் மூள்வதற்கான முன்னறிவிப்புகளாகவே உள்ளன என்று பலரும் பயத்தில் உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் உலகப் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் நடந்த லெபனான்-இஸ்ரேல் இடையேயான வான் வெளி தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக அமரிக்க வான் படைத் தளபதி CQ பிரவுனின் திடீர் மத்திய கிழக்கு பயணம் ஆகியவற்றை முன்வைத்து,

    'உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிசென்று கொண்டிருக்கிறது ஆனால் தூங்குமூஞ்சி [sleepy] ஜோ [பைடன்] கலிபோர்னியா பீச்சில் தூங்கிக்கொண்டு இருக்கிறார். ஜனநாயகவாதிகளால் [கட்சியால்]ஜோ புறக்கணிக்கப்பட்டுவிட்டார். காம்ரேட் [கம்யூனிஸ்ட்] கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.  

    • வெற்றி பெற்ற பிறகு மேடையில் தென் கோரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர்
    • வீரர்களுக்கு வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது

    2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற வட கோரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்ததால் சிக்கலில் மாட்டியுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற பிறகு மேடையில் தென் கோரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர். போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

     

    இந்நிலையில் தற்போது வட கொரியா திரும்பியுள்ள அனைத்து வீரர்களுக்கும் வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டை மீறி எதிரி நாடான தென் கொரியா வீரர்களுடன் சிரித்ததற்காக டேபிள் டென்னிஸ் வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

    • வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவப்பட்டன
    • இஸ்ரேலில் நேற்று அதிகாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது

    இஸ்ரேல் திடீர் தாக்குதல் 

    லெபனான் மீது நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலைகளைக் குறிவைத்து 100 இஸ்ரேலிய பைட்டர் ஜெட் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

    வடக்கு இஸ்ரேலில் பொதுமக்கள் மீது ஹிஸ்புல்லா பெரியளவிலான தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அதனை முறியடிக்கவே இந்த தற்காப்புத் தாக்குதல் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

    ஹிஸ்புல்லா பதிலடி 

    இத் தாக்குதலால் லெபனானில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் பதிலடி கொடுத்தனர். அந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. வடக்கு இஸ்ரேல் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்ட்டனர். இஸ்ரேல் முழுவதும் நேற்று அதிகாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச விமான சேவைகள் பெரிய அளவில் பாதித்தன. இந்த தாக்குதல்களால் லெபனானில் 3 பேரும் இஸ்ரேலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

     

     

    போர் 

    இந்நிலையில் இந்த தாக்குதல்களை மேலும் தொடர இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இருவரும் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தலைவர் ஹசன் நஹ்ருல்லா கூறுகையில், இஸ்ரேல் மீது தொலைதூர ஏவுகணை அல்லது துல்லியமாக தாக்கும் ஏவுகணை பயன்படுத்தும் எண்ணம் ஹிஸ்புல்லாவுக்கு கிடையாது. ஆனால், வரும் காலங்களில் இஸ்ரேல் மீது இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்' என்று தெரிவித்தார்.

     

    இதுதொடர்பாக பேசிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், நாங்கள் முழுமையான போரை எதிர்நோக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, எதைச் செய்தும் எங்கள் நாட்டை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம், எங்களை காயப்படுத்த நினைப்பவர்களை நாங்கள் காயப்படுத்துவோம், இது [தாற்காலிக நிறுத்தம்] கதையின் முடிவல்ல என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தங்களைத் தற்காத்துக்கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமரிக்கா தெரிவித்துள்ளது.  

    • இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.
    • மாயமான பலரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. லட்சக்கணக்கானோர் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.

    இதற்கிடையே, இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

    ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்தன.

    இந்நிலையில், இந்தோனேசியா கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என்றும், மாயமான பலரை மீட்புக் குழு தேடி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரானில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றது.
    • பிரேக் பிடிக்காததால் அந்தப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லாஸ்பெலா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று பஞ்சாப் நோக்கிச் சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழு அங்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து அறிந்த பஞ்சாப் முதல் மந்திரி மரியம் நவாஸ் இரங்கல் தெரிவித்தார்.

    இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணிகளை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கினர்.

    தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பேருந்தில் சிக்கி இருந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரு விபத்துகளில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • விசா இல்லாததால் விமான நிலையத்தில் ஒரு வாரமாக தவித்து வருகிறார்கள்.
    • ஆசியாவில் இருந்து, வட அமெரிக்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு இடமாற்றத்திற்காக இங்கு வருகிறார்கள்.

    பிரேசிலியா:

    இந்தியா, நேபாளம். வியட்நாமில் இருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் பிரேசில் நாட்டுக்கு சென்றனர். சுமார் 660 பேர் அங்குள்ள சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்தனர். அவர்கள் தங்களை பிரேசிலுக்குள் அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் விசா இல்லாததால் விமான நிலையத்தில் ஒரு வாரமாக தவித்து வருகிறார்கள். அவர்கள் தரையில் படுத்து தூங்குகிறார்கள். உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் பரிதவிக்கிறார்கள். இதில் சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, கனடாவுக்கு செல்வதற்காக பிரேசில் வழியை வெளிநாட்டினர் பயன்படுத்துவதை தடுக்க விதிகளை அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக்கி புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. பிரேசில் விசா இல்லாத வெளிநாட்டுப் பயணிகள் வேறொரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் அல்லது தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று பிரேசிலின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதனால் 660 அகதிகள் பிரேசிலுக்குள் நுழைய முடியாமல் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பிரேசிலில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை ஏற்றம் கண்டுள்ளது, குறிப்பாக ஆசியாவில் இருந்து, வட அமெரிக்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு இடமாற்றத்திற்காக இங்கு வருகிறார்கள்.

    பிரேசிலுக்குள் நுழைய, அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அகதி அந்தஸ்தைக் கேட்கிறார்கள். ஆனால் அதன்பின் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார்கள். தற்போது விசா இல்லாமல் சாவ் பாலோவுக்கு வரும் பயணிகள் பிரேசிலில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர்.

    • இஸ்ரேலில் இன்று அதிகாலை 6 மணி முதல் அடுத்த 48 மணிநேரத்துக்கு அவரச நிலை பிறப்பிக்கப்பட்டது.
    • கோலன் குன்றுகளில் உள்ள 4 தளங்கள் உள்பட 11 இஸ்ரேல் ராணுவ தளங்கள், முகாம்கள் மீது 320-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

    போர்ப் பதற்றம் 

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கடந்த 30 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் எந்த நேரமும் போர் மூளலாம் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஹிஸ்புல்லா கிளர்ச்சி 

    இதற்கிடையில் லெபனான் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவினர் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் ஏவுகணைகளை வீசி அடிக் கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

     

    இஸ்ரேல் [தற்காப்பு] தாக்குதல் 

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலைகளைக் குறிவைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலைக் குறி வைத்து பொதுமக்கள் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்றும் அதனால் தற்காப்புக்காக தங்கள் தரப்பிலிருந்து இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக இஸ்ரேல் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள லெபனான் மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

    ஹிஸ்புல்லா பதிலடி 

    இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலால் லெபனானில் பெரும் பதற்றம் நிலவியது. மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இத் தாக்குதலால் லெபனானில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.லெபனான் மீதான தாக்குதலையடுத்து இன்று அதிகாலை, ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்தன.

     

    அவசர நிலை பிரகடனம் 

    இதையடுத்து இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் உஷார்ப்படுத்தப்பட்டனர். குறிப்பாக லெபனான் எல்லையை ஒட்டி உள்ள வடக்கு இஸ்ரேல் பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இஸ்ரேலில் இன்று அதிகாலை 6 மணி முதல் அடுத்த 48 மணிநேரத்துக்கு அவரச நிலை பிறப்பிக்கப்பட்டது.

     

    பழிக்குப் பலி

    இதற்கிடையில் இதுகுறித்து ஹிஸ்புல்லா இயக்கம் கூறும்போது, இஸ்ரேலின் ராணுவ தளங்களைக் குறிவைத்து, இஸ்ரேலுக்குள் ஏவுகணை, டிரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டன. மெரோன் தளம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் உள்ள 4 தளங்கள் உள்பட 11 இஸ்ரேல் ராணுவ தளங்கள், முகாம்கள் மீது 320-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

    இஸ்ரேலுக்கு எதிரான எங்களது பதிலடித் தாக்குதலின் முதல் கட்டம் முழு வெற்றியுடன் முடிவடைந்தது. ஹிஸ்புல்லா தளபதி புவாட் ஷுக்ரைக் கொன்றதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காசா போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இஸ்ரேல்-லெபனான் இடையேயான மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

    • செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது
    • கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்

    சமூக ஊடகமாகவும் செய்தி பரிமாற்ற செயலியாகவும் விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும் பயங்கரவாத்துக்கு துணை நிற்பதாவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் டெலிகிராம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் இந்த கைது குறித்து மற்றொரு சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது பதிவில் குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், 2030 ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் மீம் [MEME] ஒன்றுக்கு லைக் போட்டால் கூட உங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாவெல் துரோவ் பிரான்சில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு எக்ஸ் தளத்தின் ஏஐ தொழில்நுட்பமான GORK அளித்த பதிவையும் பகிர்ந்துள்ளார். மேலும் பாவெலுக்கு 20 வருடன் சிறை தண்டனை கிடைக்கும் என்று பயனர் ஒருவரின் பதிவை பகிர்ந்து, 20 ஆண்டுகளா.. என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே பாவெல் துரோவின் கைது குறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. பெருமபாலான சமூக வலைத்தளங்களை மூலமும் தனி நபரோ குழுவோ சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படுத்துவது அவ்வப்போது வெளிச்சத்து வரும் நிலையில், டெலிகிராமை மட்டும் குறிவைப்பது, பாவெல் துரோவ் ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலா என்ற கேள்வியும் நெட்டிசன்கள் எழுந்துள்ளது. மேலும் எக்ஸ் தலத்தில் பாவெல் துப்ரோவ் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

    ×