என் மலர்tooltip icon

    உலகம்

    • புதின் நாட்டின் [ரஷியா] பொருளாதாரத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்.
    • உக்ரைனின் அமைதியைக் கருத்தில் கொண்டு ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

    உக்ரைனில்  மோடி 

    பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக போலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். போலந்தில் இருந்து 7 மணி நேர ரெயில் பயணத்திற்கு பிறகு நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார் மோடி . உக்ரைனில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ் -இல் சந்தித்து பேசினார். ரஷியா உக்ரைன் போருக்கு இடையில் பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம், இருநாட்டு உறவுகள் குறித்து மோடியும் ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

     

     ஜெலன்ஸ்கியின் வேண்டுகோள் 

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, புதின் நாட்டின் [ரஷியா] பொருளாதாரத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார். ரஷியா பிரதானமாக எண்ணெய் வளத்தில் இருந்துதான் பணம் பார்க்கிறது. அதைத்தவிர அவர்கள் நம்பிக்கை வைக்கும்படி வேறு எதுவும் இல்லை. இந்த எரிசக்தி ஆற்றல் ஏற்றுமதியில்தான் பிரதானமாக ரஷியா ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் போருக்குப் பிறகு ரஷியா மீது மேற்குலகம் பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தாலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இன்னும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் எரிசக்தியை ஏற்றுமதி செய்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய ஜெலன்ஸ்கி, ரஷியாவுடனான இந்த வர்த்தகத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிறுத்திக்கொண்டால் அது ரஷியாவுக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். இதன்மூலம் போர் நிறுத்தத்துக்கு ரஷியாவை சம்மதிக்க வைக்க முடியும் என்பதே ஜெலன்ஸ்கி வலியுறுத்தும் கூற்றாகும்.

    இந்தியா அரசின் முரண் 

    2022 ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு மேற்கு நாடுகள் தடை விதித்திருந்தன. இதனால் ஆசிய நாடுகளைக் கவர ரஷியா தங்களின் எண்ணெய் விலையை வெகுவாகக் குறைந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவில் இருந்து அதிக எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் தொடங்கின. இந்தியா தொடர்ந்து இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது குறித்து மேற்கு நாடுகளும் இந்தியாவை விமர்சித்திருந்தன.

     

    போர் தொடங்கிய பின்னர் இந்தியாவின் ரஷிய எண்ணெய் இறக்குமதி 41 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளி ரஷிய எண்ணெய்யை வாங்குவதில் இந்தியா முன்னுக்கு வந்தது. இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷிய எண்ணெய்யை புறக்கணிக்க இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மோடி உக்ரைனின் அமைதியைக் கருத்தில் கொண்டு ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பாரா? என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

    • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் வங்கதேச முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு பின்னர் இந்த தகவல் வெளியாகியது.

    ஷேக் ஹசீனா அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஸ் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
    • இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் 40 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முகேஷ் அம்பானி சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
    • முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தம்பதியினர் வாக்கிங் சென்றனர்.

    முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி சுவிட்சர்லாந்தில் வாக்கிங் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    வீடியோவின் படி நீட்டா அம்பானி சிவப்பு நிற ஆடையிலும், முகேஷ் அம்பானி ஃபார்மல் சூட் அணிந்து காணப்படுகின்றனர். பாதுகாப்பு குழுவினர் யாரும் இன்றி இருவர் மட்டும் தெருவில் நடந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

    அம்பானி குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கொண்டாடும் சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ளன. மேலும் விடுமுறை காலத்தில் அவர்கள் அங்குள்ள ஒபுலன்ட் பர்கென்ஸ்டாக் ரிசார்டில் தங்குவர். சுவிட்சர்லாந்தின் விலை உயர்ந்த தங்கும் விடுதி இது ஆகும்.

    இந்த தங்கும் விடுதியில் ஒரு இரவுக்கு அதிகபட்சம் ரூ. 62 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் நான்கு ஓட்டல்கள், இரண்டு ஸ்பாக்கள், பத்து உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. 

    • இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட இலியாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • முகமது இலியாசுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் அடுத்த மாதம் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார். இதில் 39 பேர் வேட்புமனு தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே, சுயேட்சை வேட்பாளராக புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த இட்ராஸ் முகமது இலியாஸ் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள முகமது இலியாசுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    அவரை உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே இலியாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலியாஸ் 1990-ல் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஜாப்னா தொகுதியில் வென்று எம்.பி.யாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்லா நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்ரீலா வெங்கடரத்னம் அந்நிறுவனத்தில் இருந்து விலகினார்.
    • எலான் மாஸ்க்கிடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

    டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்தது.

    இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி, தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்தார்.

    இன்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப். கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப். கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.

    அந்த ஒப்பந்தத்தின் படி டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் கென்னடிக்கு பொறுப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இது குறித்து பேசிய டிரம்ப், கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு தனது நிர்வாகத்தின் கீழ் அமையும் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.

    அதன்படி கென்னடி, தனது கூட்டணியில் உள்ள துணை அதிபருக்கான சுயேட்சை வேட்பாளர் மற்றும் 11 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர் என்று அரிசோனாவின் ஃபாண்டெஸ் தெரிவித்துள்ளார்.

    • முடிமாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால், தலையில் இருந்து இரத்தம் வழிந்தது.
    • விமானத்தில் இருந்து இருவரும் இறங்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

    மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. 27 வயதான ஹெர்னான்டஸ் கார்னியர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு விமானத்தில் ஏறினார்.

    திடீரென அவரது தலையில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்ததால், விமான பணியாளர்கள் கார்னியரை விமானத்தில் இருந்து வெளியேற வலியுறுத்தினர். எனினும், அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.

    நீண்ட நேரம் அறிவுறுத்திய பிறகும் விமானத்தில் இருந்து கார்னியர் வெளியேற மறுத்ததால், பணியாளர்கள் காவல் துறை உதவியை நாடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கார்னியரை விமானத்தில் வைத்து கைது செய்து வெளியே அழைத்து சென்றனர். இவருடன் பயணிக்க இருந்த பிலான்கா லயோலாவும் விமானத்தில் இருந்து கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    இந்த சம்பவம் காரணமாக குறிப்பிட்ட விமானம் அன்றிரவு புறப்படாமல் அதிகாலையில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தில் விமான அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்து, ரகளையில் ஈடுபட்ட கார்னியர் மற்றும் லயோலா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக தலையில் இருந்து இரத்தம் வழிந்ததால், கார்னியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை.
    • போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி.

    உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டு தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

    அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

    ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரமதர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில சமயம் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவலை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
    • இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    சிட்னி:

    தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு, சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களைக் கேட்பது உண்டு.

    சில சமயங்களில் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்றபிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலை இல்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை.

    இந்தக் குறையை போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

    அதாவது, வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது.

    இந்த நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேட்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத்திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.

    அலுவலக நேரத்திற்கு பிறகு தொழிலாளர்களை தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம். நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் ஆஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் என பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.

    இந்நிலையில், வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமை சட்டம் வரும் 26-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

    அதிபர் தேர்தல் 

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

    பிரச்சாரக் களம்

    டிரம்ப் இன் பிரச்சாரம் ஜனநாயக கட்சியின் மாநாடு என அமெரிக்காவின் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி சிகாகோ மாகாணத்தின் இல்லினாய்ஸ் நகரத்தில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கிய நிலையில் அன்றைய தினம் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

    அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் ஹிலாரி கிளின்டன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்சல் ஒபாமா ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்து பேசினர். இந்நிலையில் மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

     புதிய பாதை 

    கட்சி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றைத் தாண்டி ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் நாம் முன்னோக்கிச் செல்லும் காலம் உருவாகும். அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக நான் இருப்பேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

     

    டிரம்பும் பைடனும் 

    டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அதிபராக இருந்தபோது கிடைத்த எல்லைகளற்ற அதிகாரத்தை தனது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தினார். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்று எச்சரித்தார். ஆனால் ஜோ பைடனின் பண்பு உத்வேகம் அளிக்கக்கூடியது. அமெரிக்காவுக்கு அவர் செய்த பங்ங்களிப்பை வரலாறு என்றும் நினைவு கூறும். அவருக்கு என்றும் தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    தாய் சியாமளா 

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது தாய் சியாமளா கோபாலன் குறித்து உருக்கமாக பேசிய காமலா ஹாரிஸ், 19 வயதில் பெரிய கனவுகளுடன் தனது தாய் எப்படி கடல் கடல்கடந்து வந்தார் என்று தெரிவித்தார். மேலும் அவரை ஒவ்வொரு நாளும் தான் மிஸ் செய்வதாகவும் குறிப்பாக  இந்த சமயத்தில் அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் கமலா கூறினார். தனது தாய் கடிமனா தைரியமான பெண் என்றும் தற்போது வானத்தில் இருந்து தன்னைப் பார்த்து புன்னைகைப்பார் என்றும் கமலா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    காசா போர் 

    காசாவில் நடந்து வரும் போர் குறித்து பேசிய கமலா, இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அமரிக்கா உடன் நிற்கும். ஆனால் காசாவில் நடந்து வரும் அழிவுகள் மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்தார்  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
    • மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர்.

    நேபாளம்:

    நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் 40 பேருடன் இந்திய பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.

    "UP FT 7623 என்ற எண் கொண்ட பஸ் ஆற்றில் விழுந்து ஆற்றின் கரையில் கிடக்கிறது என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா உறுதிபடுத்தினார்.

    இந்நிலையில் ஆற்றில் கவிழ்ந்த பஸ்சில் பயணித்த 40 இந்தியர்களில் 14 பேர் பலியான நிலையில் இதுவரை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    ×