சுவிஸ்-இல் Chill செய்த நீட்டா - முகேஷ் அம்பானி.. வீடியோ

முகேஷ் அம்பானி சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தம்பதியினர் வாக்கிங் சென்றனர்.
Mukesh Ambani and Neeta Ambani
Published on

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி சுவிட்சர்லாந்தில் வாக்கிங் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவின் படி நீட்டா அம்பானி சிவப்பு நிற ஆடையிலும், முகேஷ் அம்பானி ஃபார்மல் சூட் அணிந்து காணப்படுகின்றனர். பாதுகாப்பு குழுவினர் யாரும் இன்றி இருவர் மட்டும் தெருவில் நடந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

அம்பானி குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கொண்டாடும் சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ளன. மேலும் விடுமுறை காலத்தில் அவர்கள் அங்குள்ள ஒபுலன்ட் பர்கென்ஸ்டாக் ரிசார்டில் தங்குவர். சுவிட்சர்லாந்தின் விலை உயர்ந்த தங்கும் விடுதி இது ஆகும்.

இந்த தங்கும் விடுதியில் ஒரு இரவுக்கு அதிகபட்சம் ரூ. 62 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் நான்கு ஓட்டல்கள், இரண்டு ஸ்பாக்கள், பத்து உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. 

X

Maalai Malar
www.maalaimalar.com