என் மலர்tooltip icon

    உலகம்

    • போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரெயில் மூலம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • 1991-க்குப் பிறகு உக்ரைன் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.

    இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக போலந்து சென்றார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரெயில் மூலமாக உக்ரைன் புறப்பட்டார். இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 11 மணியளவில் உக்ரைன தலைநகர் கீவ் நகர் சென்றடைந்தார்.

    1991-ல் உக்ரைன சோவியத் யூனியனில் இருந்து பிரிந்தது. அதன்பின் இந்திய பிரதமர் உக்ரைன் செல்வது இதுவே முதன்முறையாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1905-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் வைரத்திற்கு பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரம் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியது. அதன் விலையை வெளியிடவில்லை.

    2016-ம் ஆண்டு இதே சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 1,109 காரட் வைரத்தை, 2017-ம் ஆண்டு கிராஃப் டைமண்ட்ஸின் தலைவரான லண்டன் நகைக்கடை வியாபாரி லாரன்ஸ் கிராஃப் $53 மில்லியனுக்கு வாங்கினார்.

    • ஷேக் ஹசீனா மீது இடைக்கால அரசு கொலை குற்றவழக்கு பதிவு செய்துள்ளது.
    • வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதாக வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவு ஷேக் ஹசீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டியதில்லை.

    வங்கதேச பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பராளுமன்றத்தில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் ரத்து செய்யப்படுவதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

    இனிமேல் ஷேக் ஹசீனா வழக்கமான நடைமுறையின்படி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன்பின் பார்ஸ்போர்ட் வழங்கப்படும்.

    இதற்கிடையே மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தலாமா? என்பதை மதீப்பிட ஐ.நா. குழு இன்று வங்கதேசம் வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதில் இருந்து மீண்டு வர இலங்கை அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

    அந்த வகையில் நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா உள்பட 35 நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

    சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ இதுப்பற்றி கூறுகையில், "இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்" என்றார்.

    மேலும் அவர், "பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இலங்கைக்கு ஆண்டுதோறும் 50 லட்சம் சுற்றுலா பயணிகளின் இலக்கை அடைவதுமே இந்த முடிவின் நோக்கம்" எனவும் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது.
    • இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு வரக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு வரக்கூடும் என்பதால், பல்வேறு மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிங்கப்பூரில் எம்பாக்ஸ் கிளேட் 2 நோய்த் தொற்றினால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தாய்லாந்தில் இந்த வாரம் பதிவான ஒரு எம்பாக்ஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது.

    பல்வேறு நாடுகளிலும் குரங்கு அம்மையின் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால் இது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
    • ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகளுக்கு இடையூறு இன்றி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.

    இலங்கையில் நீண்ட காலம் ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் இலங்கையை ஆளும் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது.

    எதிர்கட்சிகள், சமூக குழுக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. விசாரணையை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் பலமுறை ஒத்திவைக்கப்பட்டதற்காக இலங்கை அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியது.

    உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பது, தாமதப்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்தது.

    எனினும், இந்த வாதங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் இதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதையை ஒதுக்க இலங்கை அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றம் சார்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மற்ற தேர்தல் ஏற்பாடுகளை பாதிக்காத அளவுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்ப் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றினார்.
    • பொது வெளியில் உரையாற்றிய டிரம்ப்-க்கு புல்லட் ப்ரூப் பாதுகாப்பு ஏற்பாடு.

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடக்கு கரோலினாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றிய டிரம்ப், பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென உரையை நிறுத்திவிட்டு தனக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக தெரிவித்தார்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் முதல் முறையாக பொது வெளியில் பேசுவதால், அவரை சுற்றி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் புல்லட் ப்ரூப் கண்ணாடி அரண் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருந்தது. கண்ணாடி அரணில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப்-க்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    சுதாரித்துக் கொண்ட டிரம்ப் தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று தனது மைக்ரோபோனில் மெல்லிய குரலில் கேட்டார். இதையடுத்து அவரை அங்கிருந்து மீட்ட மருத்துவ குழு அவருக்கு முதலுதவி செய்தது. பின்னர் ஆசுவாசப்பட்டவராக உணர்ந்த டிரம்ப் அங்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றார்.

    தேர்தல் பரப்புரையின் போது துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர்பிழைத்த டிரம்ப், பொதுவெளியில் பேசும் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, உரையை நிறுத்திய சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. 

    • 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார்.
    • 96 மணி நேர ஆக்சிஜன் விநியோகத்துடன் விண்வெளியில் வீரர்கள் சிக்கிக் கொள்ளலாம்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

    அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.

    இந்த பிரச்சனையால் 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார்.

    போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் என்பது 210 நாட்கள் வரை விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு விண்கலம் ஆகும். பின்பு அது தானாகவே பூமிக்கு திரும்பி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், விண்வெளியில் சிக்கியுள்ள வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் உள்ள 3 சிக்கல்கள் குறித்து அமெரிக்க இராணுவ விண்வெளி அமைப்புகளின் முன்னாள் தளபதி ரூடி ரிடோல்ஃபி பேசியுள்ளார்.

    பூமிக்கு விண்கலம் பாதுகாப்பாக இறங்குவதை உறுதிசெய்ய ஸ்டார்லைனர் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.

    1. 96 மணி நேர ஆக்சிஜன் விநியோகத்துடன் விண்வெளியில் விண்கலம் சிக்கிக் கொள்ளலாம்.

    2. விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் முயற்சி தோல்வியடையலாம்.

    3. விண்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பே தீப்பற்றி எரிந்து வீரர்கள் உயிரிழக்க நேரிடலாம்

    என்று தெரிவித்தார்.

    • 1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.
    • 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார்.

    உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் ஆவார்.

     

    மரியா பிரான்யாஸ் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அதன்பின் அவரது குடும்பம் சொந்த நாடான ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது.

    1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 20] காலமானார். மரியா அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியான முறையில் வலியில்லாமல் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    உலவகின் மிக வயதான பெண்மணியாக மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்மையாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இதூக்கா ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அசியா [Ashiya] நகரின் வசித்து வருகிறார்.   

     

    • எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி சமீபத்தில் தான் மாற்றப்பட்டது.
    • பல சமூக வலைதளங்களில் துப்பாக்கி எமோஜி மாற்றப்பட்டு இருக்கிறது.

    உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்திய பதிவு ஒன்றில் எலான் மஸ்க் துப்பாக்கி எமோஜி சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன என்பதை விளக்குகிறது.

    இது தொடர்பாக அவர் துப்பாக்கி எமோஜி கடந்த 2013 முதல் தற்போதைய 2024 ஆண்டு வரை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்பதை விளக்கும் படமும், அத்துடன் "துப்பாக்கி எமோஜிக்கள் மாறிக் கொண்டே வருவது தூக்கத்தை கெடுக்கும் மூளை வைரஸுடன் ஒத்துப்போகிறது, ஒரு முக்கிய கோட்பாடு போலியான தீங்கை உண்மையான தீங்குடன் சமன்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.



    எலான் மஸ்க்-இன் இந்த பதிவுக்கு ஒருத்தர், "துப்பாக்கி எமோஜியை நீக்கிவிட்டு, அதிபயங்கர ஆயுதங்களுடன் வெடி குண்டு எமோஜியை அவர்கள் மாற்றிய விதம் எனக்கு பிடித்திருந்தது," என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவவர், "நவீனத்துவத்தை தவிர்த்துவிட்டு, பழைய பாரம்பரியத்திற்கு திரும்ப வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி ஆரஞ்சு நிற தண்ணீர் துப்பாக்கியாக இருந்து உண்மையான கைப்பாக்கியாக கடந்த ஜூலை மாதம் தான் மாற்றப்பட்டது. திடீரென ஏன் இப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து எக்ஸ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

    • 25 வயதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • 25 வயதில் கைது செய்யப்பட்ட ஷாஜகான் 62 வயதில் நாடு திரும்பியுள்ளார்.

    வங்கதேசத்தில் 37 ஆண்டுகளாக சிறையில் இருந்த இந்தியர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார்.

    திரிபுராவை சேர்ந்த ஷாஜகான் என்பவர் 1988 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மாமியார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவரை கைது செய்தனர்

    25 வயதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பின்பும் வேறு வழக்கிலும் அவரை போலீசார் தொடர்புபடுத்தியதால் அவரது விடுதலை சாத்தியமில்லாமல் போனது

    இந்நிலையில், ஜாரா அறக்கட்டளையின் உதவியினால் 37 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினரிடம் ஷாஜகான் ஒப்படைக்கப்பட்டார்.

    அவர் கைது செய்யப்படும் போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இப்போது தான் முதன்முறையாக தனது மகனின் முகத்தை ஷாஜகான் பார்த்துள்ளார்.

    தனது விடுதலை குறித்து பேசிய ஷாஜகான், "என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன். எனக்கு மறு பிறவி எடுத்தது போன்று உள்ளது. இந்த வாழ்நாளில் நான் என சொந்த ஊருக்கு திரும்புவேன் என்று நான் நினைக்கவில்லை. என்னை வீட்டிற்கு அழைத்து வந்தது ஜாரா அறக்கட்டளைக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • ரஷியா எல்லைக்குள் உக்ரைன் படை சென்றதையடுத்து தாக்குதல் அதிகமாகியுள்ளது.
    • ஐந்து பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி ரஷியாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளும் டிரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் எல்லையில் உள்ள ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தனர்.

    சுமார் 70-க்கும் அதிகமான குடியிருப்பு பகுதியை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் அதிரிகரித்து வருகிறது. ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்த தொடங்கியது.

    இந்த நிலையில் இன்று காலை உக்ரைன் இதுவரை இல்லாத வகையில் ரஷியாவின் மாஸ்கோ நகரை நோக்கி தொடர்ச்சியாக டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறைந்தபட்சம் 11 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    மொத்தமாக 45 டிரோன்கள் ரஷியாவில் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 11 மாஸ்கோ பிராந்தியத்திற்குள் நுழைந்தபோது அழிக்கப்பட்டது. 23-க்கும் மேற்பட்ட டிரோன்கள் எல்லையில் அமைந்துள்ள பிரியான்ஸ்க் பிராந்தியத்திலும், 6 டிரோன்கள் பெல்கோரோட் பிராந்தியத்திலும், மூன்று டிரோன்கள் கலுகா பிராந்தியத்திலும், இரண்டு குர்ஸ்க் பிராந்தியத்திலும் சுட்டு வீழ்த்தப்பட்டன என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    சில டிரோன்கள் மாஸ்கோவின் பொடோல்ஸ்க் நகரத்தின் மீது சுட்டு வீழ்த்தப்பட்டது என மோஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு லேயர் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    ×