என் மலர்
நீங்கள் தேடியது "Measles"
- கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- 150 மாடு, கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் தாலுகாகீரனூர் கிராமத்தில் கால்நடைத்துறை மூலம் மாடுகள், கன்றுகளுக்கு கால்கானை, வாய்க்கானை எனப்படும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமுனியசாமி தலைமை தாங்கினார்.
கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர்கள் வீரன், சமாதான ஜெபமாலை மேரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில்வேல் ஆகியோர் கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைத்தியனேந்தல், மேலப்பனைக்குளம், கீழப்பனைக்குளம் கிராமங்களில் 150 மாடு, கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
- பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
குடிமங்கலம் :
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் நாட்டு மாடுகளை காட்டிலும் கலப்பின மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடிக்கும் பூச்சிகள், உண்ணிகள், கொசுக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது.
நோயுற்ற மாடுகளின் எச்சம், ரத்தம், கொப்புளங்கள் மற்றும் விந்தணுக்கள் மூலம் பரவுகிறது. நோயுற்ற தாய் பசுவிடம் இருந்து கன்றுக்கும் பரவுகிறது.இதற்கான சிகிச்சை முறை பற்றி, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து, தேவையான அளவு நாக்கில் தடவி கொடுக்க வேண்டும்.
குப்பை மேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை (ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி), மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல் ஆகியவற்றை அரைத்து 500 மி.லி., நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின் மருந்தை மேலே தடவ வேண்டும்.காயத்தில் புழுக்கள் இருந்தால், சீத்தாப்பழ இலையை அரைத்து காயத்தில் தடவ வேண்டும். அல்லது பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து காயத்தில் விட்டு புழுக்களை அப்புறப்படுத்தி பின்னர் மருந்து போட வேண்டும்.முக்கியமாக நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பண்ணையின் சுத்தம், சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். கொட்டகையை காற்றோட்டமாகவும், சூரிய ஒளிபடுமாறும் அமைக்க வேண்டும் என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாடுகள், அதிக காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் உடல் எடை குறையும். கண்களில் வீக்கம் மற்றும் நீர் வடிதல் இருக்கும். அதிக உமிழ்நீர் சுரப்பும் இருக்கும். பால் உற்பத்தி குறையும். தலை, கழுத்து, கால்கள், மடி, இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றில் 2 முதல் 5 செ.மீ., அளவுக்கு கொப்புளங்கள் தென்படும். தோலின் மீது ஏற்படும் இந்த கொப்புளங்கள் உறுதியாக வட்டமாக நன்கு உப்பியிருக்கும். மிகப்பெரிய கொப்புளங்கள் சீழ் பிடித்து புண்ணாகி பின்னர் அதன் தழும்புகள் தோலில் இறுதி வரை மறையாமல் இருக்கும். கொப்புளங்களில் புழுக்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலா உட்பட பல்வேறு இடங்களில் இந்த ஆண்டின் துவக்கம் முதலே அம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் அம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 26 அன்று அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 1813 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 26 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 74% அதிகமாகும். குறிப்பாக இந்த அம்மைநோய்க்கான வைரஸ், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வேகமாக தாக்கக்கூடியதாகும். அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகும். ஆனால் டெங்கு தடுப்பூசி போடப்பட்டபோது ஏற்பட்ட பக்கவிளைவுகளைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் 2.4 மில்லியன் குழந்தைகள் நோய்த்தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
இதையடுத்து தற்போது 95% நோய்தடுப்பு வீதம் குறைந்துள்ளது என பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் குண்டோ வெயிலர் கூறினார். மேலும் அம்மை நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குண்டோ கூறினார்.
இந்த வைரஸினால் முதலில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பின்னர் கண்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, உடலின் அனைத்து இடங்களிலும் சிவப்பு நிறத்தில் தடித்து இருக்கும். இவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். # PhilippinesMeasles