என் மலர்
உலகம்
- மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர்.
- 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்ஜுக்கர்பெர்க் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அப்போது ஒரு பயனர் மார்க்ஜூக்கர்பெர்க்கிடம் நீங்கள் முதல் பேஸ்புக் கணக்கை உருவாக்க பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி எது என்று கேட்டார். அதற்கு மார்க்ஜூக்கர்பெர்க் அளித்த பதிலில், 2004-ம் ஆண்டில் பேஸ்புக்கில் முதல் கணக்கை பதிவு செய்ய 'mzuckerb@fas.harvard.edu' என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாக கூறினார்.

மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர். ஆனால் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய முதல் நபர் அல்ல. அவருக்கு முன்பே 3 ஐ.டி.கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் சோதனைக்காக ஒதுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன.
இதன்படி பேஸ்புக்கில் 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது. 5-வது மற்றும் 6-வது கணக்குகள் ஜுக்கர்பெர்க்குடன் இணைந்து பேஸ்புக்கை தொடங்கிய இணை நிறுவனர்களுடையது ஆகும்.
- இங்கிலாந்தில் சமீப காலமாக விந்தணு தானம் செய்யும் செயல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
- உலகின் மிகப்பெரிய விந்து வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரலில் மான்செஸ்டரில் ஒரு கிளையை திறந்தது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு விந்தணு தானம் செய்யும் செயல்முறை கட்டுப்பாட்டை மீறியுள்ளது.
அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்கமுடியாது. ஆனால், விந்தணுவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சிலருக்கு இங்கிலாந்திலும், உலக அளவிலும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து விந்தணு மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்துவந்தது. அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது.
2019 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும் 7,542 ஸ்ட்ரா விந்து இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் முட்டை வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கிளையைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதியில் 90 சதவீத பங்கைக் கொண்ட ஐரோப்பிய விந்தணு வங்கி, ஒரு நன்கொடையாளருக்கு 75 குடும்பங்கள் என உலகளாவிய வரம்பைப் பயன்படுத்துகிறது. அதன் நன்கொடையாளர்கள் சராசரியாக 25 குடும்பங்களுக்கு உதவுகிறார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி பேருந்து சென்றது.
- இந்த பேருந்து ஈரானில் விபத்தில் சிக்கியதில் 28 பேர் பலியாகினர்.
டெஹ்ரான்:
பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 28 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 23 பேர் காயம் அடைந்தனர், அவர்களில் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய ஈரானில் உள்ள யாஸ்டி மாகாணத்தில் நேற்று இரவு இந்த விபத்து நடந்தது என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
- பிரையன் நிக்கோலின் அடிப்படை சம்பளம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்.
- 3.6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் வரை அவரது செயல்பாட்டை பொறுத்து போனஸ் பெற முடியும்.
ஸ்டார்பக்ஸ் உலகின் பிரபல காபி நிறுவனமான செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் ஏற்கனவே இருந்து சிஇஓ-வை வேலையில் இருந்து நீக்கியது. தற்போது 50 வயதான பிரையன் நிக்கோலை புதிய சிஇஓ-வாக நியமித்துள்ளது.
நிக்கோல் தினமும் 1,600 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ரெயிலில் அல்லது விமானத்தில் பயணம் செய்ய தேவையில்லை. இவருக்கென கார்ப்பரேட் ஜெட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்தில் இருந்து புதிய சிஇஓ-வாக பதவி ஏற்க உள்ளார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். நிறுவனத்தின் தலைநகர் சியாட்டில் உள்ளது. கலிபோர்னியாவின் அவரது வீட்டில் இருந்து ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் 1600 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இவர் வேலை செய்வதற்காக வாரத்தில் மூன்று நாட்கள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரையன் நிக்கோலின் அடிப்படை சம்பளம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 3.6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் வரை அவரது செயல்பாட்டை பொறுத்து போனஸ் பெற முடியும். 23 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருடாந்திர பங்கு பெறக்கூடிய தகுதியை பெறுவார்.
பிரையன் நிக்கோல் வேலைக்காக நீண்ட தூரம் பயணிப்பது இது முதல் முறையல்லை. இதற்கு முன்னதாக சிபோட்டில் சிஇஓ-வாக இருக்கும்போதும் இதேபோன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிபொட்டில் தலைமை அலுவலகம் கொலராடோவில் இருந்தது, நிக்கோல் 15 நிமிடத்தில் கார் மூலம் சென்றடைய முடியும். ஆனால், மெக்சிகன் பாஸ் புட் நிறுவனம் தலைமை அலுவலகத்தை கலிபோர்னியாவுக்கு அவரை நியமனம் செய்த மூன்று மாதத்திலேயே மாற்றியது.
- ஜன நாயக கட்சியின் மாநாடு சிகாகோ நகரில் நடந்து வருகிறது.
- டிரம்ப் அமெரிக்கர்கள்-மற்றவர்களுக்கும் பிளவு ஏற்பட விரும்புகிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படும் ஜன நாயக கட்சியின் மாநாடு சிகாகோ நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று அதிபர் ஜோபைடன் பேசினார். இன்று மாநாட்டில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது:-
இக்கட்டான நேரத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு சிறந்த அதிபராக ஜோபைடனை இந்த நாடு நினைவில் கொள்ளும். அவரை ஜனாதிபதி என்று அழைப்பதோடு அவரை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன்.

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பற்றி அக்கறையுள்ள ஒரு அதிபர் நமக்கு தேவை. மக்களுக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் சிறந்த ஊதியத்திற்கு பேரம் பேசும் ஒரு அதிபர் நமக்கு தேவை. அந்த அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பார். அது அவரால் முடியும். அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் தயாராகி விட்டார்.
டிரம்ப் மற்றும் அவரது பணக்கார நன்கொடையாளர் உலகை இப்படி பார்க்க வில்லை. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது சக்தி வாய்ந்தவர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்பதுதான். ஆனால் சுதந்திரம் பற்றிய பரந்த கருத்து நம்மிடம் உள்ளது.

நாடு பிளவுப்படுத்த இருப்பதாக நாம் சிந்திக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். அவரை ஆதரிக்கும் அமெரிக்கர்கள்-மற்றவர்களுக்கும் பிளவு ஏற்பட விரும்புகிறார். இது அரசியலில் பழமையான தந்திரங்களில் ஒன்றாகும். அவரது செயல் மிகவும் பழுதடைந்துவிட்டது.
இன்னும் 4 ஆண்டுகள் குழப்பம் நமக்கு தேவையில்லை. அதன் தொடர்ச்சி பொதுவாக மோசமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.
அமெரிக்கா ஒரு புதிய அத்தியாயத்துக்கு தயாராக உள்ளது. கமலா ஹாரிசுக்காக நாம் தயாராக இருக்கி றோம். அவர் இந்த பதவிக்கு தயாராக இருக்கிறார். டிரம்ப் அதிகாரத்தை தனது நோக்கங்களுக்கு ஒரு வழிமுறையாக பார்க்கிறார். அவர் தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு நடுத்தர வர்க்கம் பணம் கொடுக்க விரும்புகிறார்.
கமலா ஹாரிசிடம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் டிரம்ப் மோசமாக பேசி வருகிறார். நாம் நம்பும் அமெரிக்காவுக்காகப் போராடுவது நம் அனைவரின் கையில் இருக்கிறது.
இவ்வாறு பராக் ஒபாமா பேசினார்.
- அமெரிக்காவின் பரிந்துரைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தத்திற்கு சம்மதம்.
- நாங்கள் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஹமாஸ் குற்றச்சாட்டு.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காமல் உள்ளது. காசா மக்களை பாதுகாப்பதற்கும், பிணைக்கைதிகளை மீட்பதற்கும் போர் நிறுத்தம் அவசியம் என இந்த மூன்று நாடுகள் கருதுகின்றன.
இதனால் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை தயார் செய்தது. இந்த பரிந்துரைகளை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற அவர், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவின் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
அதன்பின் மத்தியஸ்தராக விளங்கும் எகிப்து, கத்தார் நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர் அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளது. இதனால் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படாமல் உள்ளது.
இந்த நிலையில் 9-வது முறையாக பயணம் மேற்கொண்ட நிலையிலும் வெற்றிபெற முடியாமல் ஆண்டனி பிளிங்கன் நாடு திரும்பியுள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் "எங்களுடைய மெசேஜ் மிகவும் எளிமையானது. அது தெளிவானது. மிகவும் அவசரமானது. எங்களுக்கு தேவை போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போதுதான் இது எங்களுக்கு தேவை. நேரம் மிகவும் முக்கியமானது" என்றார்.
நாங்கள் ஏற்றுக் கொண்ட முந்தை பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளுக்கு அமெரிக்கா இணங்குகிறது என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஹமாஸின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில் அளிக்கவில்லை.
- இதற்கு 5'7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும்.
தொழிலதிபர் எலான் மஸ்க் சிஇஓ ஆக உள்ள பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் வேலைக்கு ஆட்கள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான் அந்த வேலை. அதற்கு நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் சம்பளமாகவும் டெஸ்லா நிறுவனம் வழங்குகிறது. இதற்கு 5'7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெல்சா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விஷயங்களைச் செய்யப் பழக்கி வருகிறது. அப்படி அந்த ரோபோவுக்கு மனிதர்களின் செயல்பாடுகளைச் சொல்லித் தரவே இந்த வேலை.

இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும். டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு அப்ளிகேஷன்கள் குமிந்து வருகிறது.
- அரசரை போல் போலியாக கையெழுத்திட்ட இளவரசர் முகமது.
- இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
துபாய்:
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது முன்னாள் அதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரைத் தொடங்கும் அரச ஆணையில் தனது தந்தையும் அரசருமான அப்துலஜீசையின் கையொப்பத்தை போலியாக இட்டதாக முன்னாள் மேஜர் ஜெனரலும் உளவுத்துறை அதிகாரியுமான அல்-ஜப்ரி தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த 2015-ம் ஆண்டு போா் பிரகடனம் செய்தது. தாக்குதல் நடத்துவதற்கான அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை அரசரை போல் போலியாக கையொப்பமிட்டு இளவரசா் முகமது பின் சல்மான் பிறப்பித்திருந்தாா். அரச ஆணையில் தனது தந்தையின் கையொப்பத்தை போலியாக இட்டார்.
வயது மூப்பு காரணமாக அரசரின் மூளைத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அதை பயன்படுத்தி இளவரசா் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் மீது போா் தொடுத்தாா். இளவரசர் முகமது தனது தந்தைக்குப் பதிலாக போரை அறிவிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார். அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
எனது இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறேன். எனவே எனது குழந்தைகள் மற்றும் எனது நாட்டின் நலனுக்காக பேசுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. என்னை கொல்ல இளவரசர் விரும்புகிறார்.
என் கொலைக்கு அவர் திட்டமிட்டார். நான் இறந்து கிடக்கும் வரை அவர் ஓயமாட்டார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
முன்னாள் அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா கருத்து தெரிவிக்கவில்லை.
- அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
- இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தீர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடத்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். கோட் சூட்டுடன் மிடுக்காக மேடையில் பதவியேற்பதுபோன்ற தனது ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஸ்க், 'சேவையாற்ற நான் விரும்புகிறேன்' [I am willing to serve] என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் DOGE [Department of government efficiency] என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக அரசின் செயல்திறனை ஊக்குவிக்கும் அமைச்சகம் என்று ஒன்றை உருவாக்கி அதன் மந்திரியாக எலான் மஸ்க்கை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பலர் கருத்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட இருக்கிறார்.
- ஜனநாயக தேசிய மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளரா பரிந்துரை செய்யப்பட இருக்கிறார்.
அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த விழாவின் முடிவில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார்.
ஹிலாரி கிளிண்டன் பேசும்போது கூறியதாவது:-
கமலா ஹாரிஸ்க்கு அமெரிக்காவை வழிநடத்திச் செல்லும் குணம், அனுபவம், பார்வை உள்ளது. அவருடைய இதயத்தையும் அவருடைய நேர்மையையும் நான் அறிவேன். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் இளம் வழக்கறிஞர்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக தொடங்கினோம்.
அத்தகைய வேலை உங்களை மாற்றும். அந்த குழந்தைகள் உங்களுடன் இருக்கட்டும். தான் பாதுகாத்த ஒவ்வொரு குழந்தை, அவள் உதவிய ஒவ்வொரு குடும்பம், சேவை செய்த ஒவ்வொரு சமூகத்தின் நம்பிக்கைகளையும் கமலா ஹாரிஸ் தன்னுடன் சுமந்து செல்கிறார்.
எனவே ஜனாதிபதியாக அவர் எப்போதும் எங்களுக்கு துணையாக இருப்பார். கடின உழைப்பாளி குடும்பங்களுக்கு செலவுகளை குறைக்க போராடுவார். நல்ல ஊதியம் தரும் வேலைகளுக்கான கதவுகள் திறக்கப்படும். மேலும், அவர் நாடு முழுவதும் கருக்கலைப்பு உரிமைகளை மீட்டெடுப்பார்.
முன்னேற்றம் சாத்தியம் என்பதே என் வாழ்க்கையின் கதையும் நம் நாட்டின் வரலாறும். ஆனால் உத்தரவாதம் இல்லை. அதற்காக நாம் போராட வேண்டும். அதை ஒருபோதும், எப்போதும் கைவிடாதீர்கள்.
இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
2016 ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து ஹிலாரி போட்டியிட்டார். இதில் ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார்.
- டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார்.
- 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளார்
அமேரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையிலும் தாக்கிப் பேசி வரும் டொனல்டு டிரம்ப், கமலா ஹாரிஸை கம்யூனிச தலைவராக சித்தரிக்க முயன்று வருகிறார்.
இதற்கிடையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது.
இந்த நிலையில்தான், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க் மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவும் டிரம்ப் அதிபரானால் வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் எலான் மஸ்க் அதை முற்றிலும் மறுத்திருந்தார். இந்த நிலையில்தான் டிரம்ப் பொது வெளியில் இதுகுறித்து வெளிப்படையாகவே தற்போது பேசியுள்ளார்.
2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடதக்கது
- போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி அறிவித்துள்ளார்
- போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது
போரும் பேச்சுவார்த்தையும்
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாத காலமாக நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த காலங்களிலும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் இருந்துவந்தபோதும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான போர் மூண்டுள்ளது.
தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தாலும் இதுவரை இஸ்ரேல் எதற்கும் பிடி கொடுக்காமலேயே இருந்து வந்தது. இஸ்ரேலுக்கு உதவும் விதமாக ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் அமெரிக்கா தந்து கொண்டிருந்தாலும், விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர உள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பெருமுயற்சி எடுத்து வருகிறது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருந்தாலும், தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டும் நிலையில் உள்ளது என்று கடந்த வாரம் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
பாதியில் நின்ற பேச்சுவார்த்தை
கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த வாரம் நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்திருந்தது.
அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா - ஆண்டனி பிளிங்கன் பயணம்
ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட அமெரிக்கா தயாராக இல்லை. எனவே அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் போர் தொடங்கியதிலிருந்து 9 வது முறையாக இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் நெதன்யாகுவுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய அவர் தற்போது முன்மொழியப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே தற்போது முடிவு ஹமாஸ் கையில் தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆண்டனி பிளிங்கன் வருகையும் அவருடன் நடந்த பேச்சுவார்த்தையும் நல்ல முறையில் அமைந்ததாகவும், முக்கியமான ஒன்று என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்மாயில் ஹனியே - ஹிஸ்புல்லா காரணிகள்
ஆனால் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்க முடிகிறது. ஹனியே கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ஆனால் மேற்கு நாடுகள் ஈரான் அதிபரை எச்சரித்து வருகின்றனர். ஹெஸ்புல்லா நிலை கொண்டுள்ள லெபனான் பகுதிகளின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் நடத்தி வருவதும் நிலைமையை மோசமாகியுள்ளது. நேற்று லெபனானின் ஹிஸ்புல்லா ஆதிக்க பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த புறக் காரணிகள் பாலஸ்தீன போர் நிறுத்தத்தைத் தாமதமாக்கி வருகிறது.
ஹமாஸ் திட்டவட்டம்
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தன்,ஆண்டனி ப்லிங்கின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது என்றும் கூறியுள்ளது தெளிவற்றதாக உள்ளது. ஏனெனில் அது குறித்து எங்களிடம் எந்த தகவலும் கூறப்படவில்லை. நாங்கள் அந்த ஒப்பந்தத்துக்கு இசைவு தெரிவிக்கவும் இல்லை . இந்த ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று மத்தியஸ்தர்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். எங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேவையில்லை. [பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆதிக்கம் இல்லாத] புதிய கட்டமைப்பை உருவாக்கினால் அதற்கு நாங்கள் உடன்படுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாஸ் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆண்டனி பிளிங்கன் அடுத்ததாக மத்தியஸ்த நாடுகளான எகிப்து மற்றும் கத்தாருக்கு பயணம் மேற்கொள்கிறார்.






