என் மலர்
உலகம்
- அக்டோபர் மாதம் வேந்தர் தேர்வு செய்யப்படுவார்.
- இம்ரான் கான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்றனர்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பல்வேறு வழக்குளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார. சுமார் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் இம்ரான் கான், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
"இம்ரான் கான் தனது குழுவிற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு அளித்தார். விண்ணப்பத்தின் பரிசீலனை தற்போது நடைபெறுகிறது. இது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். இம்ரான் கான் வேந்தராக தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்தது. அப்படி நடந்தால் முதல் ஆசிய நபர் ஆவார். இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. ஆசியா மற்றும் உலகத்திற்கும் சிறந்த சாதனையாக கருதப்படும்" என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கான லண்டன் செய்தி தொட்பாளர் சயீத் ஜுல்ஃபிகர் புகாரி தெரிவித்துள்ளார்.
ஹாங் காங்கின் கடைசி பிரட்டிஷ் கவர்னரான கிறிஸ் பாட்டன் கடந்த பிப்ரவரி மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்த விலகினார். இதனால் வேந்தர் பதவி காலியாக உள்ளது.
10 வருட வேந்தர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரங்கள் அக்டோபர் மாதம் வரை வெளியிடப்படாது. அக்டோபர் மாதம் கடைசியில் வாக்கெடுப்பு நடைபெறும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தத்துவம், அரசியல், பொருளாதாரம் படிப்பு முடித்த இம்ரான் கான் 1975-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
தலைசிறந்த கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், கிரிக்கெட் விளையாடும் காலத்தில் இம்ரான் கான் பிளேபாய் போன்று வாழ்ந்தவர். பிரிட்டிஷ் கிசுகிசு பத்திரிகையில் தொடர்ந்து இடம் பிடித்தவர்கள் ஒருவர்.
நடிகை ஜெமிமா கோல்டுஸ்மித் உள்ளிட்ட மூன்று பேரை திருமணம் செய்துள்ளார். இவர் 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரீஸ் ஒலிம்பிக்ஸில் சோ யாக்கின் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
- பதக்கம் வென்ற பிறகு போடியத்தில் கொடுத்த அப்பாவித்தனமான ரியாக்ஷனால் யாக்கின் வைரல் ஆனார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள் அரங்கேறின. அந்த வகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரல் ஆனார்.
18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார். ஒலிம்பிக் போட்டி திருவிழா முடிந்த கையோடு சோ யாக்கின், தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் அவர்களுக்கு உதவ துவங்கியுள்ளார். தனது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் சிறிய உணவகத்தில் சோ யாக்கின், உணவு பரிமாறி வருகிறார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில், உணவகத்தில் சோ யாக்கின் உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- அலுவலக மடிக்கணினிகள் தொழிலாளர்கள் "டார்க் வெப்" பயன்படுத்துகின்றனர்.
- தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளில் 18+ உள்ளடக்கத்தை தொழிலாளாளர்கள் பார்க்கின்ற்னர்.
90% தொழிலாளர்கள் தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளை தனிப்பட்ட வேலைகளுக்கே பயன்படுத்துகின்றனர் என்று சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகளை உருவாக்கும் என்று ESET தெரிவித்துள்ளது.
ESET நடத்திய ஆய்வில், பணியாளர்களில் பெரும் பகுதியினர் தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளில் 18+ உள்ளடக்கத்தை பார்ப்பது, இணைய சூதாட்டத்தில் ஈடுபடுவது, தடை செய்யப்பட்ட டார்க் வெப் தளங்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆய்வில் பதில் அளித்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு (63%) பேர் "டார்க் வெப்" தளங்களை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவதாகவும் 17% பேர் தினமும் டார்க் வெப் தளங்களை பயனபடுத்துவதாகவும் தெரிவித்தனர். பெண்களை விட ஆண்களே அதிக அளவில் டார்க் வெப் பயன்படுத்துகின்றனர்.
சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகள் இருந்தாலும், அலுவலக மடிக்கணினிகளில் தங்களது தனிப்பட்ட செயல்பாடுகளை கண்காணிப்பது தங்களது தனியுரிமையை மீறும் செயல் என்று மூன்றில் ஒருவர் (36%) கருத்து தெரிவித்தனர்.
ஐந்தில் ஒருவர் (18%) தங்கள் அலுவலக மடிக்கணினிகளில் இணையப் பாதுகாப்பு மென்பொருள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.
- பூமியிலிருந்து 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த JV33 என்ற இந்த சிறுகோள் கடக்கவுள்ளது.
- 1 மணிநேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் இந்த சிறுகோள் பயணித்து வருகிறது.
620 அடி உயரமான கட்டிடத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து சுமார் 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த JV33 என்ற இந்த சிறுகோள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 மணிநேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் பயணித்து வரும் இந்த சிறுகோள், நிலவை விட 3 மடங்கு தொலைவில் இருந்தாலும் ஒப்பீட்டளவில் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரவுள்ளது. இந்த சிறுகோளை நாசா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிக்க செய்யும்.
- தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி.
சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பார்ப்பவர்களை மிகவும் ரசிக்க செய்யும். அந்த வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பயனர்களை ரசிக்க செய்துள்ளது.
இந்த போட்டிகளை பொறுத்தவரை குழந்தைகள் ஒருபுறம் இருந்து மறுபுறம் இருக்கும் வெள்ளை கோடான இலக்கை வந்தடைய வேண்டும்.
தவழும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் குழந்தைகள் இலக்கை அடைய செய்வதற்கு பெற்றோர்கள் பெரும் பாடுபடுவார்கள்.

அதே போல போட்டியின் போது மழலை குழந்தைகளின் சேட்டைகளும் பார்வையாளர்களை பெரிதும் கவரும். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தவழும் குழந்தைகள் இலக்கை அடைவதற்காக பெற்றோர்கள் ஊக்குவிக்கும் காட்சி உள்ளது.
அதில் ஒரு குழந்தை போட்டி நடைபெறும் இடத்திலேயே படுத்து தூங்குவது போன்றும், அந்த குழந்தையை விழிக்கச் செய்வதற்காக அவரது பெற்றோர் பாடுபடுவதும் போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- மணிநேரத்துக்குச் சராசரியாக1 மில்லயன் மைல் [16,09,344 kmph] வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது.
- இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ வகைப்படுத்த முடியவில்லை.
ஆகாயத்தில் நிறைந்துள்ள அதிசயங்கள் பெரும்பாலானவை இன்னும் கண்டறியப் படாமலேயே இருந்து வருகிறது. காலங்காலமாக மனிதர்கள் விண்வெளியின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் தீரா வேட்கையுடன் செயலாற்றி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி அந்த தேடுதலுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.
அந்த வகையில் உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக1 மில்லயன் மைல் [16,09,344 kmph] வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது. பால் வெளியை வீட்டு இந்த பொருளானது 1 மில்லயன் மைல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது.
பிளான்ட் 9 என்று திட்டத்தின்கீழ் நடந்த ஆய்வில் இந்த பொருளானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளுக்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.ஆகாயத்தை இன்பிராரெட் ஒளியின் வழியாக ஆராய்ந்த இந்த மர்ம பொருள் விஞ்ஞானிகள் கவனத்துக்கு வந்துள்ளது.

இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ உறுதியாக வகைப்படுத்த முடியவில்லை. இந்த பொருளின் மையத்தில் ஹட்ரஜன் காணப்படவில்லை. எனவே இதை வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வரையறைக்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என்பர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
- இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதையடுத்து அந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது.
இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யா ராணுவத்தில் இருந்த கேரள வாலிபர் பலியாகி இருக்கிறார்.
அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருச்சூர் நாயரங்கடி பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் சந்தீப்(வயது36). இவர் உள்பட 7 பேர் கடந்த ஏப்ரல் மாதம் சாலக்குடியில் இருந்து ஒரு ஏஜென்சி மூலமாக ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்றனர். அங்கு சென்ற சந்தீப் மாஸ்கோவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்வதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்பு ரஷ்ய ராணுவ முகாமில் உள்ள கேண்டீனில் வேலை பார்ப்பதாகவும், அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ ரோந்து குழுவுடன் சந்தீப் சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நடத்திய தாக்குதலில் அந்த குழுவில் இடம் பெற்றிருந்த 12 பேரும் கொல்லப்பட்டனர்.
அவர்களுடன் சந்தீப்பும் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.
ராணுவ முகாமில் உள்ள கேண்டீனில் வேலை பார்த்ததாக கூறப்பட்ட சந்தீப், ராணுவ குழுவில் இணைந்தது எப்படி? என்பது தெரியவில்லை. ரஷ்யாவில் குடியுரிமை பெற ராணுவத்தில் சேரும் முறை இருக்கிறது. அதற்காக அவர் ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்தீப் ரஷ்ய குடியுரிமை பெற்றிருந்தால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் பிரச்சினை ஏற்படும். அதே நேரத்தில் இந்திய தூதரகம் தலையிட்டு சந்தீப் உடலை கேரளாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது.
- நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்'
அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றிணைத்து நியூ யார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தை பேரணி நடத்தி பிரமாண்டமான முறையில் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுகளாக நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின பேரணி நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கஜ் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் குவீன்ஸ் 9 இந்தியா பேரணியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் முன் உரையாற்றிய நியூ யார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்தியா என்பதற்கு பதிலாக பாகிஸ்தான் என்று பலமுறை தவறுதலாக உச்சரித்தார். 'என்னை இந்த நிகழ்வுக்கு வர அனுமதித்ததற்கு மிகவும் நன்றி. உங்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும். குவீனஸ் நகர் லிட்டில் பாகிஸ்தானில் இருந்து ப்ரூக்லின் நகர் லிட்டில் பாகிஸ்தான் வரை நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். நியூ யார்க் என்பது அமெரிக்காவின் நியூ டெல்லி.எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்' என்று தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா என்று சொல்வதற்கு பதிலாக லிட்டில் பாகிஸ்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புலப்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை லிட்டில் என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அவ்வாறே அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகள் லிட்டில் இந்தியா, லிட்டில் பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தனுக்கும் இடையில் வித்தியாசங்கள் நம்மிடையே பெரிதாக தெரிந்தாலும்,வெளிநாடுகளில் வாழும் மக்கள் இரு நாட்டவரையும் குழப்பிக்கொள்வது வழக்கம்.
- நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய தின பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
- இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலவேறு அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்தியா தின பேரணியை நியூயார்க் நகரில் நடத்தினர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கர் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.
ஏராளமானோர் இந்திய கொடி ஏந்திச் சென்றனர். வாகன ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் ராமர் கோவில் இடம் பிடித்திருந்தது. மரக்கட்டைகள் மூலம் உருவாக்கப்பட்ட ராமர் கோவில் போன்ற மாதிரி வாகனம் மூலம் எடுத்துக் செல்லப்பட்டது.
தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 40-க்கும் மேற்பட் இசைக்குழுக்கள் இந்த பேரணியில் இடம் பெற்றனர். இந்த பேரணி கிழக்கு 38-வது தெருவின் மேடிசன் அவென்யூவில் இருந்து கிழக்க 27-வது தெரு வரை நடைபெற்றது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நியூயார்க்கில் இந்திய தின பேரணி நடைபெறுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான நடத்தப்படுகிறது. இந்த வருடம் நடைபெற்றது 42-வது வருட இந்திய தின பேரணியாகும்.
- உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பிரஞ்சு நியூ வேவ் சினிமாட்டிக் இயக்கத்தின் முக்கிய முகங்களும் ஒருவராக திகழ்ந்தவர் அலைன் டெலோன்.
- 'பர்பில் நூன்' [1960], 'லே சாமுராய்' [1967] உள்ளிட்ட படங்கள் மூலம் அலைன் டெலோன் உலகப் புகழ்பெற்றார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகரும் ஆரம்பக்கால பிரஞ்சு சினிமாவின் ஸ்டைல் ஐகானாக திகழ்ந்தவருமான அலைன் டெலோன் [Alain Delon] [88 வயது] உடல்நலக்குறைவு காரணமாக நேற்று[ஆகஸ்ட் 18] காலமானார்.
உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பிரஞ்சு நியூ வேவ் சினிமாட்டிக் இயக்கத்தின் முக்கிய முகங்களும் ஒருவராக திகழ்ந்தவர் அலைன் டெலோன். 'பர்பில் நூன்' [1960], 'லே சாமுராய்' [1967] உள்ளிட்ட படங்கள் மூலம் அலைன் டெலோன் உலகப் புகழ்பெற்றார்.

2019 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் நிலை மோசமடைந்து வந்தது. இதற்கிடையில்கேன்சர் நோயுடனும் போராடி வந்த அவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சூழ அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார்.

அலைன் டெலோனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், 'சிறப்பு வாய்ந்த பாத்திரங்களை ஏற்று நடித்து உலகைக் கனவு காண வைத்தவர்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகம் முழுவதிலும் உள்ள இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- ரஷியாவுக்குள் உக்ரைன் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- எல்லையில் இருந்து ரஷியா தாக்குதலை முறியடிக்க இந்த திட்டம் என முதலில் உக்ரைன் தெரிவித்திருந்தது.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை ரஷியா இந்த போரில் வெற்றி பெற முடியவில்லை. மேற்கத்திய நாடுகள் உதவிகளுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 6-ந்தேதி திடீரென உக்ரைன் வீரர்கள் திடீரென ரஷியா எல்லையில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது. சுமார் 70 குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தது.
எல்லையில் இருந்து ரஷியா நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. மற்ற நோக்கம் ஏதும் இல்லை என உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதற்குதான் என முதன்முறையாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "தற்போது ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைதான் எங்களது முதன்மையான பணியாகும். முடிந்தவரை ரஷிய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் செயல்பாடு, ரஷியாவில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவது இதில் அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் ரஷியா எல்லையில் ஒரு நாடு முதன்முறையாக ஊடுருவியுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரஷியா, உக்ரைன் வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
- இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.
- ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார்.
துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்த குற்றச் சாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கேன் அட்டால் கைதாகி சிறையில் உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி அஹ்மத் சிக் பேசும்போது, அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சியை "பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டார். உங்களுக்கு [ஆளும் கட்சி] ஆதரவாக இல்லையென்று கேன் அட்டாலை பயங்கரவாதி என்கிறீர்கள்.ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.
இதனால் ஆளும் கட்சி எம்.பிக்கள் தரப்பில் கூச்சல் எழுந்தது. ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார். தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர் துணை சபாநாயகர் சொல்லச் சொல்ல கேட்காமல் எம்.பி.க்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அவர்களை பாது காப்பு அதிகாரிகள் விலக்கி விட்டனர். இந்த தாக்குதலில் பெண் எம்.பி. ஒருவர் உட்பட சிலருக்குக் காயம் ஏற்பட்டது. இதில் சிலரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பாராளுமன்றமே களேபரமாகக் காணப்பட்டது.






