என் மலர்
உலகம்
- நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல்.
- எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும்.
எக்ஸ் சமூக வலை தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ் உத்தரவிட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையென்றால் பிரேசிலில் செயல்பட்டு வரும் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சட்ட நிபுணர் கைது செய்யப்படுவார் என்று நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிரேசிலில் அலுவலகத்தை மூடுவதற்கான முடிவு கடினமானது. ஆனால் நீதிபதியின் ரகசிய தணிக்கை மற்றும் தனிப்பட்ட தகவல் பரிமாற்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தால், நாங்கள் விளக்கங்களை அளிக்க முடியாமல் போய் விடும் என்றார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை எக்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அலுவலகம் மூடப்பட்டாலும் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது.
- போர் சூழலால் மருத்துவப் பணி முடக்கம்
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு முடக்கியுள்ளது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கு போலியோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோயை பதிவு செய்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த ஜூன் மாதத்தில் கழிவுநீரில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது. ஒரு குழந்தைக்கு போலியோ அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் சந்தேகித்தனர்.
இதையடுத்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு பிறகு, தொற்று உறுதி செய்யப்பட்டது என்றனர்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு இனவெறி கருத்தை தெரிவித்தார்.
- கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிதாக இருக்கும்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு இனவெறி கருத்தை தெரிவித்தார். கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார்.
இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரிய வில்லை என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, நான் கமலா ஹாரிசை விட அழகாக இருக்கிறேன். "நான் அவரை விட நல்ல தோற்றமுடையவன். டைம் இதழின் அட்டையில் ஹாரிசின் விளக்கப்படம் எனக்கு அதிருப்தி அளித்தது.
நான் அவரை விட அழகாக இருக்கிறேன். அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டீர்களா? அது ஒரு பைத்தியக்காரனின் சிரிப்பு. ஜோபைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
- அன்றைய இரவு சுமார் 1.30 மணியளவில் அந்த குழுவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
- அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல அந்த பெண் கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏர் இந்தியாவைச் சேர்ந்த ஹோஸ்டஸ் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை லண்டனில் ஹீத்ரோவ் பகுதியில் உள்ள ரெடிஷன் ரெட் ஹோட்டலில் ஏர் இந்தியா விமான பணிக்குழுவினர் தங்கியுள்ளனர். அன்றைய இரவு சுமார் 1.30 மணியளவில் அந்த குழுவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.

தூக்கத்தில் இருந்த பெண் விழித்து அவரை பார்த்து அலறியுள்ளார். இதனால் பதற்றமான அந்த மர்ம நபர் பெண்ணை துணிகளை தொங்கவிடும் ஹேங்கர்களால் கடுமையாக தாக்கியுள்ளார். அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல அந்த பெண் கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
அந்த நபரின் பிடியை விடுவிக்க பெண் கடுமையாகப் போராடியுள்ளார். இதனால் பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் கேட்டு யாரும் வந்துவிடுவார்களோ என்று பயந்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஏர் இந்தியா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தூக்கத்தில் பிரிந்த உயிர்கள்
பாலஸ்தீன நாட்டின் மத்திய காசாவில் உள்ள ஸவாடியா Zawayda பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் டஜன் கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் . உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
நேற்று இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இஸ்ரேலின் 3 மிசைல்கள் அந்த வீட்டின் மீது ஏவப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் ஹமாஸ் செயல்பாடு இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் மத்திய காசாவில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் நிர்ப்பந்தித்து வருகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தை
இதற்கிடையில் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேசுவார்த்தை நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டகாக தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்துள்ளது.
வெற்றியா? தோல்வியா?
ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மத்தியஸ்தர்களின் முயற்சியைப் பாராட்டுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் நிராகரிக்கிறோம் என்றும், போர் நிறுத்தம் வெற்றி அடையவுள்ளது போன்ற பொய் பிம்பம் கட்டமைக்கப்படுவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய காசா- தெற்கு லெபனான் தாக்குதல்கள்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் காசாவில் நேற்று இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்றைய தினம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்ஸ்கிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கம்சட்ஸ்கியின் தலைநகர் பெட்ரோபாவ்லோவை ஒட்டிய எல்லையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலடுக்கம் பூமியில் இருந்து 50 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கைக்கான கால அளவு கடந்துவிட்டது.
- ஏபிசி செய்தி நிறுவனம் நடத்தும் விவாதத்தில் கமலா ஹாரிஸ்- டொனால்டு டிரம்ப் நேருக்குநேர் விவாதம்.
- 2020 தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான விவாதத்தில் கமலா ஹாரிஸை முறியடித்தவர் துளசி கபார்டு.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விலகியதால், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார்.
போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்தும் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்பது வழக்கம். அப்படி நடைபெற்ற முதல் விவாதத்தின்போது டொனால்டு டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் தினறியதால்தான் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி, கமலா ஹாரிஸை பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம்தேதி ஏபிசி செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விவாத நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்பும், கமலாவும் நேருக்குநேர் விவாதம் நடத்த உள்ளார்.
விவாதத்தில் கமலா ஹாரிஸை வீழ்த்த டொனால்டு டிரம்ப் திட்டம் வகுத்து வருகிறார். விவாதத்திற்கான பயிற்சி செசன் நடத்தப்படும். இதில் தனியார் கிளப் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் இந்து அமெரிக்கரான துளசி கபார்டு டொனால்டு டிரம்பின் பயிற்சி செசனில் இணைந்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலின்போது நடந்த விவாதத்தில் கமலா ஹாரிஸை தோற்கடித்தவர், ஜனநாயக கட்சியை கபார்டு. ஜனநாயகக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் துளசி. ஹவாய் மாவட்டத்தின் அரசு பிரதிநிதியாக இருந்தவர். இவரும் கடந்த (2020) அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார்.
இதற்கென உட்கட்சி தேர்தல் 2019-ல் நடந்தபோது, களத்தில் இருந்த கமலா ஹாரிஸ்க்கும் துளசிக்கும் விவாதம் நடந்தது. இதில் கமலாவை விட சிறப்பாக செயல்பட்ட துளசி, விவாதத்தில் வெற்றி பெற்றாார்.
பின்னர் துளசி ஜனநாயக கட்சியில் இருந்து 2022-ம் ஆண்டு வெளியேறினார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் அவரை தனது பயிற்சி செசனில் சேர்த்துள்ளார்.
டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையிலா் "அரசியல் வரலாற்றில் சிறந்த விவாதம் செய்பவர்களில் ஒருவராக டிரம்ப் நிரூபிக்கப்பட்டுள்ளார். இது ஜோ பைடன் உடனான விவாதம் மூலம் நிரூபணம் ஆனது. அவருக்கு பாரம்பரிய விவாததத்திற்கான தயார்படுத்துதல் (பயிற்சி) தேவையில்லை. ஆனால் 2020-ல் விவாத மேடையில் கமலா ஹாரிஸ்க்கு எதிராக வெற்றிகரமாக ஆதிக்கம் செலுத்திய துளசி கபார்டு போன்ற மரியாதைக்குரிய கொள்கை ஆலோசகர்கள் மற்றும் திறமையான தொடர்பாளர்களை சந்திப்பேன்" என்றார்.
2019-ம் ஆண்டு விவாதத்தின்போது துளசி "கமலா ஹாரிஸ் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட அட்டார்னியாக இருந்தபோது, 1500-க்கும் மேற்பட்டோரை கஞ்சா (marijuana) விவகாரத்தில் விதிமுறை மீறியதாக சிறையில் அடைத்தார். அதன்பின் அவரிடம் நீங்கள் எப்போதாவது கஞ்சா புகைத்தீர்களா? என்ற கேள்விக்கு சிரிப்பை வெளிப்படுத்தினார்" என குற்றம் சாட்டியிருந்தார்.
- மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 166 பேர் சுட்டுக்கொலை செய்தனர்.
- தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சம்பவத்தின்போது சுட்டுக்கொலை செய்தனர்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா தொழில் அதிபரான தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம்தேதி பாகிஸ்தானில இருந்து கடல் வழியாக மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறி வைத்துத் தாக்குதலை நடத்தினர்.
பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 கொலை செய்யப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012-ல் துாக்கிலிடப்பட்டான்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவை சேர்ந்த தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இதற்கிடையே ராணாவை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராணாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றம் ஒப்பந்தம்படி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
- இந்த தாக்குதலில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெய்ரூட்:
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோரை இன்னும் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தெற்கு லெபனானின் நபாட்டி பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதகாவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர்.
- சுமார் 80 கிராமவாசிகளை பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.
உள்நாட்டுப் போர்
உள்நாட்டுப் போரினால் சூடான் நாடு துண்டாடப்பட்டு வருகிறது. சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF [பாராளுமன்ற படை] ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது.
பசி - பஞ்சம் - பாலியல் பலாத்காரம்
இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பசியால் மக்கள் மண்ணையும், இலைகளையும் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுக்காக தினமும் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட பெண்கள் வரிசையில் நிற்கும் அவல நிலையில்தான் தற்போது சூடான் உள்ளது.


பாராளுமன்றப் படுகொலை
இந்நிலையில் மத்திய சூடானில் உள்ள சினார்[Sinnar] மாகாணத்தில் ஜால்க்னி [Jalqni] என்ற கிராமத்தில் பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுமார் 80 கிராமவாசிகளை கடந்த வியாழனன்று சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.
முன்னதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமற்ற கிராம மக்கள் எதிர்த்து நின்ற நிலையில் அவர்களை நோக்கி RSF வீரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரம்
கடந்த புதன் கிழமை அன்று ஸ்விடர்லாந்தில் அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சூடான் ராணுவம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூடான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மக்களை எந்தவித வாரண்ட்டும் இன்றி கைது செய்யலாம் என்ற அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

- 65 வயது மதிக்கத்தக்க விமானியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
- விமான விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்கிழக்கு பிரான்சின் கடற்கரையில் விமானக் காட்சியின் போது ஒரு சிறிய ஏரோபாட்டிக் விமானம் நேற்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
Fouga Magister விமானம் Lavandou விமான கண்காட்சியின் போது நேற்று மாலை 5 மணியளவில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில், விமானி உள்ளே சிக்கினார்.
மீட்பு நடவடிக்கையில் 65 வயது மதிக்கத்தக்க விமானியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விண்டேஜ் விமானம் ஒரு வளைவில் இறங்கியபோது, கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் ப்ரோவென்ஸ் லேண்டிங்ஸின் 80வது ஆண்டு விழாவில் நிகழ்த்தப்பட இருந்த பிரெஞ்சு விமானப்படையின் துல்லியமான ஏரோபாட்டிக்ஸ் பிரிவான Patrouille de Franceக்கான வார்ம் அப் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த விமானம் கண்காட்சி நிகழ்த்திக் கொண்டிருந்தபோது விபத்து ஏறப்ட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வடிவமைக்கப்பட்ட, ஃபூகா மாஜிஸ்டர் பல ஆண்டுகளாக பிரெஞ்சு ராணுவத்தால் ஒரு பயிற்சி ஜெட் மற்றும் ஏரோபாட்டிக் விமானமாகப் பயன்படுத்தப்பட்டது.
இதனால், "துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள்" காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். விமான விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த புதன்கிழமை, கிழக்கு பிரான்சில் இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் இரண்டு பிரெஞ்சு விமானிகள் இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
- முகமது யூனுஸ் தலைமையில் ஆகஸ்ட் 8-ந்தேதி இடைக்கால அரசு பதவி ஏற்றது.
- ஏற்கனவே 17 ஆலோசகர் இடம் பிடித்துள்ள நிலையில், தற்போது எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் இடைக்கால அரசு அமைக்கப்படும் என வங்கதேச ராணுவம் தெரிவித்திருந்தது.
அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை ராணுவம் அமைத்தது. இடைக்கால அரசில் 17 ஆலோசகர் இடம் பிடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத், முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார், முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான், லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முகமது யூனுஸ் மற்றும் 13 ஆலோசகர்கள் ஆகஸ்ட் 8-ந்தேதி பதிவி ஏற்றனர். ஆகஸ்ட் 11-ந்தேதி இரண்டு பேர் பதிவி ஏற்றனர். அதற்கு அடுத்தநாள் ஒருவர் பதவி ஏற்றார்.






