என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆண்டனி பிளிங்கன்"
- சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை அல்- உலா என்ற பாலைவன சோலையில் வைத்து சந்தித்துள்ளார்.
- போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா எந்த விதத்திலும் தொடர்புபடுத்தப்படக்கூடாது
பாலஸ்தீனம்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக நடத்தி வரும் தாக்குதலில் 41,000 துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 95,000 துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். போரை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்துவந்தாலும் அதற்கு எதிர்மாறாக தற்போது அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 800 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிளிங்கன் வருகை
இந்நிலையில் பாலஸ்தீன பிரச்சனை குறித்து தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று சவுதி அரேபியாவின் இளவரசர் கூறியுள்ளதாக அட்லான்ட்டிஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நிற்கும் நிலையில் சவுதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு கவனம் பெற்று வருகிறது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா சார்பில் அதன் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அல்- உலா
அவ்வாறு கடந்த ஜனவரி மாதம் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை அல்- உலா என்ற பாலைவன சோலையில் வைத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பாலஸ்தீனம் பிரச்சனை குறித்து பிளிங்கன் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, பாலஸ்தீன பிரச்சனை குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கவலையும் இல்லை, ஆனாலும் சவுதி மக்கள் அந்த பிரச்சனையை முக்கியமானதாகப் பார்க்கின்றனர்.
போர் நிறுத்தம்
சவுதி அரேபியா மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளதால் அவர்களை இந்த விவகாரம் ஈர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து பிளிங்கன் எழுப்பிய கேள்விக்கு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா எந்த விதத்திலும் தொடர்புபடுத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக அட்லான்ட்டிஸ் இதழ் கூறியுள்ளது. அட்லான்ட்டிஸ் செய்தி சற்று மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள சவுதி உயர் அதிகாரி ஒருவர், அதை முற்றிலும் மறுகாதது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றார்.
- உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலரை அமெரிக்கா நிதியாக வழங்குகிறது என்றார்.
கீவ்:
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
ஆனாலும் ரஷியாவுக்கு எதிராகப் போராடி வரும் உக்ரைன் அரசுக்கு அவ்வப்போது அமெரிக்கா நிதியுதவி செய்துவருகிறது.
இதற்கிடையே, இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என அதிபர் புதின் தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் பரிந்துரைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தத்திற்கு சம்மதம்.
- நாங்கள் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஹமாஸ் குற்றச்சாட்டு.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காமல் உள்ளது. காசா மக்களை பாதுகாப்பதற்கும், பிணைக்கைதிகளை மீட்பதற்கும் போர் நிறுத்தம் அவசியம் என இந்த மூன்று நாடுகள் கருதுகின்றன.
இதனால் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை தயார் செய்தது. இந்த பரிந்துரைகளை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற அவர், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவின் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
அதன்பின் மத்தியஸ்தராக விளங்கும் எகிப்து, கத்தார் நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர் அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளது. இதனால் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படாமல் உள்ளது.
இந்த நிலையில் 9-வது முறையாக பயணம் மேற்கொண்ட நிலையிலும் வெற்றிபெற முடியாமல் ஆண்டனி பிளிங்கன் நாடு திரும்பியுள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் "எங்களுடைய மெசேஜ் மிகவும் எளிமையானது. அது தெளிவானது. மிகவும் அவசரமானது. எங்களுக்கு தேவை போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போதுதான் இது எங்களுக்கு தேவை. நேரம் மிகவும் முக்கியமானது" என்றார்.
நாங்கள் ஏற்றுக் கொண்ட முந்தை பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளுக்கு அமெரிக்கா இணங்குகிறது என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஹமாஸின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில் அளிக்கவில்லை.
- ஏழு மாதங்களாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரகிறது.
- 150-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். சவுதி அரேபியா சென்றிருந்த அவர், இன்று இஸ்ரேல் சென்றார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை தொடங்கியதில் இருந்து ஏழாவது முறையாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள அவர் அங்குள்ள முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது பிணைக்கைதிகளை விடுவிக்கவும், ஏழு மாதங்களாக நடந்து வரும் போரை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும்.
பிணைக்கைதிகளை விடுவிக்கவும், போர்நிறுத்தத்தைப் கொண்டு வரவும், அதை இப்போதே நடைமுறை படுத்தவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது அடையப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம் ஹமாஸ்தான்.
பரிந்துரை மேசை மீது உள்ளது. தாமதம் இல்லை. சாக்குபோக்க இல்லை என நாங்கள் கூறுகிறோம். இதற்கான நேரம் இது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான உடன்படிக்கை உணவு, மருந்து பொருட்கள், குடிநீர் போன்றவை காசாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கும். இவ்வாறு பிளிங்கள் தெரிவித்துள்ளார்.
- இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் முயற்சி மேற்கொண்டன.
- ஹமாஸ் அமைப்பு உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்றார் அமெரிக்க மந்திரி.
வாஷிங்டன்:
இஸ்ரேல், ஹமாஸ் இடையே மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன.
ஆனால், ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது எனக்கூறி, இஸ்ரேல் ராணுவம் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன், இடைநிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் பொதுமக்களுக்கு தெளிவான பாதுகாப்பை ஏற்படுத்துவது மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்பதை தெளிவு படுத்தினேன். போர் நிறுத்தம் ஏன் முடிவுக்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஹமாசால் அது முடிவுக்கு வந்தது. ஹமாஸ் அமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். போர் நிறுத்தம் முடியும் முன்பே அது ஜெருசலேமில் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தி 3 பேரைக் கொன்றது. அமெரிக்கர்கள் உட்பட மற்றவர்களைக் காயப்படுத்தியது. போர் நிறுத்தம் முடிவதற்குள் அது ராக்கெட்டுகளை வீசத் தொடங்கியது. சில பிணைக்கைதிகளை விடுவிப்பதில் அது செய்த கடமைகளை மறுத்தது என தெரிவித்தார்.
- அமெரிக்கப் பத்திரிகையாளரை கைது செய்ததற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
- அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் 2-ம் ஆண்டாக தொடர்கிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ளன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை ரஷியா முன்வைத்துள்ளது.
இதற்கிடையே, போர்ச்சூழலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்துள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து உள்ளது.
ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்துள்ளார் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷியாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரஷியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ரஷிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்