என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர் சட்டம்"

    • 29 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • அனைத்து வகையான வேலைகளிலும் அனைத்துப் பெண்களும் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும்.

    2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    அமலுக்கு வந்த புதிய சட்டங்களின்படி, "அனைத்து தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயமாகும். முதலாளிகள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் சரியான நேரத்திலும் செலுத்துவது கட்டாயமாகும்.

    40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முதலாளிகள் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனைகளை வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

    சுரங்கத் தொழில் உட்பட அனைத்து வகையான வேலைகளிலும் அனைத்துப் பெண்களும் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும். எலக்ட்ராணிக்,ஆடியோவிஷுவல் மீடியா உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்களுக்கு ஓவர் டைம்க்கான இரட்டை ஊதியம் வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும். 

    பெண் தொழிலாளர்களுக்கு சம வாய்ப்புகள் மற்றும் சம ஊதியம் கிடைக்க வேண்டும். ஆபத்தான வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு 100% சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் ESIC பாதுகாப்பு மற்றும் சலுகைகள் விரிவுபடுத்தப்படும்.

    நிலையான கால அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முழு நேர, நிரந்தரத் தொழிலாளர்களைப் போலவே விடுப்பு, மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியில் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு பிறகு கிராஜ்யுட்டி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.  

    துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் ஊதியம் தொடர்பான தகராறுகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.

    ஸ்விக்கி, ரோமாடோ, பிளிங்கிட் போன்ற தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் முறையான வேலைவாய்ப்புத் துறையின் கீழ் வருகிறார்கள்.

    முதலாளிகள் இந்தத் தொழிலாளர்களுக்காக நல நிதிகளை அமைத்து, தங்கள் நிறுவனத்தின் வருவாயில் 1.2% ஐ இந்த நிதிக்கு பங்களிக்க வேண்டும். உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.      

    • தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமை பறிக்கப்படுகிறது.
    • தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை இது.

    2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. 

    இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. இவை முற்போக்கான சீர்திருத்தங்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது,நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. புதிய சட்டம் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு. புதிய தொழிலாளர் சட்டம் விக்சித் பாரதம் 2047 என்ற இலக்கை அடைய புதிய உத்வேகத்தை வழங்கும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம், பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் மரியாதையை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை உத்தரவாதம் அளிக்கும்" என்று தெரிவித்தார்.

    அதேநேரம், புதிய சட்டத்தின் மூலம் வணிகங்கள் இப்போது பீடி, சுருட்டு சுற்றுவது உள்ளிட்ட தொழிலாளர்களை 12 மணி நேர ஷிப்டுகளுக்கு வேலைக்கு அமர்த்தலாம். 

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நாடு முழுவதும் கட்டாயமாக அமலாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனையும் மனிதநேய உரிமைகளையும் நேரடியாக புறக்கணிக்கும் முடிவாகும். உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இந்தச் சட்டங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    8 மணி நேர வேலை நேரம் என்பது ஒரு சாதாரண விதிமுறை அல்ல; தலைமுறைகள் கடந்து நடந்த ரத்தத்தும் உயிர்தியாகங்களும் கொண்ட போராட்டங்களின் பயனாக உருவான வரலாற்றுச் சாதனை. தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமையாக இதை உறுதி செய்தவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். 'தொழிலாளர் ஒரு மனிதன்; இயந்திரம் அல்ல' என்ற அவரின் உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேரம் என்பது சட்டமாக கொண்டுவரப்பட்டது.

    அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு. மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும்.

    இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல; நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன. உழைப்பால் தேசத்தை வளர்க்கும் மக்களின் சுவாசத்தையும், துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது.

    இந்த நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

    உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின் செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு. இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கப்படும் வரை நாம் ஒருபோதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்." என்று தெரிவித்துள்ளார். 

    • 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.

    2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் இன்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன.

    இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

    நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. புதிய சட்டம் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு.

    புதிய தொழிலாளர் சட்டம் விக்சித் பாரதம் 2047 என்ற இலக்கை அடைய புதிய உத்வேகத்தை வழங்கும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம், பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் மரியாதையை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை உத்தரவாதம் அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில சமயம் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவலை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
    • இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    சிட்னி:

    தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு, சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களைக் கேட்பது உண்டு.

    சில சமயங்களில் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்றபிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலை இல்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை.

    இந்தக் குறையை போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

    அதாவது, வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது.

    இந்த நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேட்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத்திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.

    அலுவலக நேரத்திற்கு பிறகு தொழிலாளர்களை தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம். நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் ஆஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் என பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.

    இந்நிலையில், வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமை சட்டம் வரும் 26-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    ×